சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

தியாகராஜா நாவலை எழுதுவதன் நோக்கம் என்ன?

இந்தக் கேள்விக்கு இதுவரை நான் சொல்லி வந்த பதில் இதுதான்: எந்த நோக்கமும் இல்லை. எனக்குக் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு தபால்காரன். அவ்வளவுதான். ஆனால் தியாகராஜா நாவலுக்கு அப்படிச் சொல்ல மாட்டேன். சமீபத்தில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, கர்னாடக சங்கீதம் பரவலாக ரசிக்கப்பட வேண்டும். ஒரு கச்சேரிக்குப் போனால் அங்கே ஐநூறு பேர் இருந்தால் அதில் நானூற்றுத் தொண்ணூற்றைந்து பேர் … Read more

ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் ஆன்மீக நாவல் எழுதலாமா?: வளன் அரசு

பின் நவீனத்துவம் எதையுமே ஒதுக்கியதில்லை. அதன் முக்கியமான அம்சம் தேர்ந்தெடுத்தல். அதாவது உங்களுக்கு முன் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அல்லது நீங்கள் வேட்டைக்கு செல்வதாக கற்பனை செய்துகொள்ளுகள். காட்டில் பல்வேறு விலங்குகள் இருக்கிறது. பார்க்கும் அத்தனை விலங்குகளையும் வேட்டையாடுதல் சரியான வேட்டையல்ல. ஒரு வேட்டைக்காரன் தன் வேட்டையை தெரிவு செய்கிறான். அப்படி தேர்ந்தெடுத்ததும் தன் வேட்டைக்காக காத்திருக்கிறான் அல்லது காட்டில் சுற்றி வருகிறான். அப்போது அவன் முன் தன் வேட்டையைவிட பெரிய … Read more

ஒரு வேண்டுகோள்

நேற்றும் முந்தாநாளுமாகச் சேர்ந்து ஒரு பதினைந்து மணி நேரம் எழுதினேன். நாலைந்து அத்தியாயங்களை முடித்து விடலாம் என்று திட்டம். பார்த்தால் ஒரே ஒரு அத்தியாயம்தான் முடிந்தது. அதுவும் இரண்டாயிரம் வார்த்தைகள் கூட வரவில்லை. நாவல் அத்தனை இறுக்கமாக இருக்கிறது. தினமும் நான்கு மணி நேரம்தான் உறங்குகிறேன். ஆனால் காலை நடைப்பயிற்சியை மட்டும் விடுவதில்லை. என்னுடைய பதினேழாவது வயதிலிருந்து முப்பது வயது வரை தினமும் பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் பழக்கம் இருந்தது. நாகூரிலும் தில்லியிலும் அதற்கேற்ற பெரிய … Read more

தியாகராஜா

இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். இன்னும் ஒரு முப்பது அத்தியாயங்கள் எழுத வேண்டும். ஏற்கனவே எழுதி வைத்ததுதான். செப்பனிடும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த வேலை எழுதும் வேலையை விட அதிக நேரம் எடுக்கிறது. ஆயிரம் பக்கம் ராஸ லீலாவுக்கு செலவிட்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுக்கிறது இந்த நாவலுக்கு. ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் எழுதுவதற்கு ஏராளமான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நாவலை நீங்கள் ஒரே அமர்வில் இரண்டு மூன்று … Read more

தியாகராஜா ஸ்பெஷல் எடிஷன்: ஒன்பது பிரதிகள்

ஒருமுறை சீனி எனக்குப் பிடித்த நூறு புத்தகங்களின் பெயர் கேட்டார்.  கொடுத்தேன்.  பார்த்து விட்டு அவர் ஒரு ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்.  அதில் உள்ள தொண்ணூறு புத்தகங்கள் ஓஷோவின் நூறு நூல் பட்டியலில் இருந்ததாம்.  அதில் இரண்டு புத்தகங்கள் மிகெய்ல் நெய்மி எழுதிய தெ புக் ஆஃப் மிர்தால், கலீல் ஜிப்ரான் எழுதிய ப்ராஃபட்.  இருவரும் நண்பர்கள்.  இருவரும் லெபனானைச் சேர்ந்தவர்கள்.  இந்த இரண்டில் ப்ராஃபட் என்ற நூல் பைபிள் அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம்.  … Read more