ஒரு நாவல் ஒரு லட்சம் பிரதிகள்…
பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றி வெளிவந்த சத்யம் தொலைக்காட்சி செய்தியைக் காணலாம். https://www.youtube.com/watch?v=QytbhYLnMcE&feature=youtu.be e
பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றி வெளிவந்த சத்யம் தொலைக்காட்சி செய்தியைக் காணலாம். https://www.youtube.com/watch?v=QytbhYLnMcE&feature=youtu.be e
நண்பர்களும் நம் இலக்கியச் சூழலும் புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டார்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்களுக்கு இப்படி முன்பதிவுத் திட்டம் இருந்து வருகிறது. தமிழிலும் இருக்கிறது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் 500 ரூ புத்தகம் 400 ரூ.க்குக் கிடைக்கும் முன்பதிவு. உண்மையான அர்த்தத்தில் அதற்குப் பெயர் முன் பதிவுத் திட்டம் அல்ல. அது சலுகை விலை. நீங்கள் கவனித்திருக்கலாம். செய்தித்தாள்களில் சில நேரங்களில் முழு பக்க … Read more
புதிய எக்ஸைலின் சில பகுதிகளை இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் படித்தேன்.அப்படி ஒரு ரம்யமான மொழி சாரு.அட்டகாசம் 🙂 குமரகுருபரன். இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் புதிய எக்ஸைலின் ஒரு பகுதி வெளிவந்துள்ளது. புதிய எக்ஸைல் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரியாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தமிழ் இந்து நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றி.
புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் பற்றியும், புதிய எக்ஸைல் பற்றியும் என்னுடைய செய்தி ஒன்று இன்றைய சத்யம் தொலைக்காட்சியின் காலை ஏழரை மணி செய்தியிலும் பிறகு இன்று முழுவதும் இடம் பெறும் செய்திகளிலும் வெளிவர இருக்கிறது.
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதிய சிலுவையின் ஏழு வார்த்தைகள் என்ற இந்தச் சிறுகதை இதுவரை வேறு எந்த இதழிலும் வெளியானதில்லை. சமீப ஆண்டுகளில் நான் படித்த் மிகச் சிறந்த கதைகளில் இது ஒன்று. சாரு சாக்ரடீஸ் – அறிந்து கொள்! மனிதர்கள் ஒரு பாதாள குகையினுள் வசிக்கிறார்கள். அதன் நாவு வெளிச்சத்தை நோக்கி நீள்கிறது. தங்கள் குழந்தைப்பருவம் தொடங்கி அவர்கள் அதனுள்ளேதான் வாழ்கிறார்கள். அவர்களுடைய கழுத்துகளும் கால்களும் எங்கும் நகர்ந்து போக முடியாதபடி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களால் நேராகத்தான் … Read more
பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையில் என்னைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை இல்லை. விமர்சனம், திட்டு, ஆதங்கம் போன்றவைகளே காணப்படுகின்றன. ஆனால் நாகூர் பற்றி நான் எழுதியதை இவ்வளவு பிரமாதமாக யாருமே தொகுத்ததில்லை. எனக்கே நான் நாகூர் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கட்டுரையை நீங்கள் பொறுமையாகப் படித்தால் அது புதிய எக்ஸைலுக்குள் நுழைவதற்கான ஒரு தயாரிப்பைத் தரும். அபாரமான கட்டுரை. திட்டுவது பற்றிக் கவலைப்படவில்லை. அது கையூமின் உரிமை. என்னிடமே இல்லாத … Read more