ஆர்த்தோ: சில எதிர்வினைகள்

வணக்கம் சாரு.          எனக்கு நாடகத் துறையைப் பற்றி ஏதும் பெரிய அளவில் தெரியாது, ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நாடகம் எப்பொழுதும் நம்மிடையே மிகவும் நேரடியாக உரையாடுகிறது . நான் பெரிய அளவில் நாடகங்களை வாசித்ததும் இல்லை. ஆனால் உங்களுடைய நாடகத்தை படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி, எப்பொழுதும் அந்த கேள்வியே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது,நாம் சரியாகத்தான் வாழ்ந்து கொண்டு … Read more

ஆர்த்தோவின் உடல் மொழி: கலாமோகன்

அன்புடன் சாருவிற்கு, நீங்கள் அனுப்பி வைத்த  ஆர்த்தோ மீதான நாடகத்தை வாசித்து மீண்டும் ஓர் சிந்தனை உலகில் வீழ்ந்தேன். உங்களது எழுத்தில் ஆர்த்தோ தனது விதத்தில் ஓர் தியானம் செய்கின்றார் எனவும் சொல்லலாம். பல சிந்தனைகளிற்கான வீதிகளைத் தயாரிக்கும் கச்சிதமானது உங்கள்   படைப்பு. உங்களது எழுத்து மிகவும் கவித்துவமானது. சில வேளைகளில் நான் இதனை ஓர் கவித்துவச் சிருஷ்டிப்பு என்றே கருதுகின்றேன். எது எப்படியோ நாடக இலக்கியம் ஓர் கவித்துவ உயிர்ப்பே. ஆர்த்தோவின் முகத்தை நீங்கள் … Read more

அசோகமித்திரனின் கடிதம்

2010இலிருந்து எனக்குக் கடிதம் எழுதியவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 6000 கடிதங்கள். அத்தனைக்கும் பதில் எழுத முடியாது. சுமார் இருநூறு கடிதங்களுக்கு ஒரு வரி பதில் எழுதினேன். அதில் 175 பேரிடமிருந்து பதில் வந்தது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் எழுதுகிறார்கள். ப்ளாகைத் தொடர்ந்து படிப்பதாகவே எழுதுகிறார்கள். அடிக்‌ஷன் மாதிரி ஆகி விட்டது என்கிறார்கள். அப்படியே நகர்ந்து வந்து கொண்டிருந்த போது 2016, மார்ச் இரண்டாம் தேதி காலை 6.05 மணிக்கு ஒரு கடிதம் வந்திருந்ததைக் கண்டேன். … Read more

ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு … Read more

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஒரு மதிப்புரை

அன்பின் சாரு,        ”அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நான் வாசிக்கும் முதல் நாடகம். கொஞ்சங்கொஞ்சமாக அந்த நாடகம் என்னை அப்படியே இழுத்துக் கொண்டது. என்ன அற்புதமான மொழி. எழுதும்போது நீங்கள் அடைந்த அந்தப் பித்துநிலைக்கு நானும் சென்று விட்டேன். ஆர்த்தோவின் கையிலிருக்கும் செங்கோல் என்பதே எனக்குப் பிடிக்கிறது. இயேசுவின் கையிலிருந்த தடி….” உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும்” என்பது தாவீதின் சங்கீதம் அல்லவா! ஆம், அது தீமைகளைத் தாக்கும். … Read more

பெட்டியோ ஏன் தாமதம்?

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். ஆனாலும் அதன் நாயகி நயநதினியின் கதையை எப்படி முடிப்பது என்பதில் கொஞ்சம் குழப்பமும் தயக்கமும் உள்ளது. நான் சந்தித்த மூன்று சிங்களப் பெண்களை ஒன்றாக்கி, கற்பனை கலந்து உருவாக்கியதால் இந்தக் குழப்பம். அதுவும் தவிர, அந்தோனின் ஆர்த்தோவின் தோழியான காலத் தாமஸின் (Colette Thomas) வாழ்க்கைக்கும் நயநதினிக்கும் நிரம்ப ஒற்றுமை இருந்ததால் – நயநதினி வேறு ஆர்த்தோவின் நாடகங்களை இயக்கிக் கொண்டிருப்பதால் – காலத் தாமஸின் ஒரே நாவலான The … Read more