பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி சேர்மன் தனசேகரன் தன் வரவேற்புரையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். ”நம் கல்லூரியில் நடக்கும் எத்தனையோ விழாக்களில் இந்த நிகழ்ச்சியில்தான் முதல் முதலாக அரங்கத்தில் பல இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்க்கிறேன்.”
காரணங்கள் இரண்டு: ஒன்று, ஐரோப்பிய சினிமாவில் தணிக்கை கிடையாது. ஐரோப்பியக் கலாச்சாரமும் இந்தியச் சூழலுக்கு முற்றிலும் மாறானது. அங்கே நிர்வாணம் என்பது பொருட்டே இல்லை. Father was away on business (இயக்குனர்: Emir Kusturisa) என்ற திரைப்படத்தில் ஒரு ஆறு வயதுப் பையன்தான் கதை சொல்கிறான். அவனுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. அதனால் பாதுகாப்புக்காக அவன் காலில் ஒரு கயறு கட்டி அதை ஒரு மணியோடு சேர்த்துத் தொங்கவிட்டிருப்பார்கள். அவன் உறக்கத்திலிருந்து எழுந்தால் மணி சத்தம் கேட்கும். பெற்றோர் விழித்துக்கொண்டு அவனை மீண்டும் உறங்க வைப்பார்கள். ஒருமுறை அவனும் அவன் தாயும் எங்கோ ஒரு labour camp இல் இருக்கும் தந்தையைப் பார்க்கச் செல்வார்கள். அன்று இரவு தந்தையின் தங்குமிடத்தில் பையனின் தாயும் தந்தையும் கலவியில் ஈடுபட்டிருப்பார்கள்.
ஐரோப்பாவில் கலவி என்பது உடல் முழுக்க ஆடை அணிந்து கொண்டு கும்மிருட்டில் நடக்கும் ‘க்ரைம்’ நிகழ்ச்சி அல்ல. வெளிச்சத்தில் முழு நிர்வாணத்துடன் நடக்கும் ஒரு செயல். கதை சொல்லும் பொடியன் குறும்புக்காரப் பயல். அவன் தன் தந்தையை நீண்ட காலம் கழித்துச் சந்திக்கிறான். தந்தையோ அம்மாவுடன் படுத்திருக்கிறார். இவனுக்கோ தந்தை என்றால் அதிக இஷ்டம். இவனுக்குத் தன் தந்தையை அணைத்தபடி படுக்க வேண்டும். தந்தையோ ஒரு காமப் பிரியன். பயல் தன் காலில் கட்டியிருக்கும் கயிறை ஆட்டி ஆட்டி, மணியை அடிக்கச் செய்து, அவன் தாய் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து வந்தால் பயல் தூங்குகிறான். பிறகு மீண்டும் கலவிக்கான ஏற்பாடு. இவன் மீண்டும் கால்களை ஆட்டுகிறான். இப்படி ஒரு போராட்டம் செய்து கடைசியில் தன் தந்தையிடம் போய் படுத்துக் கொள்கிறான் பொடியன். மிக அற்புதமான இந்தக் காட்சியை நான் எப்படித் தமிழ் மாணவர்களுக்குப் போட்டுக் காண்பிப்பது? அதனால் நான் பெருமளவில் என் வாசகர்களையும் நண்பர்களையுமே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஐம்பது சதவிகித நண்பர்களால் வர இயலவில்லை. வராதவர்கள் அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஆறு மணி நேர நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட காட்சிகளில் ஒன்று கூட பாலியல் தொடர்பானதாக இல்லை. இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் முந்நூறு மாணவர்களை வரச் சொல்லியிருப்பேனே என்றார் கல்லூரி முதல்வர். வரச் சொல்லியிருக்கலாம், ஆனால் அரங்கம் நிறைந்து இருக்க வேண்டும் என்று சுயநலமாக சிந்திப்பதை விட, கல்லூரியின் நற்பெயருக்கு என்னால் எந்தப் பாதகமும் வந்து விடக் கூடாது என்பதே என் முதல் அக்கறையாக இருந்தது.
பணம் கட்டி விட்டு வர முடியாமல் போனவர்கள் மீது எனக்கு வருத்தமில்லை. அவர்களுக்கு இன்னும் சில தினங்களில் காணொலி அனுப்பப்பட்டு விடும். (சென்ற கட்டுரையில் கபிலனுக்கு நன்றி சொல்ல மறந்து போனேன். அவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.)
ஆனால் நான் வருத்தப்படுவது, காணொலிக்காக பணமும் அனுப்பாமல், நிகழ்ச்சிக்கும் வராமல், எந்த சலனமும் இன்றி கல் போல் இருப்பவர்கள் குறித்துத்தான். அவர்களை நான் என் தொலைபேசியிலிருந்து ப்ளாக் பண்ணி விடலாம் என்று யோசிக்கிறேன்.
அம்மாதிரி ஒரு இருபது நண்பர்களை அழைத்துக் கேட்டேன். எல்லோரும் தங்கள் உறவினர்களின் உடல்நலமின்மையைக் காரணமாகச் சொன்னார்கள். அம்மாவுக்கு உடல் நலமில்லாவிட்டால் எப்படி வர முடியும்? குழந்தைக்கு உடல் நலம் கெட்டுப் போனால் எப்படி வர முடியும்? ஒரு நண்பருக்குத்தான் அவருக்கே உடல் நலம் சரியில்லை. ஆனால் அவர் ஒரு இருபதாயிரம் ரூபாய் அனுப்பி, இந்தப் பணத்தில் பத்து பேரை அல்லது இருபது மாணவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்படிப்பட்ட வெளி மாணவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இலவசமாக அழைத்தும். இத்தனை உடல் ஆரோக்கியமற்ற தேசத்திலா நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?
அரங்கம் கொள்ளளவு 600. இன்னும் நூறு பேர் பக்கவாட்டில் படிக்கட்டுகளில் அமரலாம். வந்தது 300. என் சார்பாக 200. கல்லூரியின் விஸ்காம் மாணவர்கள் 50. பேராசிரியர்கள் 50. முந்நூறு பேர் இருந்தும் அரங்க இருக்கைகளில் பாதி காலியாக இருந்தன.
நான் நடத்திய நிகழ்ச்சியினால் என்ன பலன் அடைந்தார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைக் கேளுங்கள். என்னுடைய ஐம்பது ஆண்டு கால அனுபவத்தை உங்களுக்குத் தருகிறேன் என்றால் அதை வாங்கிக் கொள்ள உங்களுக்கு நேரம் இல்லை. சரி, காசை அனுப்பி காணொலியையாவது வாங்கிப் பாருங்கள் என்கிறேன். ஒரு கல்லும் அசையவில்லை. அதனால்தான் வள்ளலார், கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொல்லி சின்ன வயதிலேயே கிளம்பி விட்டாரோ என்னவோ?
பேசாமல் ஏதாவது ஒரு கல்லூரியில் மாதம் சில தினங்கள் சென்று விஸ்காம் மற்றும் திரைத்துறை மாணவர்களுக்கு என் திரை அறிவைக் கொடுத்து விடலாம் என்று யோசிக்கிறேன்.
உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் உள்ள Film Studies Syllabusஐ விட மிகச் சிறந்த ஒரு பாடத்திட்டத்தை என்னால் உருவாக்க முடியும். அந்த அளவுக்குத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். திரைத்துறை தொடர்பான நூல்களைப் படித்திருக்கிறேன். அதற்கு நான் எழுதியுள்ள சினிமா சம்பந்தமான பத்து புத்தகங்களே சாட்சி.
நிகழ்ச்சியின் காணொலியை 2000 ரூ. அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களுக்கு 1000 ரூ.
charu.nivedita.india@gmail.com
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai