ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் & எக்ஸைல்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு  கலா கௌமுதி என்ற பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.  கலா கௌமுதி மலையாளத்தின் புகழ்பெற்ற இலக்கியப் பத்திரிகை.  இது ஒரு வாரப் பத்திரிகை என்பதும் நம் கவனத்துக்குரிய விஷயம்.  மேலும், இதன் ஸர்க்குலேஷன் ஒரு லட்சம் என்பதிலிருந்து மலையாளிகளின் இலக்கிய வாசிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கலா கௌமுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.   ராஸ லீலா நாவலே … Read more

மலேஷியப் பயணம்

மலேஷியப் பயணம் இனிதே முடிந்து நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.  முதலில் இந்தப் பயணத்துக்குக் காரணமாக அமைந்த திருமாறனுக்கு நன்றி.  மேலும், பாலமுருகன், வல்லினம் நவீன், சிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, தயாஜி, பாண்டியன், டாக்டர் முல்லை ராமையா மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி. சுவாமிஜியின் ஆசிரமத்தில்தான் இரண்டு தினங்கள் தங்கியிருந்தேன்.  சுவாமிஜியின் அன்பு மறக்கவே முடியாதது.  அவரே எனக்கு தோசையும் காப்பியும் போட்டுக் கொடுத்தார். தோசைக்கும் காப்பிக்கும் பிறகு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  … Read more

தீபாவளி ஸ்பெஷல் ஆன்மீகக் கதை (1)

ஆன்மீகவாதிகள் ஏன் இத்தனை முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போதெல்லாம் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.  இப்போதெல்லாம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இப்போதுதான் அந்த ஜீவராசிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டாகி இருக்கிறது.  ஒரு எழுத்தாளனோடு மனைவியாக வாழ்வது ரொம்பக் கஷ்டம் என்று பல பெண்கள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.  பாரதியின் மனைவியே அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இதேபோல், ஒரு நடிகனின் மனைவியும் புலம்பலாம்.  ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியோ மந்திரியின் மனைவியோ பேராசிரியரின் மனைவியோ ஸாஃப்ட்வேர் நபரின் … Read more