ஒரு இன்ப அதிர்ச்சி

பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை.  தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன்.  தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும்.  அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன். நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு … Read more

கொழுந்து விட்டு எரியும் பிரச்சினை

வட இந்தியாவில் கொழுந்து விட்டு எரியும் ஒரு பிரச்சினை பற்றி Deccan Chronicle, The Asian Age (London and All India edition) இல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். http://www.asianage.com/columnists/honey-trapping-raunchy-numbers-076

அபிராமி

நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனும் நானும் பூங்காவை அடுத்து உள்ள மஹாமுத்ரா உணவகத்துக்கு காப்பிக்குப் போய் விடுவோம்.  நாங்கள்தான் எப்போதும் முதல் வாடிக்கையாளர்கள்.  அன்றைய தினம் காலையில் வாக்கிங் போக முடியாததால் மாலை ஆறு மணி அளவில் போனேன். மாலை நேரமாதலால் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  இந்தியாவில் சமையல் வேலை உட்பட வீட்டு வேலைகள் யாவும் பெண்களே செய்வதால் அவர்களால் காலையில் வர முடிவதில்லை … Read more