அனைத்து பேருந்து நிலைய கழிப்பறைகள் , காமக் காட்சி வலைதளங்களின் விளம்பரங்கள் , தொலைக்காட்சி மருத்துவ நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் திரும்ப திரும்ப ஆணின் பாலியல் உறுப்பை பெரிதாக்குவது குறித்த , அதற்கான மருத்துவம் குறித்த விளம்பரங்களை பார்த்திருக்கலாம். அமெரிக்காவின் நாங்கள் சென்று அனைத்து மாநிலங்களிலும், சொல்லிவைத்தாற் போல் இரவு நேரங்களில் இந்த விளம்பரங்கள் தான் பெரும்பாலான சேனல்களை ஆக்கிரமித்திருந்தன. இது உலக ஆண்களின் பொதுவான பிரச்சனை . இவை “வயாகரா” வகையறா மருந்துகள் இல்லை. உடல் அமைப்பின் ஒரு அங்கத்தையே மருந்துகள் மூலம் மாற்ற முடியும் என்று நம்ப வைத்து ஏமாற்றுகிற வேலை .
என்னுடைய நண்பர் ஒருவனுக்கு, அவனுடை நண்பன் புதிய ஆலோசனை சொல்லி இருக்கிறான். சேலம் சிவராஜ் வகையறா ஆட்கள் எல்லாம் மோசடி பேர்வழிகள் என்றும் , இந்தப் பிரச்சனைக்கு சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை நம்ப வேண்டாம் என்றும் சொல்லி, ஒரு கவர்ச்சியான ஆண்-லைனில் விற்கப்படும் பாலியல் மருந்துகளை பரிந்துரைத்திருக்கிறான். 18,000 ரூபாய் கட்டி , மருந்துகள் சாப்பிட்டு, தலைகுனிந்தவன் தான். நிமிரவேயில்லை . பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னுடைய நண்பன் ஒரு துறையில் பிஹெச்டி முடித்தவன்.
மருத்துவ ரீதியாக சுமார் இருபத்தைந்து வயதிற்கு பிறகு உடல் உறுப்புகளின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போகும் என்கிறார்கள் . என்னுடைய கைகள் வளரவில்லை ,கால்கள் நீளமாக இல்லை , அதை வளர வைக்க மருந்து உண்டா என்று இதுவரை யாரும் மருத்துவரை அணுகியதில்லை . ஏனெனில் அவைகளின் வளர்ச்சி குறித்த தெளிவு நமக்கு உண்டு . ஆனால் இப்படிப் பாலியல் விளம்பரங்களைப் பார்த்து ,சமீப நாட்களில் தொடர்ந்து ஏமாறுவது படிப்பறிவில்லாத பாமரர்கள் இல்லை. மெத்தப் படித்த இணையப் புரட்சியாளர்கள்தான் . ஆண் உறுப்பின் நீளம் என்பது அதன் ரத்த ஓட்டத்தோடு தொடர்புடையது. சிகரெட்டை போலவே இந்த மருந்துகள் எச்சரிக்கை வாசகங்களோடும் பக்க விளைவுகளை முன்னிறுத்தியும் விற்கப்படுவதால் , சட்ட ரீதியாக இவற்றை அணுகுவது கடினம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
சேலம் சிவராஜ் வகையறாவை கலாய்த்துக்கொண்டே அவரைவிட இது சிறந்ததென நம்பி , ஏமாறுவது தற்போதைய புதிய பொழுதுபோக்கு !
நாம் இதை ஏற்கனவே தேர்தலிலேயே செய்திருக்கிறோம் என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் கருத்து !
(முகநூலில் இந்த லிங்கா கதையைச் சொல்லியிருப்பவர் சத்தியமாக நான் இல்லை; நெல்சன் சேவியர்)