இன்று நடைப் பயிற்சிக்குப் போகும் போது கூட முன்னும் பின்னும் பார்த்து பயந்து கொண்டே தான் போனேன். உயிருக்கு பயமில்லை. ஆனால் கண்ட ரவுடிகளிடமும் அடி வாங்கச் சாகக் கூடாது அல்லவா? நேற்று நான் மட்டும் வீரமாக எங்கே என் சங்கை அறுடா என்று எழுந்து நின்றிருந்தேன் என்றால் சங்கு அறுபட்டிருக்கும். என் சங்கை அறுக்க வந்த ஆட்களின் எடை ஒவ்வொருவரும் 120 கிலோ இருக்கும். நேற்று நான் பதுங்கினேன். அந்த நேரத்தில் பதுங்குவது மட்டுமே நான் செய்திருக்கக் கூடியது. வாசகர் வட்ட நண்பர்கள் வழக்கம் போல் வரவில்லை. நன்றி. ஹார்ட் அட்டாக் என்றதும் முப்பது பேர் ராப்பகலாக வந்து கவனித்துக் கொண்டார்கள். நான் ஏற்கனவே பிரச்சினை நடக்கும் என்று எச்சரித்தும் ஒருத்தர் கூட வராதது ஆச்சரியம் அளிக்கிறது. கருப்புசாமியும் முத்துக்கிருஷ்ணனும் மட்டுமே வந்திருந்தனர்.எனக்கு கருப்புவும் மனுஷ்யபுத்திரனும் பெரும் அரண்களாக இருந்தனர். ஆனாலும் ஐந்தாறு மாமிச மலைகள் வரும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அடியாள் துணைக்கு அழைக்கவில்லை. தனியாள் என்றால் எவனுக்குமே வீரம் வரும். வீட்டுக்கு ஆட்டோ பிடிக்க ரெண்டு போலீஸ், கருப்பசாமி ஆகிய மூவர் போதுமா? கருப்பசாமி வீடு வரை ஆட்டோவில் வந்தார். கருப்புசாமியும் முத்துக்கிருஷ்ணனும் மட்டுமே வந்திருந்தனர்.
மனுஷ்ய புத்திரன் வாசகர் வட்டத்தை ராணுவம் என்று அழைத்தார். இல்லை, அது ஒரு ஹிப்பி கூடம் என்பது என் கருத்து.
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 5ஆவது பக்கத்தில் என் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி விரிவாக வந்துள்ளது.