எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு நாவலில் விடுபட்டு விட்ட இரண்டு சம்பவங்களைத் தருகிறேன். இதோடு இதை முடித்தும் கொள்கிறேன். இதற்கு மேல் இதைத் தொடர்வதற்கில்லை.
1.நான் ஏதாவது ஒரு ஐரோப்பிய மொழி பதிப்பாளரை மொழிபெயர்ப்புக்காக அணுகினால், என்ன விருது வாங்கியிருக்கிறீர்கள் என்கிறான். விஷ்ணுபுரம் விருது என்று சொன்னால் அதெல்லாம் அண்ணன் தம்பிக்குள் கொடுத்துக் கொள்வது, வேறு பெரிதாக ஏதாவது? என்று கேட்கிறான். சென்ற ஆண்டுதான் க்ராஸ்வேர்ட் விருது. இதற்கிடையில் புக்கர் கிக்கர் என்று போட்டியில் கலந்து கொள்வதற்கே நம்முடைய புத்தகம் யூ.கே.வில் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு பெரிய விருது பெற்றிருக்க வேண்டும். அப்படி ஒரு விருதுக்கு என்னுடைய ஒரு நாவல் குறும்பட்டியலில் இடம் பெற இருந்தது. இந்தியாவின் ஆகப் பெரிய இலக்கிய விருது அதுதான். பரிசுத் தொகை இருபத்தைந்து லட்சம். பரிசுத் தொகை முக்கியமே அல்ல. விருதுக்கான குறும்பட்டியலில் என் நாவல் இடம் பெற்று விட்டாலே எனக்கு யூ.கே. பப்ளிஷர் யாரேனும் கிடைத்து விடுவார். விருது நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள இலக்கியப் பிரமுகரிடம் என்னைப் பற்றி விசாரித்தது. ஏனென்றால், என்னுடைய அந்தக் குறிப்பிட்ட நாவல் எக்ஸ் பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டது. அதனால் விருது நிறுவனம் தாங்கள் குறும்பட்டியலில் சேர்க்க நினைத்த என் நாவலை நானே என் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக நினைத்து விட்டது. தமிழ்நாட்டு இலக்கியப் பிரமுகரிடம் இது குறித்து விசாரித்த பின்னணி இதுதான். அந்த இலக்கியப் பிரமுகர் என்னுடைய மிக முக்கியமான ’நலம்விரும்பி’ என்பதால் எக்ஸ் பதிப்பகம் கண்ணாயிரம் பெருமாளுடையது என்று தெரிவித்து விட்டார். அதைத் தொடர்ந்து விருது அமைப்பினர் கோண்டியையும் தொலைபேசியில் அழைத்து விசாரித்தனர். கோண்டியும் ஆன மட்டும் கண்ணாயிரம் பெருமாளுக்கும் எங்கள் பதிப்பகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று விளக்கியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் அதை நம்பவில்லை. நலம்விரும்பி வட இந்திய இலக்கியச் சூழலிலும் பிரபலம் என்பதால் அவர் வார்த்தைகளையே எடுத்துக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து விருது நிறுவனம் என் நாவலை குறும்பட்டியலில் இடம் பெறச் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டது. காரணம் உங்களுக்கே தெரியும். சர்வதேச அளவிலேயே தங்களுடைய புத்தகங்களைத் தாங்களே வெளியிடும் எழுத்தாளர்களின் படைப்புகள் விருதுக்குப் பரிசீலிக்கப்படுவதில்லை.
ஆக, அந்த விருது சர்வதேச இலக்கியப் பரப்பில் நான் நுழைவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு. அப்படிப்பட்ட வாய்ப்பு எக்ஸ் பதிப்பகத்தின் பெயரால் எனக்குத் தவறியது. ஆனால் இது பற்றி எனக்குக் கவலையே இல்லை. ஏனென்றால், ஒரு சிலர் தன்னிச்சையாக எந்த தர்க்கமும் இல்லாமல் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் என்ன செய்ய முடியும்?
மேலும், என் வாழ்வின் தாரக மந்திரமே ஷேக்ஸ்பியரின் இந்த வாசகம்தான்:
There is a special providence in the fall of a sparrow,
If it be now, ’tis not to come; if it be not to come, it will be now;
if it be not now, yet it will come: the readiness is all.
இரண்டாவது விஷயம்:
வெடிகுண்டு அச்சுறுத்தல் பற்றியது. புவனேஸ்வரியின் வார்த்தைகள்:
”கண்ணாயிரம் பெருமாள், அவருடைய புத்தகங்களைப் பதிப்பிக்க எங்களிடம் தருகிறாரே தவிர, அவருக்கும் இந்தப் பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி எங்களுக்கு மடுத்து விட்டது.
அவருக்கு அனுப்பும் திட்டு மெயில்களில் எங்களையும் tag செய்வது, புத்தகம் தர மாட்டேன் என்று சொல்வது என்பதெல்லாம் போக, இப்போது ஆபீஸில் குண்டு வைத்திருக்கிறோம், காலி செய்து ஓடுங்கள் என்ற மிரட்டல் மெயில் வேறு.”
இங்கே வெடிகுண்டெல்லாம் வெறும் தோதுதான். வார்த்தைகளை கவனியுங்கள். ”சொல்லிச் சொல்லி…” அதாவது, இப்போது முதல் முதலாகச் சொல்லவில்லை. சொல்லிச் சொல்லி மடுத்து விட்டது. முதல் நாளிலிருந்தேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், என் தோளில் நின்று கொண்டு!
ஆனால் வரலாற்றில் எப்படி நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.
ஜார்ஜ் ஆர்வெல் Animal Farm எழுதிய காலத்தில், சோவியத் ரஷ்யாவின் அழுத்தம் பிரிட்டனின் கதவையும் தட்டியிருந்தது.
“இதை அச்சிட்டால் அரசியல் பிரச்சினை வரும்” என்று பலரும் அச்சுறுத்தினார்கள். ஆனால் Secker & Warburg பதிப்பகத்தின்
பிரெடெரிக் வார்பர்க் மட்டும் ஆர்வெலின் மேஜையருகே நின்றபடி சொன்னார்:
“இந்த எழுத்தாளரை விட்டுவிட்டால் நமக்குப் பதிப்பகமே இருக்கக் கூடாது.”
அச்சம் நிழல் போட்டிருந்த அந்தச் சூழலிலும் அந்தப் பதிப்பாளர்
ஒரு படி கூடப் பின்னோக்கிப் போகவில்லை.
ஆனால் சல்மான் ருஷ்டிக்கு சாத்தானின் கவிதைகள் நாவலுக்காக ஈரானின் ஃபத்வா கொடுக்கப்பட்ட போது அவர் சொன்னார்:
When the fatwa came,
people who said they loved me
disappeared overnight.
ஆனால் அவர் மனைவி Marianne Wiggins மட்டும் ருஷ்டி
கடுமையான பாதுகாப்புகளுக்கு இடையே அவர் கூடவே இருந்தார். அப்போது மரியன் சொன்னார்: If he dies, I die with him.
என் வீட்டுக்கு மூன்று முறை குண்டு மிரட்டல் வந்து விட்டது. ”எத்தனை மிரட்டல் வந்தாலும் இறுதி வரை உன் பக்கமே நிற்பேன்” என்றாள் என் மனைவி.
***
எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு குறுநாவலைப் படித்தவர்கள் அதன் விலையாக எத்தனைப் பணம் நிர்ணயிக்கிறீர்களோ அதை அனுப்பி வையுங்கள். இரண்டாயிரம் ரூபாய் அனுப்பியவர்களுக்கு விரைவில் ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சியின் காணொலியை அனுப்புகிறேன்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai