இனவாதம்

*** என் நாவல் ஒன்று சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பதிப்பக நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட குறும்பட்டியலில் என் நாவலும் இருந்தது. விஷயம் வெளிவந்து பத்து நாள் இருக்கும். அதை நான் எந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றால், இங்கே என் தளத்தில் அந்தச் செய்தியையே நான் வெளியிடவில்லை. இதிலிருந்தே நான் அந்தச் செய்தியை மதிக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏன் மதிக்கவில்லை என்றால், இதேபோல் பல முறை என் நாவல்கள் குறும்பட்டியல்களில் இடம் பெற்று கடைசிப் … Read more

Suck my tongue…

தலாய்லாமாவின் ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்து, கூடவே தன் நாக்கையும் நீட்டி, suck my tongue என்று சொல்லும் காணொலியை இதற்குள் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.  இந்தச் சம்பவம் முழுமையும் ஒரு பொதுவெளியில் நடந்திருக்கிறது.  பலரும் இதை ஆர்வத்துடன் தங்கள் கைபேசியால் விடியோ எடுக்கிறார்கள்.  யாருக்கும் இந்தச் சம்பவத்தின் விளைவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை.  நூறு ஆண்டுகளுக்கு முன்னே திபெத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது வேறு விஷயம்.  ஆனால் இன்று தலாய்லாமா உலகப் பிரசித்தி பெற்றவர்.  … Read more

விடுதலை : ஒரு பிளாஸ்டிக் அனுபவம்

வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும்.  பொதுவாக தமிழில் பொழுதுபோக்குப் படங்கள் என்பவை அருவருப்பாகவும் ஆபாசமாகவுமே இருக்கின்றன.  விஜய், அஜித், ரஜினி ஆகியவர்களின் படங்களை உதாரணம் சொல்லலாம்.  ஆனால் வெற்றிமாறன், மணி ரத்னம், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் பொழுதுபோக்கு சினிமாவே என்றாலும் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் தமிழில் இவர்களின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் … Read more

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-freedom

கொக்கரக்கோ எழுத்தாளனான கதை

கொக்கரக்கோவை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன்.  மனிதனாகப் பிறந்த ஜென்மங்கள் எல்லாமே அடுத்த மனிதனை இம்சை செய்வதற்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறோம் என்பது போல் பழகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொக்கரக்கோ மட்டும் யார் வம்புக்கும் போகாமல், யாரையும் இம்சை செய்யாமல் வாழ்ந்தான்.  அதனாலேயே எனக்கு அவனைப் பிடித்து விட்டது என்று சொல்லத் தேவையில்லை.  ஆனால் கொக்கரக்கோவிடம் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் எனக்குப் பிடித்தும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது.  பிடித்திருந்ததற்குக் காரணம், லௌகீகம்.  நான் லௌகீகத்தில் … Read more