வனம் ஏகுதல்

வனத்துக்குச் செல்லும் போது உங்கள் கண்களையும் செவிகளையும் இறுக மூடிக்கொண்டு செல்லாதீர்கள். வனத்திலிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது.

இந்த வாக்கியத்தின் ஆரம்பத்தில் “நான் உங்களுக்குத் தீர்மானமாய்ச் சொல்லுவேன்” என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அது தீர்க்கதரிசிகளின் மொழி என்பதால் ரத்து செய்து விட்டேன்.