The Story of My Assassins…

Mario Vargas Llosa –வுக்கு நோபல் கிடைத்த போது ஏதோ எனக்கே கிடைத்து விட்டது போல் சுமார் நூறு நண்பர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பினார்கள்.  ஏனென்றால், கடந்த 30 ஆண்டுகளாக நான் யோசா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  He does not belong to my school of thought.  நான் எந்தப்  பள்ளியைச் சேர்ந்தவனோ அதற்கு உரிய எழுத்தாளர்களான William Burroughs, Italo Calvino, Charles Bukowski, Kathy Acker, Georges Bataille, George Perec போன்றவர்கள் அனைவரும் மிகவும் சலிப்பூட்டக்கூடிய எழுத்தாளர்கள்.  Transgressive writing-இல் சுவாரசியமாக எழுதக் கூடிய ஒன்றிரண்டு பேர்களில் அடியேனும் ஒருவர்.  ஆனால் ஒன்றிரண்டு பேர் தான்.  அதற்கு மேல் இல்லை.  ஆனால் conventional writing-இல் இன்றைய இலக்கிய உலகில் என்னை ஆகக் கவர்ந்தவர் Mario Vargas Llosa.  அவரைப் போல் சுவாரசியமாகவும், அதே சமயத்தில் காவியத் தன்மையுடனும் கதை சொல்லக் கூடியவர்கள் ரொம்பக் கம்மி என்றே சொல்லலாம்.  தேடினால் Abdur Rahman Munif என்ற சவூதி அரேபிய எழுத்தாளர் கிடைப்பார்.  இவரைப் படித்த போது 20 ஆம் நூற்றாண்டின் தாஸ்தாவ்ஸ்கியோ என்று ஆச்சரியப்பட்டேன்.  பிறகுதான் விமர்சகர்களும் அவரை தாஸ்தாவ்ஸ்கியோடு ஒப்பிட்டு எழுதியிருந்ததைப் பார்த்தேன். 

இந்த நிலையில் யோசா அளவுக்குக் கதை சொல்லக் கூடியவர்கள் இந்தியாவில் (ஆங்கிலத்தில்) யாருமே இல்லை என்றே நினைத்திருந்தேன்.  இப்போது தருண் தேஜ்பாலின் The story of my assassins படித்த போது யோசா அளவுக்கு ஒரு இந்திய எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்று தோன்றியது. 

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைப்பதற்கு முன்னாலேயே அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று எழுதினேன்.  உயிர்மையில்.  ஓரான் பாமுக்குக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்னாலேயே அவருக்கு நோபல் கிடைக்கும் என்று எழுதினேன். அமிர்தா பத்திரிகையில். எழுதி அடுத்த மாதமே அவருக்கு நோபல் கிடைத்தது. எல்லா பத்திரிகைகளும் திமுக ஜெயிக்கும் என்று எழுதிக் கொண்டிருந்த போது திமுக 30 இடங்களைப் பிடிப்பதே கடினம் என்று எழுதினேன்.  துக்ளக் சாட்சி. இதெல்லாம் வெறும் யூகம் அல்ல; assessment.  Cry for me, brother கேட்டதுமே ரஹ்மானுக்கு ஆஸ்கர் என்று எனக்குத் தெரிந்து விட்டது.  Dublin Impac award ஓரான் பாமுக்குக்குக் கிடைத்ததுமே நோபல் கிடைத்து விடும் என்று தெரிந்து விட்டது.  அதேபோல் ஆட்டோக்காரர்களிடம் பேசிய போது திமுகவின் படுதோல்வி தெரிந்து விட்டது.  அவ்வளவுதான். 

இப்போது சொல்கிறேன்.  விரைவில் தருண் தேஜ்பாலுக்கு நோபல் கிடைக்கும்.  அதற்குப் பிறகுதான் தருணின் பத்திரிகையாளர் அடையாளம் நீங்கும் என்று நினைக்கிறேன்.       

 

      

Comments are closed.