ஹைதராபாத் சந்திப்பு

இந்த வாரம் வியாழக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு இரவு வரை (16இலிருந்து 19 வரை) ஹைதராபாதில் இருப்பேன், நண்பர்கள் யாரேனும் சந்திக்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன். (charu.nivedita.india@gmail.com) ஒரு நண்பர் ஃபேஸ்புக் காமெண்ட்டில் விருப்பம் தெரிவித்திருந்தார். மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சிலாக்கியமாக இருந்திருக்கும். நான் ஃபேஸ்புக் காமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பதில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். இன்னொரு நண்பர் இன்பராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இதற்கு முன் ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். ஃபெப்ருவரி … Read more

NFT இன்னும் கொஞ்சம்

இரண்டு விஷயங்கள்: என்.எஃப்.டி. மூலம் வாங்கும் நூல் ஒரு டிஜிட்டல் அஸெட் என்பதால் இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் நூல் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கூட விற்கலாம். காரணம், இந்தியாவின் முதல் என்.எஃப்.டி. நூல் அராத்துவின் நோ டைம் டு ஃபக். இரண்டாவது, அந்த நெடுங்கதையைப் படித்து விட்டு நான் என்ன சொன்னேன் என்பதை அந்த நெடுங்கதைக்கு ஒரு சிறிய முன்னுரையாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் அந்த டிஜிட்டல் நூலில் உள்ளது.

NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு … Read more

சாருவிடம் இருந்து மற்றும் ஓர் அற்புதம்: நரேஷ் கரினினா

“ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” சமகால எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் அன்பை பிழிந்து சாறு எடுத்துக்கொடுத்து கொண்டிருக்கும் தருணத்தில் அன்பைமறுசீராய்வுக்கு உட்படுத்திய “ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” நாவல் தமிழ் எழுத்துலகில் முக்கியத் தடம் என்பேன். இது போன்ற ஒரு படைப்பை இனி யாராலும் தரமுடியாது. சாருவின் பள்ளியிலிருந்து வருபவர்கள் கூட தொடத் தயங்கும் களம். சில எழுத்தாளர்கள் அன்பை உயிர் உள்ள ஜீவன்களில் கொட்டித்தீர்த்து விட்டு இப்பொழுது சடப்பொருட்கள், நகரங்கள் மீதெல்லாம் காட்டத் தொடங்கி விட்டார்கள். … Read more

பொறாமை – 3

NFT மூலம் புத்தகங்களைத் தயாரிக்க – அதாவது, அராத்து செய்திருக்கும் தரத்தில் – இரண்டு லட்சம் ரூபாய் ஆகும். நான் எழுதியிருந்தபடி ஐம்பதாயிரம் என்பது தப்புக் கணக்கு. வேலை செய்து கொடுப்பவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நான்கில் ஒரு மடங்கு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும், இந்த டிஜிட்டல் நூலை இலக்கியம் தெரியாதவர்கள் இந்த அளவுக்குத் தரமாக உருவாக்க இயலாது. உதாரணமாக, இதன் இசையமைப்பாளர் சத்ய நாராயணாவிடம் இதன் இசை பற்றி நான்கு மணி நேரம் உரையாடியிருக்கிறார். … Read more