ஜெயமோகனும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காயும்…

நேற்று தருண் தேஜ்பால் தொலைபேசியில் அழைத்து ஜெயாமோகனுக்கு என்னுடைய நூல்களை நீ அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார்.  ஜெயாமோகனை இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன்.  இன்று விடை கிடைத்து விட்டது.  வாழ்த்துக்கள் ஜெயமோகன்.  இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் சர்வதேச எழுத்தாளர்களுக்கு நிகரானவர்கள்.  ஆனால் சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் நாம் சர்வதேச அளவில் தெரிய வராமல் இருந்தோம்.  இப்போது பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றி விட்டார்கள்.  சர்வதேச அளவில் … Read more

சித்த மருத்துவம்

ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் எந்த மருத்துவ முறைகளுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் சித்த மருத்துவம் நம் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காரணம்? ஆங்கிலேயர்கள். நான் ஏற்கனவே இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். Zoltan Fabri ஹங்கேரிய சினிமா உருவாக்கிய மேதைகளில் ஒருவர். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று The Fifth Seal. 1976இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை நான் 1979இல் பார்த்தேன். தில்லியின் மையப்பகுதியான கனாட் … Read more

ஔரங்ஸேப் பற்றி ஒரு கடிதம்

அன்புள்ள சாரு, சில நாட்களாக இரவு ஆரம்பிக்கையிலே ஏதோ விபரீதமான எண்ணங்களும், மனிதர்களின் மேலுள்ள அபிமானமும் மாறிமாறி கேள்விகளாகத் துன்புறுத்திக் கொண்டே வந்தன. இப்படி இருக்கையில்தான் சில வாரங்களுக்கு முன்னர் தங்களுடைய ‘நான்தான் ஔரங்ஸேப்’ நாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். இதற்கு முன்னர் நான் படித்த உங்கள் எழுத்தில் இருந்து இது வேறு ஒன்றாக இருக்கிறது. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக ரகளையான மொழிநடையில் மீறல் நிரம்ப பயணிக்காமல் ஔரங்ஸேப் பேசுவதில் இருந்தே மிகவும் அமைதியான … Read more

ஔரங்ஸேபின் ஆங்கில வடிவம் பற்றி…

நான்தான் ஔரங்ஸேப் நாவலை நீங்கள் தமிழில் படித்திருந்தாலும் அதன் ஆங்கில வடிவத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம், அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நந்தினியையே ஒரு பாத்திரமாக மாற்றி நந்தினி என்ற பெயரைக் கூட மாற்றாமல் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறேன். அதை நந்தினியே மொழிபெயர்த்தது அவரது பெருந்தன்மை. இன்னொரு முக்கியமான விஷயம், நந்தினி மொழிபெயர்ப்பாளர் அல்ல. அடிப்படையில் அவர் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பிய நூல் invisible … Read more

மீண்டும் இலங்கைப் பயணம்

நான் சமீபத்தில் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகத்தை வாசித்திருந்தால் நதீகாவின் புகைப்படங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.    நான் நாடகத்தின் பக்கமே வராமல் இருந்ததற்குக் காரணம், என் நாடகம் மனித உடல் பற்றியதாக இருக்கும் என்பதால்.  அங்கே ஆடை இருக்காது.  நிர்வாணம்தான்.  ஜப்பானிய ஆன்செனில் எல்லோரும் நிர்வாணமாக நீராட வேண்டும்.  (ஆண்கள் தனியே, பெண்கள் தனியே.)  அந்த நிர்வாணம் உடலின் வாதையைப் பேசவில்லை.  அது பற்றி விரிவாக ரொப்பங்கி … Read more

குண்டு சட்டிக்குள் ஓடிய குதிரை வெளியே வருகிறது…

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த கதை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான். இதில் நல்லது இல்லாமால் இல்லை. சீலே சாந்த்தியாகோ நகரில் இருந்து இன்னும் என்னிடம் பத்து தினங்கள் உள்ளன. ஆனால் கையில் காசு இல்லை. இந்த நகரிலேயே தெருத் தெருவாகச் சுற்றி வரலாம். அதற்குக் காசு வேண்டாம். கையில் ஒரு நாலு ஐந்து லட்சம் இருந்தால் சீலே முழுவதும் சுற்றலாம் என்றதும் ஒரே வாரத்தில் ஐந்து லட்சம் அனுப்பியிருந்தார்கள் பெயர் தெரியாத … Read more