NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு … Read more

நிறமேறும் வண்ணங்கள் – அராத்து – சிறுகதை தொகுப்பு இலக்கிலாக்கதைகள்

வெறும் ஓர் அதிர்ச்சி விளைவுக்காக அல்லது மரபுகாப்பதற்காக இழவுகூட்டும் இற்றைத் தமிழ் எழுத்தாளர்களைக் கிண்டலடிக்குமொரு நகை-இயல்பின் எழுத்துக்கலை வாரணர் அராத்து. எனது இந்தத் தமிழ்நடை உங்களை எரிச்சலுறுத்தகூடும். என்ன செய்ய, சின்ன வயதிலேயே இப்படிக் கார்வைபட்டுப்போன என் தனித்தமிழ் மூளை, மாற்றி யோசிக்கவும் மக்கர் பண்ணுகிறது! மாறாக, //தெருவில் தூறல் விடவில்லை. ஆனாலும் தூறலை யாரும் மதிக்கவில்லை. தெருவில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் டி ஷர்ட்டை கீழே இறக்கி, போதையேறிய யாரோ ஒருவன் அவளின் முலையை முத்தமிட்டான். … Read more

No Time To Fuck: அராத்துவின் நெடுங்கதைக்கு என் சிறிய முன்னுரை

மௌனியின் அழியாச் சுடர்கள் சிறுகதை நாயகியின் வயது பதின்மூன்று.  1930களில் எழுதப்பட்ட சிறுகதை. லொலிதாவின் (நொபக்கோவ்) வயது பதின்மூன்று.  ஜூலியட்டின் வயது பதின்மூன்று.  என்னுடைய உன்னத சங்கீதம் நாயகிக்கும் அதே வயதுதான்.  ஒரு காலத்தில் பதின்மூன்று வயது என்பது பெண்களின் திருமணத்துக்கு மிகவும் காலம் கடந்த வயதாக இருந்தது.  அப்போதெல்லாம் பெண்களுக்கு ஏழு எட்டிலேயே மணம் முடித்து விடுவார்கள்.  இப்போது சர்வ சாதாரணமாக முப்பதைத் தாண்டுகிறது.  பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இருபத்தோரு … Read more

த அவ்ட்ஸைடர் : சில விளக்கங்கள் : அராத்து (29)

விஷ்ணுபுரம் விழா மேடையில் சாரு என் பெயரை சொல்லவில்லை என சில கமெண்டுகள். இந்த சில, பல ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த சின்ன பதிவு. அது ஒரு எர்ரர் (error)அவ்வளவுதான். இதை தமிழில் தவறு என்றோ தப்பு என்றோ எழுத முடியாது. வேறு அர்த்தம் கொடுத்து விடும். சாரு என் பெயரை இதுவரை தேவைக்கதிகமாக சொல்லி வந்திருக்கிறார். இந்த விழாவில் நன்றி தெரிவிக்கும் விதமாக பலரின் பெயரை சொன்னார். அந்த லிஸ்டில் என் பெயர் வந்திருக்க … Read more

நாங்கள்ளாம் அந்தக் காலத்துல… – அராத்து

நாகார்ச்சுனனின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்றுதான் நண்பர்கள் சொன்னார்கள். நான்தான் கொஞ்சம் பழைய நினைப்பில் போட்டு விட்டேன். அந்தக் காலத்தில் நான் இந்த ஆட்களோடு சேர்ந்து கொண்டு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு பக்கம் மேற்கத்திய என்று ஆரம்பித்தாலே குண்டாந்தடியால் அடிக்கும் விக்ரமாதித்யன் கோஷ்டி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இந்த snobbish கும்பல். இத்தனை ஸ்நாபிஷ் ஆக இருந்ததால்தான் பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்த அமைப்பியல் கோஷ்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேற்குலகம் பிடிக்காவிட்டாலும் … Read more