உன்னதத் தருணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் இன்று போன் செய்து பேசினார்.  என்ன பேசினார் என்று செப்டம்பர் மாதம் எழுதுவேன்.  அதுதான் சரியான நேரமாக இருக்கும்.  ஆனால் அவர் பேசி முடித்ததும் மிகுந்த உவகையும் சந்தோஷமும் ஏற்பட்டது.  என் மனம் எப்போதுமே ஒரு ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கும்.   என்னோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு அது தெரியும்.  மற்றவர்கள் – அதிலும் குறிப்பாக பெண்கள் குறிப்பிடும் mood swing என்பதே என்னிடம் இல்லை.  இருந்தாலும் இன்று எஸ்.ரா. பேசிய போது மனம் எல்லையற்ற உற்சாகத்தில் மேலே பறந்தது.  ஏனென்றால், மந்தைவெளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேநீர் கூட குடிக்கக் காசு இல்லாமல் நான் வாழ்ந்த போது என் அறைக்கு வாரம் ஒருமுறையேனும் வந்து கொண்டிருந்த நண்பர் அவர்.  (அவர் கையிலும் காசு இருக்காது!) இன்றும் அந்த நட்பு தொடர்கிறது.

எஸ்.ரா. இந்தக் கலைஞனை கேட்டிருக்கலாம்.  நானும் பலமுறை சாரு ஆன்லைனில் லிங்க் கொடுத்திருக்கிறேன்.  Wim Mertens ஒரு அற்புதக் கலைஞன்.

my dearest ramakrishnan, நீங்கள் பேசிய போது விம் மெர்ட்டென்ஸ் என் செவிகளில் இசைத்துக் கொண்டிருந்தான்.  எனக்காகவும் ஒருமுறை கேளுங்கள்…

http://www.youtube.com/watch?v=_2xa46ytiSs

 

Comments are closed.