மனுஷ்ய புத்திரன் தன் முகநூலில் நேற்றைய சம்பவம் குறித்து எழுதியது:
இன்று புத்தகக் கண்காட்சியில் சாருவுக்கு நடந்தது என்ன?
…………………………..
இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போலநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன்விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்துஎழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றானகருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்றநாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்றுகூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்கஎனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலுஅவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால்செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேசஅனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தைபொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவைமிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர்வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர்வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்குவெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும்பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில்அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.
எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காகஅவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம்வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும்உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்றுசொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம்இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்குஎதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?
முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்தஅவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமேகோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.
கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?