ஔரங்ஸேப் 100 விழா (1)

ஔரங்ஸேப் – 100 விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.  விழாவின் விசேஷம் என்று ஏராளமாக உண்டு.  வெள்ளிக்கிழமை காலை (18 மார்ச்) என் அறைக்கு வந்தார் நண்பரும் வாசகருமான சிவபால கணேசன்.  பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.  நகை வைக்கும் சிறிய அலங்காரப் பெட்டி ஒன்றைக் கொடுத்து ஒரு சிறிய பரிசு என்றார்.  அதை வாங்கி ஒரு பக்கம் வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  பெட்டியைத் திறந்து பாருங்கள் என்றார்.  திறந்து பார்த்தால் ஒரு தங்க செய்னும் … Read more

முதல் நூறு: 15: எழுத்தாளர்களுக்குள் மண உறவு

கேள்வி:  ஒரு தொழிலதிபர் தன் தொழில் சார்ந்த ஒருவர் குடும்பத்துடனும், ஒரு திரைப்படக் கலைஞர் திரைப்படத்துறை சார்ந்த ஒருவருடனும் திருமண சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான துறைகளில் அப்படி பார்க்க முடிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் ஏன் தம் எழுத்துத் தொழில் சார்ந்த எழுத்தாளருடனோ, அவரது குடும்பத்தாருடனோ திருமண சம்பந்தம் செய்து கொள்வதில்லை? உலகில் அப்படி எங்கேனும், யாரேனும் செய்து கொண்டிருகிறார்களா?  (வாசகியாக வந்து பழகி மனைவியாய் மாறியதை எல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.) ஆர்.எஸ்.பிரபு, சென்னை. … Read more

ஔரங்ஸேப் 100 விழா

ஔரங்ஸேப் 100ஆவது அத்தியாயம் முடிந்ததை ஒட்டி ஆரோவில் கிராமத்தில் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவுக்கு வர விரும்புவோர் வினித்தைத் தொடர்பு கொள்ளலாம்.  வினித் எண்: 84384 81241 இந்த விழாவுக்கு ஆகும் செலவில் சிறு பகுதியைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் ரேஸர் பே மூலம் அல்லது நான் ஏற்கனவே கொடுத்துள்ள வழிகள் மூலம் அனுப்பலாம்.  ரேஸர் பே மூலம் அனுப்புவது மிகவும் சுலபம்.  ஒரு பட்டனை அமுக்கினால் நாம் அனுப்ப விரும்பும் தொகை உரிய … Read more

சினிமாவும் எழுத்தாளனும்: அராத்து

பின்வரும் குறிப்பு அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. இது என் கருத்தும் கூட. பாரதிராஜா தன்னுடைய படத்தின் ப்ரீவ்யூவுக்கு அவரேதான் எனக்கு ஃபோன் செய்து அழைத்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இப்போது அராத்து எழுதியதைப் படியுங்கள்: எனக்கு ஒரு போன்கால். தன்னை அசோஸியேட் இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , ஒரு படத்தின் ப்ரிவியூ ஷோவுக்கு அழைக்கிறார். சரிங்க என்று சொல்லி விட்டு நான் போகவில்லை. இதற்கு முன்பும் இதைப்போல “யார் யாரோ” சில படங்களுக்கு அழைத்தும் நான் … Read more

24. சொற்கடிகை: இருந்தும் இல்லாமல் இருத்தல்

என் அன்புக்குரிய வாசகி ப்ரியதர்ஷினி ஒரு கடிதத்தில் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டார்.  அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்தேன்.  டியரஸ்ட் சாரு என்று ஆரம்பித்திருந்த அந்த முதல் வார்த்தையில் எல்லையற்ற அன்பின் ஓர் வெளிப்பாட்டைக் கண்டேன்.  அக்கடிதத்தில் அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.  ஒன்று, என்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வு எதுவும் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் அந்த மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.  கடிதம் ”Despite such intolerant stuff happening around, you … Read more