புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்? (2)

இந்த விவகாரத்தை இத்தோடு விட மனமில்லாமல் என் நண்பர் ஒருவரிடம் பேசினேன்.  அவர் bubble wrap பேப்பர் போட்டுப் பார்சல் கட்டினால் இந்தப் பிரச்சினை இல்லை என்றார்.  ஆனால் டபிள் ராப் பேப்பர் சாதா பேப்பர் கட்டை விடப் பல மடங்கு செலவு அதிகம்.  சரி.  ஏற்கனவே பதிப்பகங்கள் லாபம் இல்லாமல் நடக்கின்றன.  புத்தகம் வாங்குபவர்களால் அவர்களுக்கு அநாவசிய செலவு வேண்டாம்.  இப்போது என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சாதா பேப்பரிலேயே கட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.  கத்தரிக்கோலால் … Read more

புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்?

இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது.  புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்.  வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார்.  இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம்.  சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள்.  நூலாக வந்துள்ளன.  மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள்.  நூல் வந்ததா எனத் தெரியவில்லை.  படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன.  புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை.  வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது … Read more

பொருள்வெளிப் பயணம் – 4

பொருள்வெளிப் பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் தொடரில் இது நான்காவது கட்டுரை. ஓப்பன் பண்ணா’ !!ஒரு திரைப்பட கலைஞனாகவே நிஜத்திலும் வாழ்ந்த ஒருவனை, எழுதி இருக்கிறார்.இப்படி எளிமையாக கடந்துவிடும் சம்பவங்களின் பின்னணியை, அடி ஆழம் வரை அலசி ஆராய்ந்து தனது பாணியில் விமர்ச்சிக்கிறார்,சாரு நிவேதிதா -‘பொருள் வெளிப் பயணம்’ என்னும் தொடரில்.www.bittalk.in

சார்பட்டா பரம்பரை (தொடர்ச்சி)

(நேற்று எழுதிய சார்பட்டா விமர்சனத்தின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்) சார்பட்டா பரம்பரையை நேற்றும் இன்னொரு முறை பார்த்தேன்.  இப்படி ஒரே படத்தை அடுத்தடுத்த நாளில் பார்த்தது இதுவரை நடந்ததில்லை.  அதுவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி.  இரண்டாவது முறையாகப் பார்த்த போதுதான் படத்துக்கு நேற்று நான் எழுதிய சிறிய மதிப்புரை அதன் சிறப்புக்கு நியாயம் செய்ததாகாது எனத் தோன்றியது. சார்பட்டா படத்தைப் பார்க்கும் அத்தனை பேரையும் ஈர்த்த ஒரு பாத்திரம்: டான்சிங் ரோஸ்.  தமிழ் சினிமாவில் … Read more

கிண்டில் டிவைஸ் (சிறுகதை)

பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்.  ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது.  அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள்.  இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன்.  “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.  பலமுறை சொல்லியிருக்கிறார்.  சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு … Read more

சார்பட்டா பரம்பரை

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. மெட்ராஸ் என்ற படம் எவ்வளவு சுவாரசியமாக இருந்ததோ அதே சுவாரசியம் சார்பட்டாவிலும். … Read more