ஆரோவில் சிறுகதைப் பட்டறை

வரும் 28ஆம் தேதி பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வன இல்லத்தின் வனப் பகுதியில் ஒரு சிறுகதைப் பட்டறை நடக்க இருக்கிறது. ஏற்கனவே செய்தி தெரிவித்திருக்கிறேன். மூன்று சிறுகதைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வினித்தைத் தொடர்பு கொள்ளவும். விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுகதைகள்: ஆண்டன் செகாவின் வான்கா. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எங்கே என்று எனக்கு எழுதிக் கேட்காதீர்கள். தேடினால் பத்து நொடியில் கிடைக்கும். இரண்டாவது கதை மௌனியின் அழியாச் சுடர். … Read more

நீதி போதனையும் இலக்கியமும்

நீதி சொன்னால் அது இலக்கியத்தில் மட்டம் என்று எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு.  எனக்கும்தான்.  இலக்கியம் ஒன்றும் நீதி போதனை அல்ல.  திருடன் மணியன் பிள்ளை என்ற சுயசரிதத்தைப் படித்தால் யாருக்கும் திருடவே தோன்றாது.  சார்வாகனின் முடிவற்ற பாதையைப் படித்தால் யாருக்கும் அடுத்தவர் பணத்தின் மீது ஆசை வராது.  அறம் படித்தால் யார் வயிற்றிலும் அடிக்கத் தோன்றாது.  ஆனால் காமரூப கதைகள், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, ஓப்பன் பண்ணா எல்லாம் படித்தால் அதிலிருந்து நாம் எடுத்துக் … Read more

புத்தக விழா ஊறுகாய்க் கடையில் இன்று மூன்றரை மணி…

இன்று மாலை மூன்றரை மணிக்கு புத்தக விழாவின் வெளியே ஞானாம்பிகா உணவகத்துக்கு எதிரே உள்ள ஊறுகாய்க் கடைக்கு வருவேன்.  நான் ஒரு ஊறுகாய் அடிக்ட்.  இதை வைத்துக் கொண்டு எல்லோரும் ஊறுகாய் சாப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பெருகி விடும்.  என் வாழ்க்கை முறை எதுவும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கானதல்ல.  நான் ஒன்றரை மணி நேரம் யோகாவும் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சியும் செய்கிறேன்.  அம்மாதிரி ஆள் ஊறுகாய் சாப்பிடலாம்.  இதுவரை வாழ்நாளில் … Read more

அன்பு : ஒரு கொண்டாட்டம்

அன்பு நாவலை வாசகர்கள் கொண்டாடுவதைப் பார்த்து விட்டு அடிக்கடி இப்படி சிறிய நாவல்களை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்களின் கொண்டாட்டம் ஏன் என்று புரிகிறது. ஒவ்வொரு சம்பவத்தோடும் ஒவ்வொரு ஆளோடும் வாசகர் அல்லது வாசகி தன்னைப் பொருத்திப் பார்க்கிறார். அவருக்கு அப்படி எப்போதோ நடந்திருக்கிறது. அல்லது, அவரே அப்படி ஏதாவது செய்திருக்கிறார். என் நண்பர் ஒருவர் நாவலைப் பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்” மொமெண்ட் என்று எழுதியிருந்தார். இதுவரை நான் … Read more

நிறமேறும் வண்ணங்கள் – அராத்து – சிறுகதை தொகுப்பு இலக்கிலாக்கதைகள்

வெறும் ஓர் அதிர்ச்சி விளைவுக்காக அல்லது மரபுகாப்பதற்காக இழவுகூட்டும் இற்றைத் தமிழ் எழுத்தாளர்களைக் கிண்டலடிக்குமொரு நகை-இயல்பின் எழுத்துக்கலை வாரணர் அராத்து. எனது இந்தத் தமிழ்நடை உங்களை எரிச்சலுறுத்தகூடும். என்ன செய்ய, சின்ன வயதிலேயே இப்படிக் கார்வைபட்டுப்போன என் தனித்தமிழ் மூளை, மாற்றி யோசிக்கவும் மக்கர் பண்ணுகிறது! மாறாக, //தெருவில் தூறல் விடவில்லை. ஆனாலும் தூறலை யாரும் மதிக்கவில்லை. தெருவில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் டி ஷர்ட்டை கீழே இறக்கி, போதையேறிய யாரோ ஒருவன் அவளின் முலையை முத்தமிட்டான். … Read more