நாளை மாலை சாகித்ய அகாதமியில் என் உரை

நாளை மாலை சாகித்ய அகாதமி வளாகத்தில் சா. கந்தசாமியின் தமிழில் சுயசரித்திரங்கள் என்ற நூலைப் பற்றிய புத்தக விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நீல பத்மநாபனைப் பற்றிய ஆவணப்படம் ஐந்து மணிக்குத் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து சா. கந்தசாமியின் நூல் பற்றிய என் உரை இருக்கும். சரியாக ஐந்தரை மணிக்கு என் உரை தொடங்கும். சா. கந்தசாமி என் ஆசான்களில் ஒருவர். அவரும் விழாவில் கலந்து கொள்வார். அவருடைய சாயாவனம் தமிழின் கிளாஸிக்குகளில் முதன்மையானது. அறுபதுகளில் எழுதப்பட்டது. அனைவரும் வாருங்கள். சாகித்ய அகாதமி அலுவலகம் தேனாம்பேட்டையில் (அண்ணா சாலை) குணா காம்ப்ளெக்ஸ் இரண்டாம் தளத்தில் உள்ளது. கதவு எண். 443. மைலாப்பூரிலிருந்து வந்தால் எல்டாம்ஸ் ரோடு முடிவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.