அடுத்த ஆட்டம் ஆரம்பம்…

இவரைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இவரைப் பற்றி எந்த விமர்சகரும் விமர்சித்தோ பாராட்டியோ எழுதியதில்லை.  இவரது நூல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வாசகர்கள் இவர் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள்.  ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) நண்பர்.  மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) இவரைப் பற்றிப் பெரிதும் சிலாகித்திருக்கிறார்.  நீட்ஷே (Nietzsche), மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) இருவரும் இவரது எழுத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் விட்ஜென்ஸ்டைன் (Wittgenstein), ஹெடேக்கர் … Read more

மகிழ்ச்சிக்கான திறப்பு உங்கள் பாக்கெட்டிலேயே இருக்கிறது!

இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கட்டுரை பணத்துக்கும் மனிதனுக்கும், பெண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய என் மேனிஃபெஸ்டோ என்று சொல்ல்லாம்.  பணம் பற்றி இதுபோல் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதும், இந்தக் கட்டுரை அவற்றின் சாரம் என்று கொள்ளவும்.   ”காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை.  நம்ப முடியாத அதிசயம்.” சென்ற … Read more

ஜூ 30 பயிலரங்கம்: சில குறிப்புகள்

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது.  இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சேர்மன் கருணாநிதி, பவா செல்லத்துரை, இந்தப் பயிலரங்க யோசனையை எனக்குள் விதைத்த மதிவாணன், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கரன், கல்லூரி நிர்வாகி சக்தி கிருஷ்ணன், என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரன், மற்றும் பண உதவி செய்த நண்பர்கள்.  இவர்கள் … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 18

Dear Charu,  உலக சினிமா பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு படங்களையும் நான் mubi , Roger ebert , letterboxd போன்ற தளங்களில் முன்னமே அறிந்திருந்தாலும் அவற்றை பார்க்கத் தோன்றியதேயில்லை. இது போன்ற படங்கள் பெரும்பாலும் கண்களுக்கு விருந்தாக (Wong Kar-wai  படங்களை போல) இருப்பதில்லை. நீங்கள் விளக்கிய பிறகுதான் அழகியலுக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற படங்களை  ரசிப்பதற்கு அதிகப்படியான வாசிப்பு தேவைப்படுகிறது. ஒரு கலைப்படைப்பை  அவ்வளவு … Read more

பயிலரங்கில் கலந்துகொள்வோர் கவனத்திற்கு…

ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன? என் நோக்கம் என்ன? இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஒருவராவது உலகமே வியந்து போற்றும், அதிசயிக்கும் ஒரு படத்தை உருவாக்கி விட வேண்டும். அப்போது அவர் என் பெயரைக் குறிப்பிட வேண்டும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. இலக்கணத்தையும் கலையையும் நான் கற்றுக் கொடுத்து விடுவேன். … Read more