Meet & Greet
ஆங்கில நூலான Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தில் நாளை (29 டிசம்பர்) கையெழுத்திடுகிறேன். இடம் பெங்களூரு. நிகழ்ச்சி நிரல்: வாருங்கள் என அழைக்கிறேன்.
ஆங்கில நூலான Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தில் நாளை (29 டிசம்பர்) கையெழுத்திடுகிறேன். இடம் பெங்களூரு. நிகழ்ச்சி நிரல்: வாருங்கள் என அழைக்கிறேன்.
டிசம்பர் 30 அன்று மாலை ஆறு மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தேவதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியிடப்பட உள்ளன. தேவதேவன் தமிழின் மகத்தான நவகவிகளில் ஒருவர். தமிழர்களின் சொத்து. தமிழின் பொக்கிஷம். ஐந்து கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவில் நானும் அபிலாஷ் சந்திரனும் தேவதேவனும் அராத்துவும் பேசுகிறோம். தமிழ்ச் சங்க அரங்கில் 300 பேர் அமரலாம். முப்பது பேராவது வருவார்களா, பத்து இருபது பேர் வந்தால் பார்க்க அசிங்கமாக இருக்கும் என்று … Read more
Khul Ke என்ற தளத்தில் Books and Conversations என்ற அமர்வில் ஒளரங்ஸேப் நாவல் குறித்து Chitra Ahanthem உடன் சாரு நிவேதிதா இன்று இரவு 8:30 மணிக்கு கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வைக் காண Khul Ke செயலியை Play store / App Store -இல் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
முகநூலில் அராத்து எழுதியது: இலக்கிய விழாக்களுக்கு மஞ்சத்தண்ணி , காது குத்து போல தனித்தனியாக அழைப்பது உகந்ததல்ல. இந்த பொது அழைப்பையே அனைவரும் தனி அழைப்பாக ஏற்றுக்கொண்டு வந்து சேரவும். தேவதேவன் , சாரு நிவேதிதா மற்றும் அபிலாஷ் சந்திரனின் உரைகள் கவிதையைப் பற்றி புதியதொரு திறப்பை உங்களுக்குக் கொடுக்கும். நன்றியுரை என்ற சாக்கில் நானும் கொஞ்சம் கவிதையை வறுக்கலாம் என்றுள்ளேன். எந்த பல்கலைகழகத்திலும் கிடைக்காதது இது. தனி மனிதர்கள்தான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. நம் வாசகர் … Read more
விதவிதமாகத்தான் கொண்டாடுகிறார்கள். நேற்று ஒரு வாசகி எழுதியிருந்தார். ”புத்தக விழாவில் உங்களை சந்தித்தால் எலும்பு நொறுங்கக் கட்டி அணைப்பேன்.” உண்மையில் ஒரு ராக்ஸ்டாருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் இது. அந்த வன்முறைச் சம்பவத்துக்காகவே புத்தக விழாவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். டிசம்பர் 18 என் பிறந்த நாள் இல்லையா? மைலாப்பூர் பூராவும் என் புகைப்படத்தோடு சுவரொட்டிகள் மிளிர்ந்தன. யார் காரியம்? கீழ்க்கண்ட கடிதத்தைக் காணுங்கள். வணக்கம் ஐயா தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை உள்ள மாணிக்கம் அண்ட் … Read more
சென்ற ஆண்டு சென்னை அண்ணா நூலகத்தில் என் உரையைக் கேட்பதற்காக சிவசங்கர் என்ற மாணவர் மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். இப்போது அவரிடமுருந்து இப்படி ஒரு கடிதம்: ஜனவரி மாதத்தில் கேரளாவில் நடைபெற இருக்கும் ‘இலக்கியத் திருவிழாவில்’ பங்கேற்பதற்கு சிறு சேமிப்பையும், சின்னதான கடனும் வாங்கி பதிவு செய்துகொண்டேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் நாம் அங்கு சந்திப்போம், சாரு. ஜனவரி 11 முதல் 14 வரை கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் நான் பதின்மூன்றாம் தேதி … Read more