பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 9

செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். மேலும் படிக்க: http://bit.ly/1rNgcH8

நிலவு தேயாத தேசம் – 28

துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். … Read more