மொட்டைமாடி சந்திப்பு : ஒரு சிறிய குறிப்பு

மொட்டைமாடி சந்திப்பு பற்றி செல்வகுமார் வாசகர் வட்டத்தில் எழுதியது:

நேற்று மொட்டைமாடி சந்திப்பில் (சாரு, அராத்து, அன்பு, கருப்பு மற்றும் நான்) உருப்படியாக நிறைய பேசினோம்.

விவாதத்தில் செவ்விலக்கியம் vs transgressive எழுத்துக்கான வேறுபாடுகள், அதுவும் இந்தியாவில் நேரும் துன்பம், அதன் எதிர்காலம் குறித்தும் சாரு பெங்களூரில் வகுப்பெடுத்ததை சுருக்கமாக அராத்து சொன்னார்.

பிறகு எதிர்பாராத விதமாக இறைநம்பிக்கை குறித்து பேசதொடங்கினோம். சாய்பாபா, வேளாங்கண்ணி மாதா, பண்ரூட்டி அருகில் உள்ள (நாயுடு கிராம) சித்தர், திருப்பதி, அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன் என்று அலசி ஆராய்ந்ததில்…. அராத்து அதிதீவிர பக்திமான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது

அதிலும் ஒரு அராஜகம், பணகஷ்டம் தீர்க்க ஒரு சாமி, தப்பு செய்தால் மன்னிக்க ஒரு சாமி, தப்பு செய்ய தைரியம் கொடுக்க ஒரு சாமி, என்று வேறு வேறு சாமிகள். பணகஷ்டம் தீர்க்கும் சாமியிடம் போய் உடல் ஆரோக்கியம் பிரச்சனைகளை சொன்னால் பலிக்காது என்றார்.

சாரு திருப்பதி பெருமாள் & ஐயப்பன் குறித்து அவரது அனுபவங்களை சொன்னார். கடவுளிடம் அவர் இருக்கிறார் என்று நிரூபணம் கேட்கிறோம், அவர் நிரூபணம் கொடுத்துவிட்டால் பிறகு அவரை பரிட்ஷிப்பதை நிறுத்திவிட்டு நம்பவேண்டும் என்றார். அன்பு சாமி நம்பிக்கை உள்ளவர், ஆனால், சாமிதானே என்ற அலட்சியம் காரணமாக வேண்டுதல் எதையும் செய்வதில்லை என்று சொல்லிகொண்டிருக்கும் போதே, ‘மாதா’ சாரு ரூபத்தில் கெட்டவார்த்தை சொல்லி அவரை கண்டிக்கத் தொடங்கினாள்.

நான் எதனாலோ உந்தப்பட்டு இறைநம்பிக்கை குறித்த எதிர் விவாதத்தில் இறங்கினேன். கொஞ்ச நேரத்தில் ‘சாமி கண்ணை குத்தினால்’ என்ற பயம் வந்துவிட்டது. உடனடியாக சபரிமலை வருவதாக வேண்டிக்கொண்டு நிம்மதியானேன்

நேற்றைக்கு முதல்நாள், குழந்தைக்கு கம்பெனி கொடுக்க வேண்டி தூங்கவில்லை. அப்படியும் களைப்பின்றி, நீண்ட நாள் கழித்து அருமையான இரவாக அமைந்தது. அதிகாலை நான்கு மணிக்கு அய்யய்யோ விடிந்துவிட்டதா என்று அலறிக்கொண்டே தூங்கப்போனேன். கனவில் இமயமலை பயணம், எக்சைல்-2, புருஷ ஸுக்தம் என்று யாரோ பேசிக்கொண்டே இருந்தார்கள்.

LikeLike ·  · Share

Comments are closed.