கமல் காயத்ரியிடம் வருத்தப்பட்டார். நம்மிடமும் தான். நானும் (கமல்) நீங்களும் ஒரே சாதி என்பதால்தான் உங்கள் மீது நான் கனிவாக இருந்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். அதுதான் மிகப் பெரிய கெட்ட வார்த்தை. கமல் காயத்ரியிடம் ஏன் இத்தனை நாள் இவ்வளவு கனிவு காட்டினார் என்று மக்களுக்குப் புரியவில்லை. எனக்கும் தான். வேறு காரணமே தெரியாத போது இதை எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் – அதாவது சாதி பற்றி – நான் கமலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் தன்னை கமல் கவிஞர் என்று சொல்லிக் கொண்டதற்காக தமிழ்க் கவிகள் அத்தனை பேரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.