சலிப்பு
வாசகனின் தற்கொலைக் கடிதம்வாசித்ததிலிருந்து தற்கொலை எண்ணம்நீரில் நனைந்த சிகரெட்டைப் போல்மனதில் புகைகிறது யோசிக்கும் வேளையில்வந்தமர்ந்த மைனாவிடம்சேதி சொன்னேன்சிறிது நேரம் மௌனித்த மைனாகாரணம் கேட்டது’எல்லாவற்றுக்கும் காரணம் உண்டா?பேரரசனாய் வாழ்ந்த ஹெமிங்வேஏன் தன்னை சுட்டுக் கொண்டான்?’ மேஜை மேலிருந்த மாத்திரைகளைக்காண்பித்தேன்சாகசம் செய்து வாங்கியவைவாழ்க்கையை முடித்து வைக்கும்சிறு வெள்ளைத் துண்டுகள் பார்த்து விட்டுச் சிரித்த மைனாதற்கொலைக் கவிதை எழுதுபவனெவனும்தற்கொலை செய்து கொண்டதில்லை என்றது ’உளறாதே, ஒரு நூறு உதாரணம் சொல்வேன்வுல்ஃப் பற்றித் தெரியாதா?தற்கொலை பற்றியே எழுதினாள்பல முறை முயன்றுகடைசியில் ஆற்றில் மூழ்கினாள்’ … Read more