ஒரு பழைய புகைப்படம்

புகைப்படத்தில் இருப்பது ஆர். சிவகுமார், அகிலன், கவிஞர் சுகுமாரன்.  பிரம்மராஜன் மீட்சி பத்திரிகையை ஊட்டியிலிருந்து நடத்திக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்.  முகநூலில் அகிலனின் பக்கத்தில் பார்த்தேன்.  பழைய நினைவுகள் மனதில் கிளர்ந்தன.  நான் எழுத களம் அமைத்துக் கொடுத்த பத்திரிகை மீட்சி.  என் நான்லீனியர் சிறுகதைகளை நல்ல முறையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டவர் பிரம்மராஜன்.  ஆர். சிவகுமார் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  முப்பது ஆண்டுகள் ஆகியும் மூவரின் முக அமைப்பிலும் துளி மாற்றம் கூட இல்லை.