விக்ரம் : அராத்து

விக்ரம் இந்தப் பதிவு முதன்மையாக விக்ரம் படம் பற்றிய விமர்சனம் அல்ல. ஏனென்றால் , இந்தப் படத்தை விமர்சிக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வளவு ஒழுங்கீனமாக எடுக்கப்பட்ட படத்தை நான் சமீபத்தில் பார்த்த நினைவில்லை. தோன்றியதை எல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விட்டிருக்கிறார்கள். கதையில் , திரைக்கதையில் , காட்சிகளில் ஒரு தெளிவும் இல்லை. இது கிடக்கட்டும் , இந்தப் படம் எப்படி கமல் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய வெற்றி பெற்றது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறேன். … Read more

க்ளப் ஹவுஸ் கதை நேரத்தில் என் வாசிப்பு

ஃபாத்திமா பாபு கடந்த 298 நாட்களாகத் தொடர்ந்து க்ளப் ஹவுஸில் தமிழ்ச் சிறுகதைகளை வாசித்து வருகிறார். சாதனை என்ற சொல்லெல்லாம் சாதாரணம். அசாத்தியமான விஷயம். நாளை மறுநாள் சனிக்கிழமை 300ஆவது நாள். அந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ”உங்கள் கதையை நீங்களே படித்தால் என்ன?” என்று கேட்டார். அது அவரது பெருந்தன்மையும் அன்பும். கரும்பு தின்னக் கூலியா? விரைவில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்ஸேப் நாவலில் பாபரின் பேருரை ஒன்று வருகிறது. அதைப் படிக்கலாம் என்று முடிவு … Read more

நான்தான் ஔரங்ஸேப்… ஒரு சந்தேகம்…

பேய் வேகத்தில் ஔரங்ஸேப் நாவலின் செப்பனிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்.  நிச்சயமாகச் சொல்கிறேன், இதுவரை நான் எழுதியதில் இந்த நாவல் உச்சமாக இருக்கும்.  பிஞ்ஜில் வெளியாகி இருப்பது பக்க வரையறைகளுக்கு உட்பட்டு எழுதியது.  இப்போதுதான் அது முழுமையாகிக் கொண்டிருக்கிறது.  எடிட்டிங்கில் என்னைத் தவிர ஐந்து பேர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.  ஃபைஸ் காதிரி, கொள்ளு நதீம், ப்ரஸன்னா, பிச்சைக்காரன்.  மற்றொருவர் பெயரை இப்போதைக்கு வெளியே சொல்ல முடியாது.  அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்து நிறுத்துமாறு சொல்வார்கள், என் நலம் … Read more

the outsider – 3

எத்தனை பேர் சீலே வருவதற்கு ஆர்வப்பட்டு எழுதினார்கள் என்று கேட்டார் நண்பர்.  ஒத்தர் கூட இல்லை என்றேன்.  ”நீங்கள் எழுதியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் வர நினைப்பவர்களுக்குக் கூட அச்சம் வந்து விடும், இப்படியா பயமுறுத்துவது, எவன் வருவான்?” என்று கேட்டிருக்கிறார் ப்ரஸன்னா.  ப்ரஸன்னா அமெரிக்காவில் இருப்பவர்.  சென்னையிலிருந்து கடலூர் போவது போல் சாந்த்தியாகோ கிளம்பிப் போகலாம்.  சீலேயர்கள் அமெரிக்கர்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள்.  அமெரிக்கா ஒரு நரகம் என்று சீலேயர்களுக்குத் தெரியாது.  சீலேயின் வறுமை அவர்களை … Read more

the outsider – 2

நானும் ஆவணப்பட இயக்குனரும் வரும் ஆகஸ்ட் மத்தியில் சீலே செல்ல இருக்கிறோம். பயணமே இரண்டு தினங்கள். போக இரண்டு, வர இரண்டு. வேறு எளிய வழி இல்லை. அமெரிக்கா வழியில் சென்றால் நேரம் குறையும். ஆனால் அமெரிக்கர்களிடம் போய்த் தொங்க முடியாது. வீசாவுக்கான நேர்காணல் தேதி கிடைக்கவே மூணு மாதம் ஆகும். சீலேயில் 15 நாள். ஆக, மொத்தம் 19 நாள். எங்களோடு வர விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். போக வர டிக்கட் செலவு … Read more