மயானக் கொள்ளை (நாடகம்)

                                    

                                         அங்கம் : ஒன்று

                                          காட்சி : ஒன்று

மாலை ஐந்து மணி.

கல்பனா, விஜி, ஒரு இளைஞன்.

சேரியில் இரண்டு பேர் மட்டுமே நடக்கக் கூடிய அளவுக்குக் குறுகலான ஒரு தெரு.  நாய்களின் குரைப்பு மற்றும் பூனைகளின் சப்தம்.    தெருவுக்கு நடுவே சாக்கடை.  ஒரு ஓரத்தில் தண்ணீர் ட்ரம்.  கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள்.  கொடியில் பெண்களின் உள்பாவாடை மற்றும் நைட்டிகள் காய்கின்றன.  சுடிதார் அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க கல்பனா ஒரு குடிசையின் வாசலில் தயங்கி நிற்கிறாள்.  அவள் அருகே அந்தக் குப்பத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க அழுக்கான தோற்றம் கொண்ட இளைஞன். குடிசையின் கதவு மூடியிருக்கிறது.  இளைஞன் குடிசையின் கதவைத் தட்டி “விஜி அக்கா, ஒன்னப் பாக்க ஒரு அக்கா வந்திருக்கு” என்று குரல் கொடுக்கிறான்.

கதவு திறக்கப்பட்டு விஜி என்ற திருநங்கை எட்டிப் பார்க்கிறாள்.  கல்பனா வயதுதான் இருக்கும்.  மஞ்சள் பூசின முகத்தில் கடும் தூக்கக்கலக்கம். 

கல்பனா: ஸாரிங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் வேணா அப்றம் வரேனே…

விஜி: (கட்டைக் குரலில்) பரவால்ல வாங்க வாங்க.

பத்து அடிக்குப் பத்து அடி அறை.  ஒரு மூலையில் சாமி படங்கள்.  மற்றொரு மூலையில் ஒரு பம்ப் ஸ்டவ். 

கல்பனா: என் பேர் கல்பனா.  ஒரு பத்திரிகையில வேல பண்றேன்.  இப்போ திருநங்கைகளைப் பத்தியும் அவங்க கலந்துக்கிற மயானக் கொள்ளை பத்தியும் ஒரு ஆர்ட்டிகிள் பண்றேன்.  அது சம்பந்தமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.

விஜி: தாராளமா பேசலாம்மா. ஆனா இப்படி நிறைய பேரு பேசணும் பேசணும்னு வர்றாங்க.  என்னத்தைப் பேசறது?  எவ்வளவு நாளைக்குத்தான் பேசிக்கிட்டே இருக்கிறது?  பேசுறதுனால என்ன ஆவப் போவுது?

கல்பனா:  இல்லீங்க விஜி… நான் மத்தவங்கள மாதிரி சென்சேஷனுக்காக எழுதுறவ இல்ல.  ஏற்கனவே ஒரு தடவ கல்வராயன் மலை ஆதிவாசி மக்களைப் பத்தி எழுதி அவங்களோட பிரச்சினையை வெளீல கொண்டு வந்திருக்கேன்.  அப்புறம் அவங்க பிரச்சினை சரியாவும் ஆச்சு…

விஜி: எனக்கு ஆனா எந்தப் பிரச்சினையும் இல்லையேம்மா கண்ணு…  மத்த பொண்ணுங்க மாதிரி புருசன் கொடுமை, மாமியார் புடுங்கல், சொந்தக் காரங்க டார்ச்சர்னு எதுவும் இல்லியே?  ஃபேமிலில்ல இருக்கிற பொண்ணுங்களை விட நானோ என்னை மாதிரி திருநங்கைங்களோ கஷ்டத்தில இல்லேன்னுதான் நினைக்கிறேன்.  டீவில எதோ ஒரு நியூஸ் வந்துதுன்னு எல்லாம் பரபரப்பா பேசிக்கிறாங்களே…  பார்த்திருப்பே நீயும்… என் கிட்ட அந்தப் பொட்டி கிடையாது.  கவர்மெண்டு குடுத்த பொட்டியையும் நான் வச்சுக்கல… அது எதுக்கு அந்தப் பொட்டி?  எப்பப் பாத்தாலும் ஆம்பளையும் பொம்பளையும் தேச்சுத் தேச்சுக்கிட்டு ஒரு டான்ஸ், ஒரு பாட்டு… அதெல்லாம் நமக்குப் புடிக்காது. (என்று சொல்லி விட்டு வீட்டு மூலையில் உள்ள அகல்விளக்கு, சாமி படம் போன்ற விஷயங்களை கண்ணால் காண்பிக்கிறாள்).  

கல்பனா: எங்க வீட்டுலயும் டீவி இல்ல.  நான் இன்னமும் பேப்பர்ல தான் நியூஸ் படிக்கிறேன்.

விஜி: ஆகா சூப்பர்.  நீ நம்ம ஆளு.  சரி, விஷயத்துக்கு வரேன், கேளு.  ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு புருசன் பொஞ்சாதி. ரெண்டு கொழந்தைங்க…   புருசனுக்கு அந்த அபார்ட்மெண்ட்டுலயே வேறோரு பொண்ணோட கனெக்‌ஷன்.  அவளும் கல்யாணம் ஆனவ.  இந்த விஷயம் இந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சு போயி புருசனைக் கண்டிச்சிருக்கா.  அவன் கேக்கல.  ஒருநாள் “நானே அவ கிட்ட கேக்கப் போறேன்”ன்னு கிளம்பிப் போயிருக்கா. அதுக்குள்ள இந்தப் பய – அதான் அந்தப் புருசன் அவனோட லவ்வருக்கு மெஸேஜ் குடுத்துருக்கான்.  இன்ன மாதிரி என் பொண்டாட்டி உன்னைத் தேடிக்கிட்டு வரா’ன்னு.  ஆனா இவ கிளம்பிப் போனாளே தவிர கேக்க தைரியம் இல்லாம வீட்டுக்கே திரும்பி வந்துட்டா…  அதுக்குள்ள இந்தப் பய ஒரு பிளானைப் போட்டு அவளை ஒம்போதாவது மாடீலேர்ந்து தள்ளி வுட்டுட்டான். இந்த விஷயம் கொலைன்னே தெரிஞ்சிருக்காது.  அவன் வீட்டு பால்கனிலேர்ந்து அடுத்த வூட்டு பால்கனீல ஒரு பொம்பள இதப் பார்த்துருச்சு.  அவ பார்த்தத இவன் பாக்கல.  அதோட இன்னோரு விஷயம், அந்தப் பொண்ணு சாகறதுக்கு முன்னாடி புருசன் தன்னைக் கொல்லப் போறான்னு தெரிஞ்சுக்கிட்டு கத்திக் கதறிருக்கா.  என் புள்ளைங்களுக்காகவாவது என்னை விட்ருன்னு.  இப்போ என்னா ஆச்சு? அவ செத்துட்டா.  இவன் ஜெயிலுக்குப் போய்ட்டான்.  ரெண்டு கொழந்தையும் அனாதை. யோசிச்சுப் பாரு… அந்தக் கொழந்தைங்களுக்கு நேத்து வரைக்கும் ஒரு அம்மா, அப்பா, வீடு, சொகுசு எல்லாமே இருந்துச்சு… ஒரு நிமிஷத்துல… ஒரே நிமிஷத்துல (விரல்களால் சொடக்குப் போட்டு) எல்லாம் காலி. அனாதைங்களாப் போச்சு.  ஒரே நிமிஷம். இப்டி ஒன்னா ரெண்டா… தெனம் தெனம் இதே கதைதானே?

கல்பனா:  ஆமா, நானும் படிச்சேன் பேப்பர்ல…

விஜி: ம்ஹும்.  விஷயம் அது இல்ல.  எல்லா குடும்பமும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கு… (கண்ணடிக்கிறாள்) என்னா… கொலை வரைக்கும் போறதில்ல… அவ்ளோதான்.  சரி, நீ சொல்லு பொண்ணு.  சந்தோஷமா இருக்குறேன்னு சொல்ற ஒரு பொம்பளையைச் சொல்லு… 

சரி, அத்த வுடு.  இப்போ இந்தத் திருநங்கைங்களைப் பத்தி என் கிட்ட பேசி உனக்கு இன்னா ஆவப் போவுது?

கல்பனா: இல்ல. திருநங்கைங்களைப் பத்தி நான் எழுதல.  நான் எழுதப் போறது மயானக் கொள்ளையைப் பத்தி.  அதுல கலந்துக்குற திருநங்கைங்களைப் பத்தி.  அதனாலதான் உங்கள்ட்ட வந்தேன்.  சொல்லணும்னா சொல்லுங்க…

விஜி: ம்… சரி… கேளு… 

எனக்கு பன்னண்டு வயசுல பெண்ணோட இயல்புங்க வர்ற மாதிரி தெரிஞ்சுது.  எங்க அம்மாவோட பாவாடையை, நைட்டியை எல்லாம் எடுத்துப் போட்டுப் பாக்க ஆரம்பிச்சேன். முகம் பூரா பவுடர் அடிச்சு லிப்ஸ்டிக் அடிச்சுக்குவேன்.  அம்மா பாத்துதுன்னா அடி பின்னி எடுத்துரும்.  ”ஏன்டா இப்டி ஆம்பளைப் பையனாப் பொறந்து பொட்டையா நடந்துக்குறே?  ஓன் அண்ணனையும் நான் தானே பெத்தேன்? எங்கியாவது ஓடித் தொலைடா”ன்னு சொல்லி அடிஅடின்னு அடிக்கும்.  நான் மத்த பசங்க மாதிரி இல்லேன்னு தெரிய ஆரம்பிச்சதுலேர்ந்து எனக்குக் கிடைச்சது அடியும் ஒதையும்தான்.  ஸ்கூல்லயும் ஒரே கிண்டலும் கேலியும்தான்.  பசங்கள்ளாம் சேந்து வுஸ் வுஸ்ஸும்பானுங்க, ஒரு நம்பரால கூப்புடுவானுங்க… வூட்டுக்குப் போனா அடி… ஒருநாள் வீட்டு வாசல்ல வச்சு செருப்பாலயே அடிச்சு என்னைத் துரத்துனாங்க அம்மாவும் அப்பாவும். மெட்றாஸ்லயாவது யாராவது என்ன மாதிரி திருநங்கைங்ககிட்ட போய் காப்பாத்துங்கன்னு கேக்கலாம்.  நான் இருந்த தஞ்சாவூர்ல… பதிமூணு வயசுல… நான் யாரு கிட்ட போறது?  யாரு காப்பாத்துவா?  குப்பத்தொட்டீல எதாவது கெடைக்கும்.  யாராவது சாப்புட்டுட்டுப் போட்ட பிரியாணி பாக்கெட்டு.  அப்படி இப்படி.  ஆனா கொடலப் புடுங்குற மாதிரி நாறும்.  என்னா பண்றது.  பசி வந்தாப் பத்தும் பறந்துரும்னு சொல்வாங்கள்ள?  வூட்ட வுட்டு வந்தவொண்ணையே நான் முடி வெட்டிக்கறத நிறுத்திட்டேன்.  பொண்ணுங்க மாதிரி நீளமா முடிய வளத்துட்டேன்.  ட்ரவுசர் சட்டை போட்டுருந்தாலும் பாக்க பொண்ணு மாதிரிதான் இருந்தேனா?  அப்போ ஒருநாளு நடு ராத்திரி.  பஸ் ஸ்டாண்டுல ஒரு ஓரமாப் படுத்துருந்தேன்.  பதினாலு வயசு இருக்கும். வூட்ட வுட்டு வந்து ஒரு வருசம் ஆயிருக்கும்.  வூட்ல உள்ளவங்களும் தேடல,  நானும் அந்தப் பக்கம் போகல. அப்போ போலீஸ்கார் ஒருத்தர் என்ன எழுப்பி வண்டீல ஏர்றான்னு சொல்லி அவ்ரு பைக்ல ஏத்திக்கிட்டுப் போயி எங்கியோ ஒரு தோப்பு மாரி எடத்துல வச்சு என்னோட செக்ஸ் பண்ண ஆரம்பிச்சாரு.  சூத்தாமட்ட கிழிஞ்சு ரத்தமாக் கொட்ட ஆரம்பிச்சிருச்சு.  ஐயோ அம்மான்னு அலறுனேன்.  என்ன அலறுனாலும் கேக்க யாரு இருக்கா?  கொல பண்ணிப் போட்டாக் கூட அங்கே ஈ காக்காய்க்குத் தெரியாது.  அப்டி ஒரு காடு மாரி எடம்.    

அதுக்கப்புறம் தெனம் வர ஆரம்பிச்சான் அந்தப் போலீஸ்காரன்.  அப்டியே என்ன பைக்ல தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயி ஒடம்பை ரெண்டாக் கிழிச்சு எடுத்துடுவான். எல்லாம் முடிஞ்சு மறுபடியும் என்னத் தூக்கினு போன எடத்துலயே கொண்ணாந்து போட்ருவான். மறுநாள் ஆயி போம்போது சூத்துலேர்ந்து ரத்தமாக் கொட்டும்.  அவனுக்குப் பயந்து எடத்த மாத்தலாம்னா அதும் முடியாது.  ஏன்னா பஸ் ஸ்டாண்ட்ல பொறுக்கினு இருந்தாத்தான் எதோ அர வயத்துக்காச்சும் கெடைக்கும்.  யாராச்சும் சாப்பிட்டுப் போட்ட வாழப்பழத் தோலு, குப்பைல கெடைக்கிற பிஸ்கட்டுப் பாக்கெட்டு, அப்பப்போ கெடைக்கிற பிச்சக்காசுன்னு… 

செக்ஸ் பண்றதோட இல்ல அந்தப் போலீஸ்காரன்.  கழுத்து, காது, தோளுன்னு எல்லா எடத்துலயும் கடிச்சு வுட்ருவான்.  ஒடம்பு பூரா நெருப்ப அள்ளிப் போட்டுக்கிட்டா மாரி நாளு பூரா திகுதிகுன்னு எரிஞ்சுக்கிட்டே கெடக்கும்.  தீனிய கூடத் தேடிப் போ முடியாது.  பட்டினிலயும் எரிச்சல்லயும் பொணம் மாதிரி கெடப்பேன்.  ஒருநாள் ராத்திரி அந்தப் போலீஸ்காரனுக்கு என்னா ஆச்சோ தெரில… என் முதுகு பூரா வெரல் நகத்தால கிழிச்சுட்டான். மறுநாள் என் ஒடம்பெல்லாம் காஞ்சுது.  ஜன்னி வந்தாப்ல ஜொரம்.  மொணகிக்கிட்டே படுத்துக் கெடக்கேன்.  என்னென்னமோ கண்ணுக்கு மின்னால ஓடுது.  ஒரே பஸ்ஸு சத்தம்.  எல்லா மனுசனும் ரோட்ல போற நாயையெல்லாம் புடுச்சுக் கடிச்சிக் கடிச்சுத் திங்கிறான்.  நாய்ங்களோட ஊள தாங்க முடில.  அப்போ என் கண்ணு முன்னால காளியோட உருவம்.  ராணி வாய்க்கால் சந்துல எங்க வூட்டுக்குப் பக்கத்துல ஒரு காளி கோவில் இருக்கு.  அந்தக் காளிதான் என் பக்கத்துல வந்து நிய்க்கிது.  அதோட கையில இருக்குற கத்திய எடுத்து என் கையில குடுக்குது.  நல்ல கூரு கத்தி.  வாங்கி என் பாக்கெட்டுல போட்டுக்கிட்டேன். அன்னி ராத்திரிக்கும் வந்தான் அந்தப் போலீசு.  பைக்குல அள்ளிப் போட்டான்.  அன்னிக்கு செக்ஸ் பண்றப்போ எப்பிர்ரா குத்தலாம்னு யோசிச்சுனு இருக்கறப்போ வாயில கொன்னாந்து குடுத்தான்.  ஒரே கடி கடிச்சேன்.  பன்னி மாரி கத்துனான்.  கண்ணுமண்ணு தெரியாம குத்துனேன்.  எனக்கு என்ன ஆச்சு, எப்படி எனக்கு அத்தன பெலம் வந்துச்சுன்னு எதுவுமே தெரில.  அப்படியே மயக்கம் போட்டு வுழுந்துட்டேன்.  காலைல எழுந்து பார்த்தப்ப ஆளு ரத்த வெள்ளத்துல கெடந்தான்.  திருட்டு ரயில் ஏறி மெட்றாஸ் வந்தேன்.  நம்ம போலீசு தெறமையான போலீசுதான்.  ரெண்டே நாளைல புடிச்சிட்டாங்க. ரொம்ப ஈசி.  பஸ் ஸ்டாண்டுல திரிஞ்சுக்கிட்ருந்த உஸ்ஸக் காணும்.  அந்தப் போலீஸ்காரன் என்ன அப்பப்ப அள்ளிப் போட்டுக்கிட்டுப் போறப்ப ஆளுங்க பாத்துருக்கு. 

சிறுவர் ஜெயில்ல நாலு வருஷம்.  நான் மட்டும் போலீஸ்காரன கொன்னுட்டுப் போயிருக்கலேன்னு வச்சுக்க கண்ணு, எல்லாப் பயலும் சேந்து என் சூத்தக் கிழிச்சிருப்பானுங்க.  சின்னப் பசங்கன்னுதான் பேரு.  ஒவ்வொருத்தனும் பொடம் போட்ட கிரிமினலுங்க.  எங்கூட இருந்த பசங்க கதைய கேக்கணும் நீ.  ஒரு பய ஆத்தா தலையில கல்லப் போட்டுக் கொன்னுட்டு வந்தவன். என்னா அப்டிப் பாக்குறே? ஏன்டா கொன்னேன்னு கேட்டா, எப்பப் பாத்தாலும் அவங்கப்பனை அவங்காத்தா அடிச்சுக்கிட்டே இருக்காளாம்.  எப்பப்பாரு அடி ஒத, மூஞ்சிலயே காறித் துப்புறது.  ஒருநாளு அவன் சாப்புடுற சோத்துல காறித் துப்பிருக்கா.  அருவாளை எடுத்துட்டு வந்து கண்டந்துண்டமா வெட்டிட்டான் பய.  பன்னண்டு வயசு.  பேப்பர்ல வர்றதல்லாம் சும்மாம்மா.  வாழ்க்க எப்டி எப்டியோ போய்ட்டுருக்கு.  இன்னோரு பய.  சொந்தத் தங்கச்சிய ரேப் பண்ணி கொன்னுட்டு வந்தவன். ரேப் பண்ண, சரி.  ஏன்டா கொன்னேனு கேட்டா அப்பா அம்மாட்ட சொல்லிடுவேன்னு சொன்னாளாம்.  ஒடனே கழுத்த நெறிச்சுட்டான்.  எத்தன வயசு தெரியுமா?  பதிமூணு வயசு.         

சரி, அதெல்லாம் வுடு. சிறுவர் ஜெயில்லேர்ந்து வெளீல வந்த நான் நேரா கல்கத்தா போய்ட்டேன்.  திருநங்கையாவோ ஒன்னய மாதிரி பொம்பளயாவோ பொறந்தா வங்காளத்துல பொறக்கணும்.  தாய் பூமி.  அந்த பூமியயே எல்லாரும் அம்மனோட பூமி கும்புடறாங்க.  அங்காளம்மன் புண்ணியத்துல அங்க ஒரு தாயம்மாவைப் பாத்தேன்.  அப்பவே அவுங்களுக்கு அம்பது வயசுக்கு மேல இருக்கும்.  பிச்ச தான் எடுப்பாங்க.  ஆனா இங்க தமிழ்நாட்டுல எடுக்கிற பிச்சை இல்ல.  ஒவ்வொரு கடையா போயி எங்களைக் கும்புடுறவங்கள ஆசீர்வாதம் பண்ணினா காசு குடுப்பாங்க.  அந்தக் காசுல தான் எனக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.  பத்து வருசம் அங்க இருந்தேன்.  தாயம்மா செத்த பெறகு இங்கயே வந்துட்டேன்.  அதுவும் தாயம்மா சொன்னதுனாலதான்.  என் காலத்துக்குப் பெறகு நீ உன் பூமிக்கே போய்டு விஜின்னாங்க தாயம்மா.  இதோ உன் கிட்ட பேசிட்டு இருக்கேன். 

கல்பனா: இங்கே வருமானத்துக்கு?

விஜி: திருநங்கைங்கள்ள மூணு டைப் இருக்கோம்.  ஒன்னு, ஆன்மீகத்துல இறங்கிட்டவங்க.  இன்னொன்னு, பாலியல் தொழில்.  மூணாவது, பிச்சை. 

கல்பனா: ஆன்மிகம்னா?

விஜி: என்னய மாதிரிதான்.  கேக்குறவங்களுக்குக் குறி சொல்லுவோம்.  இப்போ நான் கண்ணை மூடி அங்காள பரமேஸ்வரியை ஜபிச்சா உன்னோட வாழ்க்கையைக் கூட சொல்லிட முடியும். 

கல்பனா: (கிண்டலாகச் சிரிக்கிறாள்)

விஜி: நம்பலேல்ல… இதோ சொல்றேன் பாரு…

(என்று சொல்லியபடி கண்களை மூடுகிறாள்)

                                                   காட்சி 2

கல்பனா இளம்பெண்ணாக இருக்கிறாள்.  சட்டையில்லாமல் பெர்முடாஸுடன் அவள் கணவன் சுகுமார்.

சுகுமார்: ஏய் தேவ்டியா, யானக்கால் போட்டு வாடி. 

கல்பனா: ப்ளீஸ், என்னை அப்படில்லாம் அசிங்கமா பேசாதீங்க. 

சுகுமார்: (கன்னத்தில் வேகமாக அறைகிறான்.) என்னடி ரொம்பப் பேசுறே.  ம்?  தேவ்டியாளைத் தேவ்டியான்னு சொல்லாம என்னான்னு சொல்றது?  என்னை லவ் பண்றதுக்கு முன்னாடி இன்னோருத்தனை லவ் பண்ணினீல்ல.  அவன் உன்னை விட்டுட்டுப் போனதும்தானே என்னைப் பிடிச்சே?  ம்?

கல்பனா: தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். 

சுகுமார்:  மேலும் ஒரு அறை விடுகிறான்.  கேக்குறேன்.  பதில் சொல்ல மாட்டேங்குறே?  ம்?  அவ்ளோதான் மரியாதையா?  ம்?  கேக்குறேன்.  பதில் சொல்ல மாட்டேங்குறே?  அவ்ளோ திமிரா ஒனக்கு?  பதில் சொல்றி.  பதில் சொல்றி. வாயைத் தொறடி. 

கல்பனா: (கேவலுடன்) ஹாங்

சுகுமார்: (வெறி பிடித்தது போல் கத்துகிறான்.) என்னக் கொலகாரனா ஆக்காதே. பதில் சொல்லு.  பதில் சொல்லு.  பதில் சொல்லு.  வாயைத் தொறந்து பதில் சொல்லு.  (அவள் முடியைப் பிடித்து உலுக்கிக் கத்துகிறான்)  எனக்கு முன்னாடி ஒருத்தனை லவ் பண்ணி அவன் உன்னை விட்டுட்டுப் போனப்புறம்தானே என்னைப் புடிச்சே?

கல்பனா:  ஆமாங்க.

சுகுமார்: இத முன்னாடியே சொல்லிருந்தா இவ்ளோ பிரச்னை ஆயிருக்காதேடி தேவ்டியா.  என்னை ஏண்டி கத்த வுட்டு வேடிக்கை பாக்குறே?  சரி சொல்லு.  எத்தனை தடவ போட்டீங்க? 

கல்பனா: அப்படீன்னா?

சுகுமார்:  ஏய் தேவ்டியா செருக்கி.  பத்தினி மாதிரி குலுக்காதடி.  எத்தனை தடவ போட்டீங்க? 

கல்பனா: சத்தியமா நீங்க கேக்குறது புரீலிங்க. 

சுகுமார்:  Hey, Fucking bitch… How many times did he screw your pussy with his wagging dick?

கல்பனா: அப்படீலாம் இல்லீங்க.  தொட்டது கூட கிடையாதுங்க. 

சுகுமார்: (நக்கலாக) ஓ பத்தினி?  உன்னை இன்னோர் நாள் வச்சுக்கிறேன்.  இப்ப எனக்கு உன் கிட்ட வேற வேல இருக்கு.  மண்டி போட்டு நட.

கல்பனா: அவனைப் பாவமாகப் பார்க்கிறாள்.

சுகுமார்: என்னடி, புதுசா பண்ற மாதிரி பாக்குறே?  மண்டி போட்டு நட.  அப்போதான் எனக்கு மூடு வரும்.  (சொல்லிக் கொண்டே பெல்ட்டைக் கழற்றுகிறான்)

(கல்பனா மண்டி போட்டு நாலு காலில் நடக்கிறாள்.  சுகுமார் பெல்ட்டால் அவள் புட்டத்தில் அடித்துக் கொண்டே அவள் பின்னால் செல்கிறான்.  அரங்கத்தில் இருள் சூழ்கிறது.  சுகுமார் அவளை பலாத்காரம் செய்யும் ஒலியும் அவளுடைய ஹா என்ற ஓசையும் கேட்கிறது.)

                                          காட்சி : மூன்று

பழையபடியே விஜியின் சிறிய வீடு.  எதிரே கல்பனா. 

விஜி: கல்பனா, உன் புருஷங்கிற அந்த மிருகம் உன்னை எப்டி நடத்துச்சுன்னு இப்போ என் திருஷ்டில பார்த்தேன்.  கொடுமை.  கொடுமை.  கேக்கிறவங்க ’இந்தக் காலத்திலேயும் இப்படி நடக்குமா?’ன்னு சந்தேகப்படுவாங்க.  ஏன், உன்னோட அப்பா அம்மாவே அப்டித்தானே கேட்டிருப்பாங்க?  கேட்டாங்கல்ல? 

கல்பனா: (நம்ப முடியாத மிரட்சியுடன்) ஆமாம். 

விஜி: ஏன்னா, சுகுமார் ஊருக்கெல்லாம் உத்தமன்.  உனக்கு ராட்சசன்.  உனக்கென்ன பைத்தியமான்னு கூட கேட்டிருப்பாங்களே?

கல்பனா:  சொல்லியிருந்தா கேட்டிருப்பாங்க.  நான் சொல்லல.

விஜி: நல்லவேளை.  இன்னும் அவனோட இருந்திருந்தா உன்னை அடிச்சே கொன்னுருப்பான்.

கல்பனா: கொல்லத்தான் பார்த்தான்.  நாளாக ஆக டார்ச்சர் அதிகமாப் போச்சு.  சிகரெட்டால எல்லாம் சுட ஆரம்பிச்சுட்டான்.  அப்போதான் எனக்கு மூட் வரும்ங்கிறான்.  ஒருநாள் என்னை வீட்டை விட்டு அடிச்சு விரட்டிட்டு கதவைப் பூட்டிட்டான்.  நான் வாசல்லயே உக்காந்து பார்த்தேன்.  கதவையே தெறக்கல.  எவ்வளவோ கெஞ்சினேன்.  சலனமே இல்ல.  கிளம்பிட்டேன்.  ஆனா தனியா இருக்கிறதுல என்ன பிரச்சினைன்னா அப்போ ஒரு ஸைக்கோவை சமாளிக்க வேண்டியிருந்துது.  இப்போ ஏகப்பட்ட ஸைக்கோவை சமாளிக்க வேண்டியிருக்கு.  தனியா இருக்கான்னாலே ஏதோ ஆம்பள சுகத்துக்கு அலையிறா ஏங்குறான்னு நினைச்சுக்கிட்டு பின்னாலயே நாயாட்டம் சுத்தறானுங்க.

                                             அங்கம் : இரண்டு

                                               காட்சி : ஒன்று

இரவு நேரம்.  தலையில் மல்லிகைப் பூ வைத்து நன்கு அலங்கரித்துக் கொண்டு நிற்கும் ஒரு திருநங்கை.  பெயர்: சங்கரி. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு க்ரவுண்ட். அதன் ஓரத்தில் ஒரு மேடை.  தெரு விளக்கு மினுக் மினுக் என்று மின்னி மின்னி எரிகிறது.  அப்போது அந்தப் பக்கமாக வரும் இரண்டு இளைஞர்களை அணுகுகிறாள் சங்கரி.

சங்கரி: வரியா ப்ரோ ?

இளைஞன் 1: எங்கேடி செல்லம்?

சங்கரி: அதெல்லாம் ஓப்பனா சொல்ல முடியுமா ராஜா ? வந்தீனா ஹேப்பி எண்டிங் காரண்டீ… 

இளைஞன் 2:  என்னது, ஹேப்பி எண்டிங்கா?  ஒனக்கு எப்டி அதெல்லாம் தெரியும்?

சங்கரி:  நம்ம ஒருத்தி மஸாஜ் செண்டர்ல வேலைல இர்ந்தா…  அவட்ட தெர்ஞ்சுக்கிட்டதுதான்.  அத்த வுடு.  மஸாஜுக்குப் போனன்னா ஹேப்பி எண்டிங் காரண்டீ இல்ல?  ஆனா நம்மட்ட உண்டு.  எடமும் இருக்கு.  மஜா மஜா மஜா ஃபுல் மஜா…காரண்டீ… ஒருத்தருக்கு ஒன் தவுசண்ட்.

இளைஞன் 2: என்னாது, ஒர்த்தருக்கு ஒன் தவுனா?  நீ என்னா பொம்பளையா?  ஒம்போது தான?  ஒம்போதுக்கு ஒன் தவுசனா?  என்னாடா இது அநியாயம்?   

சங்கரி: அய்ய … நம்பர்லாம் சொல்லிக் கூப்புடாதே, ஆமா.  பொம்பள கிட்டலாம் நம்ப குடுக்குற மஜா கெடைக்காது.  சொல்றதக் கேளு.  

இளைஞன் 1: அதுக்குன்னு ஒர்த்தருக்கு ஒன் தவுசண்ட் ரொம்ப ஓவர்பா.

சங்கரி: ஓவர்மான்னு சொல்லு.  ஓவர் பா இல்ல.  சரியா?  அப்றம்,

நீ நென்ச்சினுக்குற  மாத்ரி இது அவ்ளோ ஈஸியான வேல இல்ல.  அப்பப்ப போலீஸ்கார மாமாங்குளுக்கு  மாமூல் குடுக்ணும். ஏஜெண்டு கமிசன்  வேறக்குது.  நாமளா கமிஷன் குத்துவுட்டா சரி.  இல்லேன்னா அவுனா அனுப்புவான்.  எத்தன பேரு தெரிமா?  பத்து பேரு.  அதுனாலதான் நானே இப்டி ரோட்டுல நிக்கிறேன்.  சரியா, புரிஞ்சுக்க ராஜா. போலீஸ் மாமூல், ஏஜண்ட் கமிசன் எல்லாம் போக, நீ குடுக்குற அய்நூறுல என் கையில மிஞ்சுறது நூறுபா . அம்தம்தான் .

இளைஞன் 1: சரி, சரி், வா.  உம் பேர் என்னா?

சங்கரி: சீலா என் பேரு… 

இளைஞன் 2: எடம் இருக்கா?

சங்கரி: பாரு ப்ரோ, இத்தாம் பெரிய மைதானம் கீது.  இது போதாதா?  வா ப்ரோ… த அங்க  பாரு… மறவா ஒரு எடங்குது .

இளைஞன் 1: இப்டி எடுத்ததுக்கெல்லாம் ப்ரோ ப்ரோன்னு சொல்லி உயிர எடுக்காத.  நீ எனக்கு என்ன சிஸ்டரா? 

சங்கரி: அட நீ வேற ப்ரோ… ஒரு சில பேரு ஹேப்பி எண்டிங் போதே தங்கச்சி தங்கச்சின்னு சொல்லி சிலுப்புவானுங்க…

(சொல்லியபடியே இருவரையும் மேடையின் ஒரு ஓரத்துக்கு அழைத்துப் போகிறாள் சங்கரி.)

அரங்கில் இருள் படர்கிறது.

சோகமான கோரஸ் ஒலி.  கொஞ்ச நேரத்தில் ஒலி லேசாக லேசாக ஒளி தெரிய ஆரம்பிக்கிறது. 

மேடை ஓரத்தில் ஒரே களேபரம்.  டேய் வுஸ்ஸு…  வுட்டுர்ரா… வுட்டுர்ரா… காசு இல்லடா…   திடும்திடும் என்று அடியும் தள்ளுமுள்ளு சத்தமும் கேட்கிறது…  ஓசீலயா பண்ண வந்தீங்க, நாய்ங்களா, தேவ்டியாப் பசங்களா என்று கத்தியபடி சங்கரி இரண்டு பேரையும் துரத்துகிறாள்.   

                                            காட்சி : இரண்டு

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட மற்றொரு சேரி வீடு.  முதல் அங்கத்தில் பார்த்த அதே சுற்றுப்புறம்.  நாய்களின் குரைப்பு ஒலி.  பூனைகளின் சத்தம். 

(பூங்கோதை என்ற வயதான பெண்மணி. எலும்பும் தோலுமான தோற்றம்.  குடிசை வாசலில் சங்கரி.  அலங்கோலமான தோற்றம்.  தலைமுடி கலைந்து கிடக்கிறது.  கண்களில் கண்ணீருடன் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறாள்.)    

பூங்கோதை: டேய் சங்கரு லவடேகபால்… துன்றதுக்கு பிரியாணி வாங்கிக்கினு வாடான்னா இங்க வந்து கஞ்சா அட்சிக்கிணு ஒக்காந்த்ருக்கே?  ரெண்ட்நாளா சோறு இல்லாம காஞ்சுபோய்க்கிறேன்டா  நாயே.

சங்கரி: ங்கோத்தா மயிர்க்கூதி, உனக்கு எவ்ளோ தடவ சொல்லிகிறேன், என்ன டா போட்டுக் கூப்புடாதே கூப்புடாதேனு? ம்? ஒரு தபா சொன்னாத் தெர்யாது? எத்தன தபா சொல்றது?  எங்கப்பன் ஒன்னிய ஏன் மாட்ட அடிக்கிறா மாதிரி அட்ச்சான்னு இப்போதான் புரியுது. பிரியாணி வேணுமாம் பிரியாணி… ங்கோத்தா…

பூங்கோதை: டேய் நாரிபாட… அந்த ஆள ஏண்டா இழுக்குறே?  அவன் என்னப் படுத்துனப் பாட்டுக்குத்தான் மாரியாத்தா வாரிக்கினு போய்ட்டாளே… நீ ஆம்பளையாத்தானடா பொறந்தே?  இன்னா மயித்துக்குடா பொட்ட பொட்டன்றே?  வெக்கமா இல்லடா ஒனக்கு, தூ… இதுல தேவ்டியாத் தொயில் வேற செய்யிற.  இதுக்கு நீ நாக்கைப் புடுங்கினு  சாவ்லாம்?  எனக்குப் பொறந்த பயலா நீ?  பொறந்த வுடனே ஒன்னியக் கயித்த புச்சி நெர்ச்சுக் போட்ருக்குனும்.  இல்ல, நீ என் நைட்டிய நைட்டியப் போட்டுக்கினு  திரிய ஆரம்பிச்சவே எலி வெசத்த வச்சுத் தீத்துருக்கணும் உன்ன… இப்ப அவ்சாரி வேல வேற பாக்குற… பேசாம நீ செத்துத் தொலயக் கூடாது… இந்த லட்சணத்துல முப்பதாயர் ருவா குடுத்து அத அறுத்துப் போட்டுட்டு வந்திருக்கே?  அதுக்கு மட்டும் எப்பர்ரா முப்பதாயிர் ரூவா வந்துது?

சங்கரி: தே… பிச்ச எத்து சம்பார்ச்சுதுடி அது …

பூங்கோதை: அட சீ நாயே… இப்டி சொல்ல ஒனக்கு வெக்கமா இல்ல?

(சொல்லி விட்டு ஆக்ரோஷத்துடன் அவன் மீது காறித் துப்புகிறாள்.)

(எச்சில் அவன் முகத்தில் வந்து விழுகிறது.  தன் வலது கையால் அதை எடுத்துப் பார்த்து விட்டு எழுந்து கொள்கிறாள் சங்கரி.)

சங்கரி: ங்கோத்தா … தேவ்டியா முண்ட… நகர முடியாம இஸ்துக்கினு இருக்கும் போதே ஒனக்கு இள்வோ கூதித் திமிராமே? ங்கொம்மால…

(சொல்லி விட்டு எழுந்து அவளைக் காலால் உதைக்கிறான்.)

 பூங்கோதை: ஐயோ ஐயோ… இந்தப் பொட்ட என்ன சாவடிக்கப் பாக்குறானே… ஐயோ ஐயோ…

(பெரும் குரலெடுத்து அழுகிறாள் பூங்கோதை)

மீண்டும் அவளைக் காலால் எட்டி உதைக்கிறாள் சங்கரி.  எட்டி உதைக்கும் சங்கரியின் காலைக் கடிக்கிறாள் பூங்கோதை.  அந்த இடமே கிடுகிடுத்துப் போகும்படி அலறும் சங்கரி, நொண்டியபடியே அந்த இடத்தை விட்டு வெளியே போய் அமர்ந்து கஞ்சா புகைக்கிறாள்.  புகைத்து முடித்து விட்டு மண்ணெண்ணெய் டின்னை எடுத்துத் தன் உடம்பில் ஊற்றிக் கொண்டு நெருப்புப் பெட்டியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறாள்.  வலி தாங்க முடியாமல் அலறும் போது பக்கத்துக் குடிசையிலிருந்து ஆட்கள் வந்து சாக்கைப் போட்டு மூடுகிறார்கள். 

வெளிச்சம் கம்மியாகிறது.  சங்கரியின் அலறல் சப்தமும் ஆட்களின் கலவையான சப்தமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

பின்னணியில் கோரஸ் ஒலிக்கிறது.   

                                               அங்கம் : மூன்று

வல்லாள ராஜனின் அரண்மனை.  ஒரு சேவகன் மன்னனுக்கு பராக் சொல்கிறான். 

சேவகன்: மண் தோன்றி கல் தோன்றாக் காலத்தே,

பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் வல்லாள ராஜன் சேவகனின் மண்டையில் நச்சென்று போட்டு, ங்கோத்தா பொறம்போக்கு.. தமிழ் கூட சரியாத் தெரியாத நாயி…  ஒழுங்காச் சொல்ரா…

சேவகன்: (முழித்து விட்டு)  மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்தே…

வல்லாளன்: (மீண்டும் அடிக்கிறான்)  ஒழுங்காச் சொல்ரா.

சேவகன்: (அழுகையை அடக்கியபடி) (விக்கி விக்கி)  மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்தே…

வல்லாளன்: திரும்புடா

சேவகன்: பயந்து கொண்டே திரும்புகிறான்.  ஓங்கி அவன் புட்டத்தில் தன் காலால் உதைக்க எங்கோ போய் தரையில் விழுகிறான் சேவகன். 

வல்லாளன்: கல்லுக்கு முன்னாடி எங்கேர்ந்துடா மண்ணு வந்துச்சு… donkey donkey…

வேறொரு சேவகனை சைகையால் அழைத்து சொல்லச் சொல்கிறான்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க் குடியின் தலைமகன் –

பகைவர்களையெல்லாம் தன் மதித்திறத்தாலே வென்று தன் காலடியில் வீழ்த்திய கார்மேகன் –

கடவுள்களையே தனக்குச் சேவகம் செய்ய வைத்த மாமனித மாணிக்கம்

வல்லாள ராஜ மகராஜா வருகிறார் பராக் பராக் பராக்! 

வல்லாளன்: (பராக் சொல்லும் சேவகனிடம்) டேய் நிறுத்துரா லூசு.  எனக்குப் புகழ்ச்சியே புடிக்காதுன்னு சொல்லிருக்கேன்ல?

சேவகன்: இல்லீங் மகராஜா, இதை எழுதிக் குடுத்ததே நீங்கதான் ப்ரபோ.  இன்னிக்குப் படிக்கணும்னு எழுதிக் குடுத்தீங் மகாப்ரபோ.  

எதுத்தா பேசுறே?  போடா அந்தாண்ட.  (சேவகனின் புட்டத்தில் ஒரு உதை விடுகிறான்.  சேவகன் தொபுக்கடீர் என்று குப்புற விழுகிறான்.)

வல்லாளன்: டேய், யார்ரா அங்க?  எல்லா நாயையும் இங்கே இழுத்துட்டு வாங்கடா.

ஆறு இளம் பெண்களை கட்டையில் சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

வல்லாளன்: மந்திரி, இவர்கள் செய்த குற்றம் என்ன?

மந்திரி: (முதல் பெண்ணை சுட்டிக்காட்டி) இவள் எந்நேரமும் மொபைல் ஃபோனையே நோண்டிக் கொண்டிருப்பதாகவும் ஃபேஸ்புக்குக்கு அடிக்ட் ஆகி விட்டதாகவும் குடும்பத்தையே கவனிப்பதில்லை என்றும் இவள் கணவன் குற்றம் சாட்டுகிறார் மகா ப்ரபோ.

வல்லாளன்: குடும்பத்தில் எத்தனை உருப்படி? 

மந்திரி:  ரெண்டு உருப்படி மகாப்ரபோ.  இவளும் இவள் கணவனும்.

வல்லாளன்: இவளை காராகிரஹத்துக்கு அனுப்பு. மூன்று ஆண்டுகள்.

மந்திரி: (இரண்டாவது பெண்ணை சுட்டிக்காட்டி) அடல்ட்ரி மகாப்ரபோ.  புருஷன் இருக்கும் போதே இன்னொரு கள்ளப் புருஷன். 

வல்லாளன்: விஜாரணை நடந்ததா?  நம் நாட்டின் நீதி சிபிச் சக்ரவர்த்தியின் நீதியை விட உசந்தது.  நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்.  ஒரு நிரபராதிக்குக் கூட தண்டனை வழங்கி விடக் கூடாது.

மந்திரி:  விஜாரணை நடந்தது மகாப்ரபோ.  இவள் கணவனுக்கு ஷுகர் கம்ப்ளெய்ண்ட்.  அதற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தினால் தன்னுடைய வீரியத்தை இழந்து விட்ட புருஷன் இவளோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் உறவில் இல்லை என்பதாலும் இவள் வயது 35 தான் என்பதால் அடல்ட்ரியில் ஈடுபட்டு விட்டாள் என்று தெரிந்தது மகாப்ரபோ.

வல்லாளன்: சே சே… வாட் அ ஷேம்! வாட் அ ஷேம்!  இப்படியெல்லாம் இருந்தால் நம் வல்லாள தேசப் பண்பாடு என்ன ஆவது?  இவளுடைய ஜனனேந்திரியத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி இவளை காராகிருஹத்தில் போடுங்கள்.  மெனோபாஸ் வரும்வரை இவள் காராகிருஹத்திலேயே இருக்க வேண்டும்.

மந்திரி: (மூன்றாவது பெண்ணை சுட்டிக்காட்டி) இவள் கணவனின் ஜனன உறுப்பு சிறிதாக இருக்கிறது என்று இவள் கிண்டல் செய்ததாக இவள் கணவன் புகார் செய்திருக்கிறான் மகாப்ரபோ. 

வல்லாளன்:  கிண்டல்தான் செய்தாளாமா?

மந்திரி: ஆம் மகாப்ரபோ!

வல்லாளன்:  ஒருவரின் கிண்டல் மற்றவருக்கு மன உளைச்சலைத் தருகிறது என்றால் அதை ஒப்புக் கொள்ள முடியாது. காராகிருஹம் ஆறு வருடம்.

மந்திரி: (நான்காவது பெண்ணை சுட்டிக் காட்டி) இவள் தன்னுடைய ஐந்து வயது மகனைக் கொன்று விட்டாள்.

வல்லாளன்: ஏன்?

மந்திரி: இவளுக்கும் ஒரு பிரியாணி கடைக்காரனுக்கும் அடல்ட்ரி மகாப்ரபோ.  இவள் அவனோடு ஓடி விட்டாள்.  ஆனால் இவள் கணவன் குழந்தையைக் காரணம் காட்டி திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.  இவள் திரும்பவும் அதே பிரியாணி கடைக்காரனோடு ஓடி விட்டாள்.  உடனே இவள் கணவன் திரும்பவும் போய் குழந்தையைக் காரணம் காட்டித் திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அதனால் குழந்தையைக் கொன்று விட்டாள்.

வல்லாளன்:  இந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்காரியின் சிரத்தை அறுத்து கம்பில் நட்டு வையுங்கள்.  எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும்.

மந்திரி: (ஐந்தாவது பெண்ணை சுட்டிக்காட்டி) இவள் கவிதை எழுதுகிறாள் மகாப்ரபோ.

வல்லாள ராஜன்: மந்திரி… ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகம் படித்திருக்கிறீரா? அதில் consipirator Cinnaவைப் பிடித்துக் கொல்வதற்காக மக்கள் கூட்டம் ஓடும் இல்லையா? அப்போது அங்கே கவிஞன் சின்னா அகப்பட்டுக் கொள்கிறான். என்னை விட்டு விடுங்கள் நான் கவிஞன் சின்னா என்று கதறுகிறான். ஆனாலும் கூட்டம் அவனைக் கொன்று விடுகிறது… அவன் கவிஞன் என்பதற்காகவே.

மந்திரி: மகாராஜா கோபித்துக் கொள்ளக் கூடாது. ஷேக்ஸ்பியர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்பாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வல்லாள ராஜன்: அப்படியா? இது கூடவா தெரியாமல் அந்த நாடகாசிரியன் சாரு நிவேதிதா நாடகம் எழுதியிருக்கிறான். அவனையும் பிடித்து இழுத்து வாருங்கள். விசாரணை செய்து தண்டிக்க வேண்டும்.

மந்திரி: வேறொரு குற்றத்துக்காக நாம் அவனை ஏற்கனவே நாடு கடத்தி விட்டோம் மஹாராஜா. இப்போது அவன் தமிழ்நாடு என்ற தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வல்லாள ராஜன்: ஓ அப்படியா? அதை விடப் பெரிய தண்டனையை நான் கொடுத்து விட முடியாது. சரி. இந்தப் பெண்ணை கவி என்று சொன்னீர் அல்லவா? ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் கவிஞன் சின்னாவைக் கொன்றது போலவே இவளையும் கொன்று விடுங்கள். முச்சந்தியில் நிறுத்திக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆணையிடுகிறேன்.

மந்திரி: ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சின்னா அந்த மாதிரி கொல்லப்படவில்லையே பிரபோ? 

வல்லாளன்: இருந்தால் என்ன? நீர்தானே சொன்னீர், ஷேக்ஸ்பியர் இன்னும் பிறக்கவே இல்லை என்று?  இன்னும் எழுதப்படாத ஒரு பிரதிய நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.  மேலும்… (என்று சொல்லி சற்றே நிறுத்துகிறான்…)

மந்திரி: ஆணையிடுங்கள் பிரபோ!

வல்லாளன்: நீர் இப்போதெல்லாம் அதிகம் எதிர்த்துப் பேசுகிறீர். 

மந்திரி: மன்னியுங்கள் மகாராஜா… இனிமேல் அந்தப் பிழை நடக்கவே நடக்காது (என்று சொல்லி பம்முகிறார்)

ஆறாவது பெண் இழுத்து வரப் படுகிறாள்.

வல்லாளன்: இவள் செய்த குற்றம் என்ன?

மந்திரி: மீ டூ.

வல்லாளன்: என்ன மேன், புதிருக்குப் பிறந்தவனிடமே புதிர் போடுகிறீர் மீ டூ என்று?

மந்திரி: மீ டூ தெரியாதா மகாப்ரபோ?  இப்போது நம் தேசத்தின் மிகப் பெரிய பிரச்சினையே மீ டூ தான் ப்ரபோ.  ஆண்கள் பெண்களை உறவுக்கு அழைத்தால் அதுதான் மீ டூ. 

வல்லாளன்:  அதில் என்னய்யா தப்பு இருக்கிறது?

மந்திரி: தப்புதான் என்கிறார்கள் பெண்கள் ப்ரபோ.

கட்டப்பட்ட பெண் பேசுகிறாள்:  அழைப்பதில் பிரச்சினை இல்லை.  ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களை பயமுறுத்தி படுக்கைக்கு அழைப்பதையே நாங்கள் எதிர்க்கிறோம். 

வல்லாளன்: இந்தச் சிறுக்கி அரசனையே எதிர்த்துப் பேசுகிறாள்.  இவள் நாவை அறுத்து காகத்துக்குப் போடுங்கள்.  இவள் சாகும் வரை இவளை வன்கலவி செய்ய வேண்டும் என்பதுதான் இவளுக்கான தண்டனை.

அப்போது எங்கிருந்தோ அங்கே வந்து விட்ட ஒரு கிழவி குறுக்கிடுகிறாள்.

கிழவி: மகாராஜா, நான் உனக்கு ஆரூடம் சொல்லப் போகிறேன், கேள்.

வல்லாளன்: ஏய் கிழவி, எனக்கு ஆரூடமும் வேண்டாம்; ஒரு மயிரும் வேண்டாம்.  பேசாமல் மூலையில் போய் உட்கார். 

கிழவி: (அமானுஷ்யமான குரலில்) டேய் மூடனே, வல்லாளா, இதோ சொல்கிறேன் கேள்.  உனக்குப் பிறக்கப் போகும் குழந்தையால் உன் அரண்மனையும் ராஜ்ஜியமும் அழியப் போகின்றன. 

வல்லாளன்:  டேய் யாரங்கே, இந்தப் பைத்தியத்தைப் பிடித்து கழுத்தை வெட்டுங்கள்.

சேவகர்கள் கிழவியை நெருங்கும் வேளையில் கிழவி அங்காளம்மனாக மாறி அங்கே மன்னனின் அருகே அமர்ந்திருந்த ராணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றுக்குள்ளே இருந்த குழந்தையைத் தின்கிறாள்.  அரண்மனை தீப்பற்றி எரிகிறது. 

கோரஸ் ஒலிக்க அங்காளம்மன் பேய் போல் நடனமாடுகிறாள்.

                                                  அங்கம் : நான்கு

                                                    காட்சி : ஒன்று


விஜியின் குடிசை.

விஜி, கல்பனா

இரண்டு டீ கிளாஸ்களில் டீ.  ஒரு தினசரி காகிதத்தில் பக்கோடா. 

விஜி: குடி கண்ணு… இந்த டீயில்லாம் நீ குடிச்சிக்கிறியோ இல்லியோ… இல்லன்னா கலரு வாங்கிட்டு வர சொல்லவா?  இந்த ஆனியன் பக்கடாவும் சூப்பரா இருக்கும்.  துண்ணு…  உன்காகத்தான் வாங்குனேன்.

கல்பனா: இல்லல்ல… டீ போறும்.  (சொல்லியபடி டீ கிளாஸை எடுத்து கொஞ்சம் உறிஞ்சி விட்டு, பக்கடாவைப் பார்க்கிறாள்.  பிறகு கொஞ்சம் சிரிப்புடன்) நான் வெங்காயமும் பூண்டும் சாப்பிட்றதில்ல…

விஜி:  என்னது, வெங்காயமும் பூண்டும் சாப்பிட்றது இல்லையா? இதுவரைக்கும் லைஃப்லயே சாப்பிட்டது இல்லியா?

கல்பனா: சாப்பிட்டது இல்ல.  எங்க வீட்ல அப்பா அம்மா சாப்பிட்றது இல்ல… அதுனால அப்டியே பழகிப் போச்சு…

விஜி: நெஜமாலுமா, நம்பவே முடியலியே…  வெங்காயமும் பூண்டும் இல்லாம எப்படி சமைக்கிறது?

கல்பனா:  நான்லாம் அந்த வித்தியாசமே தெரியாம சமைச்சுடுவேன்.  ஒருநாள் உங்களை வீட்டுக்கு அழச்சுட்டுப் போயி சமைச்சுத் தர்றேன்… பாருங்க… 

பேசிக் கொண்டே கல்பனா டீயை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க, விஜி டீயை ஒரு கலக்கு கலக்கி, சப்தம் எழ ஊதி, சப்தம் எழுப்பியபடி உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறாள்.

விஜி: ஓ… பொண்ணு, நீ மசானக் கொல்ல பத்தி சொன்னீல்ல… நேர்ல பாத்துக்கிறியா? 

கல்பனா:  இல்லியே… ஆனா இந்த வருஷம் அவசியம் பார்த்துரணும்…

விஜி: பாரு பாரு… வந்து பாரு… இதோ மாசி வருதுல்ல… எதுக்குக் கேட்டேன்னா கோழியை எல்லாம் பச்சையாவே கழுத்தக் கடிச்சு ரத்தத்த உறிஞ்சுவாங்க…  நானே பத்து இருவது கோழியக் கடிச்சி ரத்தத்தக் குடிச்சிருக்கேன்…  ஒன்னுமே பண்ணுனது இல்ல… மத்த நாள்னா சும்மா காஞ்சு போன ரொட்டிய சாப்புட்டாலே வயித்தால புடுங்கிக்கிது… ஆனா மசானக் கொள்ளைல மட்டும் என்னாதான் நடக்குதுன்னு புரியல… எல்லாம் அந்த அங்காளம்மனுக்குத்தான் தெரியும்…

கல்பனா:  அவசியம் வந்துடறேன்.  மார்ச்சுல தான் மயானக் கொள்ளைன்னு படிச்சிருக்கேன்.  வந்து நேர்லயே பார்க்கிறேன்.  அதுக்கு முன்னாடி விஜி… அந்த சங்கரியைப் பார்த்துப் பேசிட்டா நல்லா இருக்கும்.  அவங்க எப்படி இருக்காங்க இப்போ?

விஜி: ஆமா கல்பனா… நீ போன்ல சொன்னதுமே அவ கிட்ட பேசுனேன்.  ஆனா யாரையும் பாக்க முடியாதுன்னிட்டா.  இன்னா கேள்வி கேக்கணுமோ அதெல்லாம் நீ கேட்டுட்டு வந்து சொல்லுன்னிட்டா.  அவள நீ பாக்க முடியாதும்மா.  பாதி ஒடம்பு நெருப்புல வெந்து கெடக்கு.

கல்பனா: அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் விஜி.

விஜி:  அதுக்கில்லம்மா பொண்ணு.  அந்த நாத்தத்த ஒன்னால தாங்க முடியாது. அவ அம்மா ஒருத்தி இருக்கா…  ராட்சசி முண்ட…  படுத்த படுக்கையா கெடக்கா…  படுக்கையிலயே பீ மூத்திரம்… பத்தாத்துக்கு அவ ஒடம்பு வேற புழுத்து நாறுது. ஒன்னால முடியாது.  எனக்கே மயக்கத்துல தலேல்லாம் சுத்திக்கிட்டு வந்துது.  ஏன் அவ்ளோ நாத்தம் தெரிமா?  வெஷம்.  அந்தப் பொம்பளையோட வெஷம்.  ஒடம்பு பூரா வெஷத்தை வச்சிருந்தா என்னா ஆவும்?  நாத்தமாதான் வெளிய வரும்.  நான் பொட்ட தானே?  ஆனா ஒடம்ப மோந்து பாரு.  கஸ்தூரி மஞ்சள் வாசம் வரும்.  இது மஞ்ச போட்டுக் குளிக்கிறதுனாலயா?  சேச்சே… என் மனசு தான் இப்டி வாசனையா வருது.  ஒனக்கும் ஒரு வாசன இருக்கும் குட்டி.  எல்லா மனுச சென்மத்துக்கும் ஒவ்வொரு வாசன இருக்கு.  செல பேத்துலேந்து ஊதுவத்தி வாசன வரும்… செல பேத்துலேந்து சாம்புராணி வாசன வரும்.  செல பேத்துக்கிட்டேர்ந்து பீ வாசன தான் வரும்… (பெரும் குரலெடுத்துச் சிரிக்கிறாள்)  இப்போ நெறையா பேத்துக்கிட்டேர்ந்து அந்த வாசன தான் வருது…  (குரலைத் தாழ்த்திக் கொண்டு)  யாருன்னு சொல்றேன் கேளு… ஓட்டுக் கேட்டு வர்ரானுவொள்ள… அவனுங்க ஒடம்புலேந்து அந்த வாசன தான்…  சரி அத்த வுடு.  சங்கரியப் பாக்கணும்னா மசானக் கொல்லெல்ல பாக்கலாம்… வந்துடு நீ…   

                                               காட்சி: இரண்டு

மயானம்.  மயானத்தின் தரையில் மண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய ராட்சசனைப் போன்ற உருவம்.

விஜியும், சங்கரியும் வேறு சில திருநங்கைகளும் பெண்களும் உடம்பு முழுவதும் மண்டையோட்டு மாலை அணிந்து கொண்டு மயானத்தின் உள்ளே நுழைகிறார்கள். (சங்கரியின் முகம் நெருப்பில் தீய்ந்து இருக்கிறது). மிகக் கடுமையான, வெறி கொள்ள வைக்கும் முறையில் பறைக் கொட்டு அடிக்கப்படுகிறது.  ஒரு பெண் உயிரோடு ஒரு கோழியைக் கழுத்தில் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறாள். 

பெண்களும் திருநங்கைகளும் வெறி பிடித்தது போல் ஆடுகிறார்கள்.  அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் சந்நதம் வந்து விட்டது போல் தலைமுடி கவிழ்ந்து வீழ அமானுஷ்ய சத்தத்தோடு பேய் நடனம் ஆட ஆரம்பிக்க்கும் கல்பனா பக்கத்தில் கால்கள் கட்டப்பட்டுக் கிடக்கும் உயிருள்ள கோழி ஒன்றின் குரல்வளையைத் தன் பற்களால் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறாள்… ஆட்டம் உச்சக்கட்டத்தை அடைகிறது. 

பறை இசையும், கோரஸும் பின்னணியில் ஒலிக்க ஐந்து நிமிடம் நடனம் தொடர்கிறது. 

                                                      திரை

பின்குறிப்பு: இந்த நாடகத்தை எழுதுவதற்கு முன்னதாக பல கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.  அதற்குப் பெரிதும் உதவிய ஷாலின் மரியா லாரன்ஸ், விஜய் பாலாஜி, வளர்மதி, காந்தி (மின்னம்பலம்), ஷாம்பவி ஆகியோருக்கு மிகவும் நன்றி.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai