பெட்டியோ

தி.ஜானகிராமன் எழுதிய உதய சூரியன் என்ற பயணக் கட்டுரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Pleasure of the Text என்றால் இதுதான். ஆள் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விரிவாக பிறகு எழுதுகிறேன். பெட்டியோவை அனுப்பிய நண்பர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. சீனி பயங்கர பிஸி. அலுவலக வேலை. பொதுவாக அனுப்பிய இரண்டே நாளில் வாசித்து விடுவார். ஆனால் இப்போது கடுமையான வேலை நெருக்கடி போல. நேற்று இரவு ஒரு பப்புக்குப் போய் படிக்கப் போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பிட்ட பப் … Read more

Asexual

பெட்டியோ இன்னும் சில தினங்களில் – அதிக பட்சம் இரண்டு வாரம் – என்.எஃப்.டி.யில் வெளிவரும். இதற்கு மேல் அதில் கை வைக்க எதுவும் இல்லை. சீனி படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கருத்து என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். இங்கே எனக்கு என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் ப்ரியா கல்யாணராமன் ஞாபகத்துக்கு வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னோடு மிக நெருங்கிய நட்பில் இருந்தார். குமுதத்தில் என் தொடர் வருகிறதோ இல்லையோ, வாரம் … Read more

ஆர்த்தோ நாடகம் குறித்து…

டியர் சாரு, Folie என்னும் ஃபிரெஞ்ச் மொழிச் சொல்லை மொழிபெயர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆங்கிலத்தில், foolishness, insanity, madness, lunacy என்றும், தமிழில் ஒரு படி மேலே சென்று பித்துநிலை என்றும் மொழிபெயர்த்தாலுமே கூட, அந்தச் சொல்லின் சில அடுக்குகள் மிச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கு, ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் வந்து அதன் மீது புதிய அர்த்தங்களை ஏற்றியும், பழைய அர்த்தங்களைக் கலைத்துப் போட்டுவிட்டதும் ஒரு காரணம். குறிப்பாக Histoire de la folie à … Read more

சராசரிகளுக்கு இங்கே இடமில்லை!

நேற்று இரவு ஒன்பது மணி அளவில் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்த்து.  ”உங்கள் கட்டுரை சுவாரசியமாக இல்லை.  Bore அடிக்கிறது.” “எந்தக் கட்டுரை?” என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன். மெஸேஜ் அனுப்பியவரோடு கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  அவர் ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்.  அவர் இல்லாமல் ஒரு வாசகர் வட்டச் சந்திப்பு கூட நடந்தது இல்லை.  ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது.  குடிக்காமல் இருக்கும்போது சாது சாரங்கபாணி போல் … Read more

எதிர்ப்பின் அழகியல்

எல்லா விஷயங்களிலுமே நான் ஆரம்பத்திலிருந்து என் எதிர்ப்பையே பதிவு செய்து வந்திருக்கிறேன் என்பதை என் கட்டுரைகளை ஆழ்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். என்னை நீங்கள் யாரோடும் ஒப்பிட முடியாது. எனக்கு முன்னாலும் என்னைப் போல் யாரும் இல்லை. எனக்குப் பின்னாலும் யாரும் இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப் புத்திஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் இங்கே உள்ள படித்த மார்க்சீயவாதிகளை அறிஞர் என்று போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நான் அவர்களை கோனார் நோட்ஸ் போடுபவர்கள் என்று விமர்சித்துக் … Read more

பெட்டியோ நிறைவடைந்தது

இன்று யோசித்துப் பார்த்தேன். மே மாதம் எழுதத் தொடங்கியது. நான்கு மாதங்களாக பெட்டியோவை எழுதிக் கொண்டிருக்கிறேன். 41000 வார்த்தைகள் வந்திருக்கிறது. இன்னும் எழுதினால் இன்னும் 30000 வார்த்தைகள் போகும்போல் தெரிந்தது. நிறுத்தி விட்டேன். பெரிதாக எழுதினால் ஆங்கிலத்தில் போகாது. மீதியை இன்னொரு நாவலாக எழுதிக் கொள்ள வேண்டியதுதான். அதனால் பெட்டியோவை ஒரு கட்டத்தில் முடித்து விட்டேன். நாளை அராத்துவுக்கும் காயத்ரிக்கும் அனுப்ப இருக்கிறேன். அவர்கள் படித்து முடித்ததும் என்.எஃப்.டி.யில் அதை வெளியிடுவதற்குக் கொஞ்சம் வடிவமைப்பு வேலை செய்ய … Read more