the outsider – 1

துணுக்கு 1 ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக என் வீட்டுக்கு எதிரில் உள்ள பார்க்குக்குப் போனோம்.  மாலை நேரம்.  அங்கே கைலி அணிந்த ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.  கசாப்புக் கடையில் வேலை செய்பவராக அல்லது வெங்காய மண்டி ஓனராகவோ இருக்கலாம்.  அப்படி ஒரு தோற்றம்.  ஆனால் கிட்டத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு மைலாப்பூர் பிராமணர் என்று.   மைலாப்பூர் பிராமணர்கள் எந்த காஸ்ட்யூமில் இருந்தாலும் சொல்லி விடுவேன்.  காவலாளி இங்கே படம் பிடிக்கக் கூடாதே என்று புன்சிரிப்புடன் சொன்னார்.  … Read more

நான்தான் ஔரங்ஸேப்…

பல தினங்களாக இங்கே வரவில்லை. ஒரு வாரம் படப்பிடிப்பு.  மற்ற தினங்களெல்லாம் இரவு பகலாக ஔரங்ஸேப் செப்பனிடும் பணி.  இன்று வரை 400 பக்கங்களை செப்பனிட்டிருக்கிறேன்.  நாலு பேர் படிக்கிறார்கள்.  இதில் ஒருவர் அசுரன்.  அனுப்பினால் அரை நாளில் திருப்பி அனுப்பி விடுகிறார்.  நூறு நூறு பக்கமாக அனுப்புகிறேன்.  நூறு பக்கத்தை எப்படி ஒருவர் அரை நாளில் திருத்தம் செய்ய முடியும்.  செய்கிறார்.  இன்னும் 650 பக்கம் வரலாம்.  மொத்தம் 1,60,000 வார்த்தைகள் உள்ளன.  அநேகமாக அடுத்த … Read more

வள்ளலாரோடு ஒரு சம்பவம்

வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகும் போது கத்தியை எடுத்து விடுகிறார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் அல்லவா?  அது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.  அவர் ஒரு இனிமையான மனிதர்.  இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.  யாருக்கும் எந்தத் தீங்கும் நினையாதவர்.  மனதில் கூட.  அவர் எனக்கு நண்பரானார்.  அவர் சில மாதங்களுக்கு முன்புஎன்னிடம் ஒரு உதவி கேட்டார்.  அதை விவரிப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  அவர் … Read more

ஆவணப் படம்

இன்னும் ஐந்து ஆண்டுகளில் எனக்கு புக்கர் விருது கிடைக்கலாம்.  அதுவரை விடை பெறாமல் இருந்தால்.  கிடைக்காமலும் போகலாம்.  முன்னேயே சொன்னாயே என்று என்னைப் பிடிக்கக் கூடாது.  இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்கு புக்கர் முக்கியமல்ல.  அது ஒரு உதாரணம்.  ஒரு தோது.  புக்கரோ கிக்கரோ கிடைத்தால் எனக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள்தானே?  அப்போது சிலர் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள்.  கௌரவிக்கட்டும்.  எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால் முதல் வரிசையில் வினித் அமர்ந்திருப்பான்.  அவனிடம் … Read more

இசை நிலவு வைன்

இன்றைய நிலவு முழுமையாகக் காண்கிறது கண்டு வெகு காலம் ஆயிற்று வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் இசை வைன் நிலவு இசை நிலவு வைன் நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இரவு கழிந்தது காலை புலர்ந்தது நிலவைக் காணோம் அவனையும் காணோம்