ஒரு அற்புதத் தருணம் பற்றி முகநூலில் ஜெகா எழுதியிருக்கிறார்:
2014 டிசம்பர் சமயத்தில் ‘இந்தப்பாடல் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக திரையிட வேண்டும். இதுதான் நான், இதுதான் எக்ஸைல். வட்டத்து நண்பர்கள் யாராவது இதை சேமித்து அன்று திரையிட முடியுமா’ என்று கேட்டிருந்தார் சாரு. வளமை போலவே ஃபேஸ்புக்கில் நிறையப்பேர் அதைப் பகடி செய்திருந்தார்கள்.
ப்ரொஜக்டர், ஸ்க்ரீன் சகிதம் எல்லாம் தயாராக இருந்தது.
எஸ்ரா மனுஷ் என எல்லோரும் இருக்க சாரு தருண் அருகில் இருந்தார். அவர் கேட்டுக்கொண்டது போலவே விழா ஆரம்பிக்கும் முன் இந்தப் பாடல் திரையிடபட்டது. நைஸாக நண்பர்கள் எல்லோரிடமும் ஜகா வாங்கி வடக்கு வாயிலின் ஓரத்தில் நின்று இந்தப் பாடலைக் கேட்டவாறே சாரு, தருண் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சொல்ல எவ்வளவோ தோன்றுகிறது, இதை ஓடவிட்டதும் அனைத்தையும் கழட்டி விட்டுக் கரைந்துப்புட்டேன்
மெதுவா என்றாவது ஒருநாள் பேசுவோம்