நாவலில் இந்த விவரம் விடுபட்டு விட்டது. சேர்த்துக் கொள்ளவும். பதிப்பகத்துக்கு எக்ஸ் என்ற நாமகரணம் சூட்டப்பட்ட புதிதில் பல நண்பர்கள் புவனேஸ்வரியிடமும் கோண்டி என்ற கோதண்டராமனிடமும் அந்தப் பெயர் பற்றிக் கேட்டார்கள். காரணம், உங்களுக்குத் தெரிந்ததுதான். எக்ஸ் என்ற நாவல் நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இந்தியாவின் மிக முக்கியமான ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அந்த நாவலின் பெயரில்தான் பதிப்பகத்துக்கும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் பெயர்க் காரணம் கேட்கப்படும் போதெல்லாம் கோண்டி சொன்ன பதில்: சேச்சே, கண்ணாயிரம் பெருமாளின் நாவலுக்கும் பதிப்பகத்தின் பெயருக்கும் சம்பந்தம் இல்லை; மால்கம் எக்ஸின் பெயரைக் கொண்டே நாங்கள் எங்கள் பதிப்பகத்துக்கு எக்ஸ் என்று பெயர் வைத்தோம்.
அதே கேள்வி புவனேஸ்வரியிடம் கேட்கப்படும் போதெல்லாம் அவர் சொல்லும் பதில்: Cristina Peri Rossi என்ற உருகுவே நாட்டுப் பெண் எழுத்தாளர் தனது புத்தகங்களை எக்ஸ் என்ற பதிப்பகத்திலிருந்துதான் வெளியிட்டார். அதை வைத்தே எங்கள் பதிப்பகத்துக்கும் அந்தப் பெயரை வைத்தோம்.
க்றிஸ்டினா பெரி ரோஸ்ஸியின் நாவல் ஒன்றை புவனேஸ்வரியிடம் கொடுத்து மேற்கண்ட தகவலைச் சொன்னதும் அடியேன்தான் என்பதையும் இங்கே விநயத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
***
இனி எதிர்வினைகள்:
டியர் சாரு,
எப்போதும் போல சிறிய பயணம். இரண்டு நாள்
கும்பகோணம் பக்கம்.
நீடாமங்கலம், செம்மங்குடி இங்கெல்லாம் போக ஒரு வேலையும் இல்லை, சென்று பார்க்க நண்பரும் இல்லை என்பதால் எப்போதும் இதெல்லாம் பயணத்தில் கடந்து போகும் பெயர்ப்பலகையாகவே எனக்கு இருக்கும். இம்முறை இறங்கி ஒவ்வொரு கிராமமாக சும்மா சுற்றிப் பார்த்து (செம்மங்குடி சீனிவாசன் இந்த கிராமத்திலிருந்து வந்தவராம்) ஏதேதோ என் நியதிப்படி திரிந்து பேருந்து நிலையங்களில் டீ குடித்து அப்படியே சுற்றி அடித்து
மன்னார்குடி வந்து…
ராஜகோபால சாமி கோயில் பெரிய குளம் படித்துறையில் அமர்ந்து எல்லோரும் இன்புற்றிருக்க குறுநாவலை வாசித்து முடித்தேன்.
நான் அடிக்கடி எதிர்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு…
அது என்னை “நார்மலா” இருங்களேன் ஏன் இப்படி இருக்கீங்க என்று எவரேனும் எனக்குச் சொல்லும் அறிவுரை.
பொது நார்மல் அளவுகோலுக்கு சிக்காத, என்னைப் போன்ற ஆசாமிகளும் இருப்பது இந்த சமூகத்தில் சகஜம் என்பது இவர்களுக்குத் தெரியாது. என்னால் அவர்களுக்கு அல்லது சமூகத்துக்கு ஏதேனும் தீங்கு நேர்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஒரே சிக்கல், நான் அவர்களைப் போல இல்லை என்பதுதான். எனவே என்னை அவர்களைப் போல மாற்றும் கடமையை கையில் எடுத்துக் கொள்வார்கள்.
இதே சிக்கல்தான் இந்தக் குறுநாவலின் நாயகனுக்கும்.
அடுத்து,
ஆசிரியர் மாணவர் உறவு என்பதில் உள்ள சிக்கல். (தோழமை என்றாகிவிட்டால் இந்த சிக்கல் இல்லை) அது மனித நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் துயரங்கள்.
மூன்றாவதாக, பதிப்பாளர் எழுத்தாளர் உறவு. நானறிந்த
ஒரு பதிப்பாளர், நானறிந்த ஒரு எழுத்தாளர் வசம் அவர் எழுதிக்கொண்டு இருக்கும் போதே அந்தப் புத்தகத்தை கேட்டார். எழுத்தாளர் தனது வழக்கமான பதிப்பகம் அனுமதி தந்தால் உங்களுக்குத் தர சம்மதம் என்றார். வழக்கான பதிப்பகம் வசம் பேசி இந்தப் பதிப்பாளர் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். புத்தகம் நன்கு விற்றது. பதிப்பாளர் பழைய கடன் போன்றவற்றில் இருந்து மீண்டு புனர் ஜென்மம் எடுத்தார். அப்போது ஒரு சர்ச்சை. அந்த எழுத்தாளருக்கு எதிராகக் கண்டன அறிக்கை தயார் ஆனது. அந்த அறிக்கையில் முதல் கையெழுத்து அந்த எழுத்தாளர் வழியே உயிர் பெற்ற இந்தப் பதிப்பாளர் உடையது!
இது சர்வதேச மொழிகளில் சென்றால் இன்றைய தீவிர தமிழ் இலக்கியச் சூழலின் ஆவண நிலையாகக் கூட மாறும். இதில் சிக்காத தமிழ் எழுத்தாளர்கள் குறைவே.
அடுத்து நாவல் மையமாகப் பேசும் பரஸ்பர மரியாதை நிலை பெறும் (ஈகோவை) விட்டுக் கொடுத்தல், அன்பு போன்றவை.
அந்தப் பதிப்பாளர் எழுதி இருக்க வேண்டிய கடிதம் என்ற அந்தக் கடிதம் – ஒரு கணம் கண் கலங்க வைத்தது. இதைச் செய்ய முடிந்தால்…
எல்லாமே எத்தனை இலகுவாக ஆகி இருக்கும்.
வாழ்தலின் இனிமை என்பது நம்மை விட்டு விலகி விடாது நிலைப்பதே இத்தகு விஷங்களால்தானே?
நாவலுக்குள் எழுத்தாளன் தான் அடைந்த வலியில் இருந்து பெற்றதை, பிறரைப் பிணி கொள்ள வைக்காது உறவுகளை மேற்கொள்வது எப்படி என்பதைச் சொன்ன அவனது வாக்குமூலத்தைப் படிக்க உணர்ச்சிகரமாக, சுவாரஸ்யமாக, வாசிப்பு இன்பம் கொண்டதாக இருந்தது என்று சொல்லலாமா தெரியவில்லை. எப்போதும் போல உங்கள் நாவலில் இருப்பது உங்கள் வாழ்வு (கொஞ்சம் புனைவும் கலந்த விதம்) அது கொடுக்கும் தயக்கம்.
கடித வடிவ அழகியல் கொண்ட நாவல்களில் இது தனித்துவம் கூடியது.
கடலூர் சீனு


Charu,
I read this novella last night in a single sitting, and it was almost 1 AM when I finished. I couldn’t sleep at all afterward. I immediately thought that this text must have been written by a monster—not one that frightens others, but one that is himself frightened.
This monster knows nothing but love and empathy, and believes that everyone else must be the same. Even when people throw stones at him, he simply thinks they are free to do so. And when he is finally hurt, he doesn’t grow angry at the people who threw the stones; instead, he wonders why stones exist in this world at all.
In this process, he sometimes forgets a crucial truth: he is not a human being—he is a monster, and therefore he is immortal. But whenever this realization returns to him, he sings a song born of his eternal solitude: a song filled with pain, yet so melodious, so divine.
This novella is your “monsterpiece”, Charu. Much love…
Eshwer