சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் – உதாரணமாக, IIT, IIM – ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். நன்றாகக் கால் மேல் கால் போட்டபடியே கேட்கிறான். யாருமே சத்குரு என்று அழைப்பதில்லை. சார் என்றே அழைக்கிறார்கள். கடுமையான கேள்விகளெல்லாம் கேட்கிறார்கள். you guys என்று ஜக்கியைக் குறிப்பிடுகிறான் ஒரு மாணவன். அது எல்லாவற்றுக்குமே மிகப் பொறுமையாக, மிக விளக்கமாக பதில் சொல்கிறார் ஜக்கி. சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களுக்கும் அவர் பதில் வைத்திருப்பதால் அவரை ஜீனியஸ் என்றே அழைக்கலாம். கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில்களை பாக்கெட்டிலிருந்து எடுத்து எடுத்துக் கொடுக்கிறார்.
ஆனால் உலக அளவில் சிந்தனைத் துறையில் இந்தியா நக்கிக் கொண்டு கிடப்பதற்கு கார்ப்பொரேட் குருமார்களிடம் கேள்வி கேட்டு, உரையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களே காரணம். இந்த மாணவர்கள் யாருக்கும் ஒரு இந்திய எழுத்தாளனைக் கூட தெரியாது என்பதே எதார்த்தம். இண்டெலெக்சுவல் விஷயங்களையும் ஆன்மீகவாதிகளிடம்தான் பேசுவோம், உரையாடுவோம் என்று நினைக்கும் இளைய சமுதாயத்தை என்னவென்று சொல்வது? ஜே.என்.யூ.வில் எண்பதுகளில் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் ஜாக் தெரிதாவோடு உரையாடினார்கள். என் காலத்தில் கல்லூரிகளில் ஜெயகாந்தன் பேசினார். இப்போது சினிமா நடிகர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களும் பேசுகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் கார்ப்பொரேட் குருமாரை அழைக்கும் அளவுக்குக் கூட உயரவில்லை. அதெல்லாம் ஐஐடி ஐஐஎம் போன்ற ரொம்ப உயர்தர ஐந்து நட்சத்திர கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடக்கிறது. அதாவது, அவர்கள்தான் ஜக்கியோடு உரையாடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சினிமா நடிகர்களும், தொலைக்காட்சி ஆட்களும் லும்பன். கார்ப்பொரேட் குருமார் இண்டெலெக்சுவல்.
ஆனால் அந்த எலீட் மாணவர்களும் என்னைப் பொறுத்தவரை லும்பன் தான். படித்த லும்பன்கள். educated philistines. ஏனென்றால், இவர்களுக்கும் எழுத்தாளர்கள் என்று ஒரு இனம் இருப்பதே தெரியவில்லை. யாரிடம் எதைப் பேசுவது, உரையாடுவது என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட படித்த லும்பன்கள்தான் – அதாவது ஜக்கி போன்ற மிக மிக intelligent குருமார்களிடம் கால் மேல் கால் போட்டபடி you guys என்று கேள்வி கேட்பவர்கள்தான் நாளை ஐஐஎம் டிகிரியும் ஐந்து லட்சம் சம்பளமும் வாங்கிய நிலையில் இஸ்கானிலோ, ஈஷாவிலோ சரண் அடைகிறார்கள்.
இன்னும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு இந்த நாட்டுக்கு கதி மோட்சம் இல்லை.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai