ராஸ லீலா collectible

ராஸ லீலா collectibles (Collecto’s copy) பற்றி அதிகம் பேருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். வாசகர் வட்டத்தின் உள்வட்டத்தினர் மட்டுமே பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கின்றனர். இந்த கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனாலே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வந்து விடும். நெப்போலியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய்.

’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் நானும் சேர்ந்த புகைப்படம் இடம் பெறும். அதாவது, ஒவ்வொரு பிரதியையும் தனித்தனியே அச்சடிக்க வேண்டும். கிட்டத்தட்ட handmade காஷ்மீர் கம்பளம் மாதிரி. மட்டுமல்லாமல், புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த காப்பியை நான் யாருக்குக் கொடுத்திருக்கிறேனோ அவரைப் பற்றிய என்னுடைய சிறு குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கணேஷ் அன்புவின் பிரதி என்றால் அந்தப் பிரதியின் பின்னட்டையில் கணேஷ் அன்புவும் நானும் உள்ள புகைப்படம் இருக்கும். முதல் பக்கத்தில் கணேஷ் அன்பு பற்றி நான் எழுதிய குறிப்பு ஒன்றும் இருக்கும். ஒரு காப்பியின் தயாரிப்புச் செலவே 2000 ரூபாய் ஆகும். எனவே யார்யாரால் முடிகிறதோ அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மே 15உடன் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. இல்லாவிட்டால் புத்தகம் கிடைக்க நீண்ட நாள் ஆகும். அநேகமாக உலக அளவில் புத்தகத் தயாரிப்பில் இப்படி ஒரு collector’s copy தயாரிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com