பாபாவிடம் ஒரு பிரார்த்தனை!

என் சக எழுத்தாளர் ஒர்த்தர் எழுதினார். ஒரு கோவில் திருவிழாவில புள்ள இல்லாத பொம்பளைங்கள்ளாம் கூடி அங்கெ சுத்திக்கிட்டிருக்கிற பசங்களோட “கூடி” புள்ள பெத்துக்குவாங்க. இதான் இந்தக் கோவில் திருவிழாவுல பழக்கம். எந்த ஜாதிப் பொம்பளைங்க, எந்த ஊர்க் கோவில்னும் பேர் ஊர் போட்டு எழுதினதால எழுத்தாளரைக் கொலை பண்ணப் போறோம்னு ரெண்டு மூணு பேர் கிளம்ப, உடனே கம்யூனிஸ்ட்காரங்க இதை இந்தியா பூராவும் எடுத்துட்டுப் போனாங்க. ஊர் ஒலகம்லாம் ஒரே சப்போர்ட்டு. மேட்டர் நியூயார்க் டைம்ஸ்லேல்லாம் வந்துச்சு. இதுவரைக்கும் பாடப் புஸ்தகத்தைக் கூட தொட்டு இருக்காத ராகுல் காந்தி கூட அந்த எழுத்தாளரோட மேற்படி புஸ்தகத்தை வாங்கிப் படிச்சாரு. மஹாபாரதத்தைத் தவிர வேறு இலக்கியம் பக்கம் தலை வைத்திருக்காத சோவே தலையங்கமெல்லாம் எழுதினாரு. எழுத்தாளருக்கு நோபல் கிடைக்குமான்னு விசாரிச்சேன். சேச்சே உன் சின்ன புத்தி இன்னுமா போகலேன்னு சொல்லி என் நண்பர் சொன்னது, அந்த எழுத்தாளர் நோபல் கமிட்டீலயே இருக்காராம்.

இப்போ கமல். இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்தூன்னு சொல்லி மோடியையே பதில் சொல்ல வச்சுட்டாரு.

இப்டி அடியேனுக்கும் எதுனாச்சும் வழி காட்டுங்க பாபா…