முட்டாளின் கடைசிச் சந்தேகம்!

இன்னும் ஒரு விஷயத்தை விட்டு விட்டேன்.  ஒரு அரசியல்வாதி  பொதுக்கூட்டத்தில் கையை ஓங்கி அடிக்கப் பார்ப்பார்.  சமயங்களில் அடித்தே விடுவார்.  பத்திரிகையாளர் கூட்டத்திலும் நாக்கைத் துருத்துவார், மிரட்டுவார்.  இப்படி இப்படி.  அவரைப் பற்றி நான் இதுவரை ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறேனா?  ஏனென்றால், எங்கள் ஊரில் சொல்வார்கள்… மது அருந்தியவரும் குழந்தையும் ஒன்று என்று.  அது போகட்டும்.  இப்போது என் சந்தேகம் எல்லாம் அந்த அரசியல்வாதியும் இளையராஜாவும் ஒன்றா? அவர் செய்வதை இவர் செய்யலாமா?