தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸ்மாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:
கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் இந்த சுலோகத்தை நான் வாசித்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஏனென்றால் இதில் ஒரு வார்த்தை வருகிறது. அஸக்த. அஸக்த என்றால் பற்று இல்லாமல். ”பற்று இல்லாமல் நீ ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்து கொண்டிரு. ஏனென்றால் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்யும் மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.” எனக்குப் பரமாத்மாவை அடையும் விருப்பம் எல்லாம் இல்லை. பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டும். அதுவே பரமாத்மாவை அடைந்தது மாதிரிதான்.
எதற்கு இதைச் சொன்னேன் என்றால், திடீர் திடீரென்று அவந்திகா துலாபாரம் சாரதா கணக்காகவோ அல்லது கருமை நிறக் கண்ணா விஜயகுமாரியாகவோ மாறி, “சாரு, இப்டி ராப்பகலா உக்காந்து எழுதுறியே, என்னா பிரயோஜனம்?” என்பாள் துயரம் ததும்பும் குரலில். நான் ஒரு கர்ம யோகி… எனக்கு எந்தப் பிரயோஜனமும் தேவையில்லை. எழுதுவது என் தொழில், என் கடமை. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்பேன். கிண்டல் அல்ல. பலமுறை இப்படி நடந்துள்ளது. இந்தத் தெளிவுக்குக் காரணம்தான் மேலே குறிப்பிட்ட கீதையின் சுலோகம். இப்படியாகத்தான் இந்த லத்தீன் அமெரிக்க சினிமா என்ற தொடரையும் எழுதி வருகிறேன்.
http://pesaamoli.com/Mag_20_LAC_Charu_1.php
http://pesaamoli.com/
http://pesaamoli.com/Mag_22_LAC_Charu_3.php
http://pesaamoli.com/Mag_23_
http://pesaamoli.com/Mag_24_
http://pesaamoli.com/Mag_26_LAC_Charu_6.php