Fall of a Sparrow…

எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு நாவலில் விடுபட்டு விட்ட இரண்டு சம்பவங்களைத் தருகிறேன். இதோடு இதை முடித்தும் கொள்கிறேன். இதற்கு மேல் இதைத் தொடர்வதற்கில்லை. 1.நான் ஏதாவது ஒரு ஐரோப்பிய மொழி பதிப்பாளரை மொழிபெயர்ப்புக்காக அணுகினால், என்ன விருது வாங்கியிருக்கிறீர்கள் என்கிறான். விஷ்ணுபுரம் விருது என்று சொன்னால் அதெல்லாம் அண்ணன் தம்பிக்குள் கொடுத்துக் கொள்வது, வேறு பெரிதாக ஏதாவது? என்று கேட்கிறான். சென்ற ஆண்டுதான் க்ராஸ்வேர்ட் விருது. இதற்கிடையில் புக்கர் கிக்கர் என்று போட்டியில் கலந்து … Read more

ஒரு இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும்?

என்னுடைய குறுநாவலை வாசித்து அதற்கு எதிர்வினையாக எழுதிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய எண்பது புத்தகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும் ராயல்டியை விட அதிகமாக என் கதைக்கு சன்மானம் அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் எழுதியிருந்தார். நீங்கள் இங்கே இருந்தால் இருப்பதிலேயே அதிகத் தரமான ஒயினை வாங்கிக் கொடுத்திருப்பேன். அது இயலாது என்பதால் இந்தத் தொகையை அனுப்புகிறேன் என்று ஒரு பெரும் தொகையை அனுப்பியிருந்தார். இன்னொரு சன்மானம். நூறு ரூபாய். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். … Read more

எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு (குறுநாவல் – விடுபட்டதும், சில எதிர்வினைகளும்…)

நாவலில் இந்த விவரம் விடுபட்டு விட்டது. சேர்த்துக் கொள்ளவும். பதிப்பகத்துக்கு எக்ஸ் என்ற நாமகரணம் சூட்டப்பட்ட புதிதில் பல நண்பர்கள் புவனேஸ்வரியிடமும் கோண்டி என்ற கோதண்டராமனிடமும் அந்தப் பெயர் பற்றிக் கேட்டார்கள். காரணம், உங்களுக்குத் தெரிந்ததுதான். எக்ஸ் என்ற நாவல் நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இந்தியாவின் மிக முக்கியமான ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நாவலின் பெயரில்தான் பதிப்பகத்துக்கும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் … Read more

மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்ற மாதம் என் வீட்டிற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த மிரட்டல் கடிதம் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸுக்கும் போனதால் போலீஸ் மற்றும் பாம் ஸ்க்வாடெல்லாம் வந்து வீடு முழுவதும் சோதித்தார்கள். பிறகு சில தினங்களுக்கு முன்பு அதேபோல் ஒரு மிரட்டல். அன்றைய தினம்தான் செங்கோட்டையில் வெடிகுண்டு வெடித்து பலர் மரணம். மீண்டும் பெரிய அளவில் பாம் ஸ்க்வாட் மற்றும் போலீஸ் வந்து வீடு பூராவும், குடியிருப்பு பூராவும் வெடிகுண்டுத் தேடல். இப்போது மூன்றாவது முறையாக … Read more

ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சி குறித்து…

பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி சேர்மன் தனசேகரன் தன் வரவேற்புரையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார்.  ”நம் கல்லூரியில் நடக்கும் எத்தனையோ விழாக்களில் இந்த நிகழ்ச்சியில்தான் முதல் முதலாக அரங்கத்தில் பல இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்க்கிறேன்.”    காரணங்கள் இரண்டு: ஒன்று, ஐரோப்பிய சினிமாவில் தணிக்கை கிடையாது.  ஐரோப்பியக் கலாச்சாரமும் இந்தியச் சூழலுக்கு முற்றிலும் மாறானது.  அங்கே நிர்வாணம் என்பது பொருட்டே இல்லை.  Father was away on business (இயக்குனர்: Emir … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்: நன்றி

பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நவம்பர் எட்டாம் தேதி நடந்த ஐரோப்பிய சினிமா குறித்த அறிமுக நிகழ்ச்சி காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஆறரைக்கு முடிந்தது.  என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி.  இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் அந்தக் கல்லூரியின் சேர்மனும் திண்டிவனத்தில் உள்ள தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு எம். தனசேகரன்.  அவர் தன் வரவேற்புரையில் தினமும் காலையில் எழுந்ததும் சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரின் தளங்களையும் … Read more