பூனை உணவு

பூனைகளுக்கு நாங்கள் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு அளிப்பது சில சக குடியிருப்புவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. கடுமையாக நெருக்கடி கொடுக்கிறார்கள். கார் வீணாகி விட்டது; ஸ்கூட்டர் வீணாகி விட்டது என்றெல்லாம் தொடர்ந்து புகார். எதுவும் வீணாகவில்லை; பொய்ப் பித்தலாட்டம். சரி, எடுத்து வாருங்கள், நான் என் செலவில் சரி செய்து கொடுக்கிறேன் என்று அவந்திகா சொன்னதும் வாயை மூடிக் கொண்டார்கள்.

பூனைகளால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதே உண்மை. அவை காலையில் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் விடும். பிறகு இரவு எட்டு மணிக்குத்தான் வரும்.

வரும் ஜனவரியில் வீடு மாற்றி விடலாம் என்று இருக்கிறோம். இந்த இடத்திலேயே தொடர்ந்து இருப்பது கடினம். ஒருநாள் பூனைகளுக்கு நான் உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆள் காரை விர்ரென்று எடுத்துக் கொண்டு போனார். நானும் பூனைகளும் பதற்றத்துடன் விலகி ஓட உணவுப் பண்டங்களெல்லாம் தரையில் சிதறியது. இங்கே இருப்பது எனக்கும் அவந்திகாவுக்கும் ஆபத்து.

நாளை லெபனான் கிளம்புகிறேன். பூனை உணவு தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் அனுப்பி வையுங்கள். எனக்கு எழுதினால் முகவரி அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
whiskas WET cat food adult salmon flavor ஊரிலிருந்து திரும்பியதும் எல்லாவற்றும் மீனை வாங்கிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். மீன் இதை விடப் பல மடங்கு மலிவு.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai