க்ராஸ்வேர்ட் புத்தக விருது – மும்பை விழா அழைப்பு

2011இல் அசோகமித்திரனின் நாவல் மானஸரோவர் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று அவரும் அவரது மொழிபெயர்ப்பாளரான கல்யாணராமனும் மும்பை சென்றது பற்றி மிக நெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். அப்போது முதல் பரிசு பெற்றது Omair Ahmed’s Jimmy, The Terrorist. 2011க்குப் பிறகு தமிழிலிருந்து யார் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நானும் நந்தினியும் செல்கிறோம். Conversations with Aurangzeb க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு வாசகர்களின் வாக்கு எண்ணிக்கையை வைத்து முதல் … Read more

புருஷன் – மீண்டும்

புருஷன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். பத்தாயிரம் வார்த்தைகள். அரம்யா என்பவளின் கதை. அவளைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட ரகுராம் என்பவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. இந்த முறை படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் கம்மியான எதிர்பார்ப்புதான் இருந்தது. ”என்னத்தெ எழுதிடப் போறாரு, தம்பி கிட்ட மொழி ஆளுமை கிடையாது, மொழிதான் இலக்கியத்துக்கே ஆணி வேர், கதையைச் சொல்வாரு, அது பயங்கரமாத்தான் இருக்கும், பாத்துக்குவோம்” என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. ரகுராம் … Read more

அந்தேரியில் மூன்று தினங்கள்…

நான் ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்காவிட்டால் உலகப் புகழ் பெற்ற சமையல்காரனாக இருந்திருப்பேன். இப்போதும் என் மதம் உணவுதான். ஃபுல்காவும் கருப்பு சன்னா (கொண்டக்கடலை) கறியும் கொடுக்கவில்லை என்று ஒரு சிநேகிதியின் மேல் பல காலமாக கொலைவெறியில் இருக்கிறேன். கடையில் ஃபுல்கா கிடைக்கும். ஆனால் கருப்பு சன்னா கறி கிடைப்பதில்லை. வெளுத்த சன்னா கறிதான் கிடைக்கிறது. அதுவும் வீட்டில் செய்வது போல் இல்லை. கைலாஷ் பர்பத்திலேயே இதுதான் லட்சணம். நானே செய்து சாப்பிடலாம். அதற்கு நேரமோ பொறுமையோ இல்லை. … Read more

வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

நான் சமூகத்தைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஒட்டு மொத்தமாகவே தமிழர்களின் அறிவுத் தரம் அதல பாதாளத்துக்குப் போய் விட்டது. ஸாஃப்ட்வேர் துறையில் றெக்கை கட்டிப் பறக்கிறார்கள். மாதம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்க ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் அறிவு? பூஜ்யம். வால்டேர் என்று தமிழில் எழுதினால் Valdare என்று உச்சரிக்கிறார்கள். Voltaire என்று ஒரு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் இருந்தார், காலத்தால் கார்ல் மார்க்ஸுக்கும் முந்தியவர். மனித வரலாற்றில் தனி மனிதரின் கருத்துச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்தவர் … Read more

இரண்டு புத்தகங்கள் தயார்…

”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பும் ”இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…” என்ற சிறுகதைத் தொகுப்பும் தயார் நிலையில் உள்ளன. இன்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வரும். ”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பை என் இனிய நண்பரும் வேளாண் விஞ்ஞானியுமான சி. கற்பகத்துக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

புருஷன்

தலைக்கு மேல் வெள்ளம் போவது போல் இருக்கிறது வேலை. சுமார் இருபது புத்தகங்களைத் தொகுத்து ஸ்ரீராம் எனக்கு அனுப்பி மூன்று ஆண்டுகள் இருக்கும். நான் தான் புதிதாக எழுதுகிறேன் புதிதாக எழுதுகிறேன் என்று சொல்லியபடி புதிதாகவே எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது புத்தக விழாவில் ஒரு பத்து புத்தகங்களையாவது கொண்டு வந்து விடலாம் என்று எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்ட பொருளைக் கொண்டு கட்டுரைகளைத் தொகுத்ததில் ஸ்ரீராம் ஏகப்பட்ட மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறார். எனக்கு ஒரு மணி நேரத்தில் … Read more