ஜெய்ப்பூர் இலக்கிய விழா

நாளை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன். அழையா விருந்தாளியாக. அப்படிச் செல்வதால் எனக்கு 60000 ரூ. செலவு. நுழைவுக் கட்டணமே ஒரு நாளைக்கு 5000 ரூ. இலவசமாகவும் போகலாம். ஆனால் delegate pass என்றால் 5000 ரூ. கட்டணம். டெலகேட் பாஸ் இருந்தால்தான் எழுத்தாளர்களை நெருங்க முடியும். இல்லாவிட்டால் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடியும். சென்ற ஆண்டு இந்தச் செலவை இரண்டு நண்பர்கள் ஏற்றார்கள். இந்த ஆண்டு ஒரு நண்பன் வேலையை … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்…

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் முதல் நாவல் பற்றி நண்பர் வினித் எழுதிய கடிதம். நாவல் சென்னை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கு எண் 696இல் கிடைக்கும். சாரு, இப்போது ரயிலில் தான் சோழங்கநல்லூர் போய்க் கொண்டிருக்கிறேன். பயண நேரம் எட்டு மணி நேரம் ஆகும் என்பதால் இலக்கியங்கள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களை புத்தக விழாவில் சந்தித்த பொழுது எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வாங்கியதை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் … Read more

ஒன்றரை லட்சம் பேர் பார்த்த அடியேனின் உரை

இந்தக் காணொளியை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை இதை நான் முகநூலில் பகிரவில்லை. முடிந்தால் கேளுங்கள். ஊடகம் என்பது எழுத்திலிருந்து பேச்சுக்கு மாறி விட்டது. இப்போது நான் ஸீரோ டிகிரியை வாசித்து அளிக்கிறேன் என்றால், அது ஒரு லட்சம் பேரைச் சென்றடையும். என் பிறந்த நாள் அன்று காலையில் கண் விழித்ததும் எனக்கு என்னவெல்லாம் தோன்றியதோ அதையெல்லாம் எழுந்து ஐந்தே நிமிடத்தில் தற்செயலாக இந்தக் காணொளியில் கேட்டேன் என்று சொன்னார் ஒரு நண்பர். அவருக்கு … Read more

அம்புயாதனத்துக் காளி – பிரபு கங்காதரன்

அம்புயாதனத்துக் காளி.  என் நண்பர் பிரபு கங்காதரன் எழுதிய கவிதைத் தொகுப்பு.  ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு.  சென்னை புத்தக விழாவில் அரங்கம் எண் 696 & 697.  தமிழில் முதல் முதலாக தாந்த்ரீகப் பாலியல் கவிதையாகப் பொங்கிப் பிரவாகம் எடுத்திருக்கிறது.  கவிதையில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூடப் படிக்க ஏதுவான கவிதைகள்.  இதைப் படிக்காவிட்டால் நீங்கள் ஒரு அற்புதத்தை அனுபவம் காணத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம்.   இந்தத் தொகுப்பு பற்றி தேவ சுப்பையா எழுதிய முகநூல் … Read more

புத்தக விழா – 6

இன்றைய தினம் (6 ஜனவரி) மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன்.  அரங்கு எண் 696 & 697.  வலது பக்கம் முதல் வரிசை.  இடது பக்கமிருந்து போனால் கடைசி வரிசை.

புத்தக விழா – 5

தமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த ஓவிய நண்பர் ஒருவர் வரைந்தது. பெயர் மறந்து போனேன். மன்னிக்கவும். இந்தப் புகைப்படத்தை ஒரு நிதி வசூலுக்காக நேற்று வாங்கினேன். என் ஓவியத்தை நானே வைத்துக் கொள்வது அழகல்ல. உங்களில் யாருக்கேனும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com அல்லது நான் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் மதியம் 2 மணியிலிருந்து இரவு ஒன்பது வரை இருப்பேன். என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விலையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக விலை நிர்ணயிப்பவருக்கு ஓவியம். எனக்குக் … Read more