பெட்டியோ : ஒரு முன் தயாரிப்பு

ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  கொஞ்சமாக.  இப்போதும் கொஞ்சம்தான் எழுதுவேன்.  இவரைத்தான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் உச்சம் என்கிறார்கள்.  எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது.  இவரை ஓரளவு நெருங்கக் கூடியவர்கள் என நான்கு பேரைச் சொல்கிறார்கள்.  அந்தோனின் ஆர்த்தோ, ஜெனே, ஜார்ஜ் பத்தாய், மார்க்கி தெ ஸாத்.  இவர்களும் ஓரளவுக்குத்தான் அவரை நெருங்கக் கூடியவர்கள்.  அவரைத் தாண்டியவர்கள் அல்ல. அல்ஜீரியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்குவதற்காக ஃப்ரான்ஸ் அனுப்பிய ராணுவத்தில் பணியாற்றினார்.  ஆனால் அல்ஜீரிய சுதந்திரப் போராட்ட்த்தை ஆதரித்ததன் காரணமாக … Read more

தனிமை

சீனி அக்டோபர் மாதம் இமயமலை செல்கிறார்.  ஒரு மாதம்.  தினமும் கங்கையில் குளியல் போடலாம்.  நோ தண்ணி, நோ சிகரெட், நோ நான்வெஜ், நோ ஃபோன்.  உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன், சொன்னால் நீங்களும் வருவீர்கள், அப்படி வந்தால் அது ஒரு நாவலாகி விடும்.  அப்புறம் அது உண்மையான ரெட்ரீட்டாக இருக்காது என்றார். ஆஹா, எப்போதுமே விஷயங்களை மிகச் சரியாக அனுமானிக்கக் கூடியவர் இந்த முறை சறுக்கி விட்டாரே என்று நினைத்தேன்.  ஏனென்றால், அம்மாதிரி ரெட்ரீட்டுக்கு … Read more

பாரம்பரியம்

இனிமேல் ஒருபோதும் சின்னச் சின்ன உடல்நலப் பிரச்சினைகளுக்கு அலோபதி பக்கம் போகக் கூடாது என்று நேற்று சபதமே எடுத்து விட்டேன்.  அதிலும் மூன்று தினங்கள் தொடர்ந்து ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொண்டதால் வாய், நாக்கு, தொண்டை, உணவுக் குழாய் எல்லாமே வெந்து புண்ணாகி விட்டது.  இங்கே அவந்திகா பற்றிச் சொல்ல வேண்டும்.  மருத்துவ விஷயத்தில் அவள் காந்தி மாதிரி.  எதற்குமே எந்த மருத்துவத்தின் பக்கமும் போக மாட்டாள்.  அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் எதுவுமே வேண்டாம்.  எல்லாம் கை … Read more

ரஜினியும் மரியாதையும்

பத்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி ஒரு கருத்தைச் சொன்னார்.  அது எனக்கு ரஜினி பற்றிய முக்கியமான ஒரு அவதானமாகத் தோன்றியது.  ”பணக்காரர்கள் மீது ரஜினிக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு.”  ஏனென்றால், பணம் சம்பாதிப்பதுதான் மிகவும் கடினமாக காரியம்.  அதை ஒருவர் சாதித்திருக்கிறார் என்றால், அவர் நம் மரியாதைக்கு உரியவரே.  எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் மரியாதைக்கு உரியவர்களே என்றாலும் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறமை இல்லை.  ஆகவே … Read more

மூன்று தினங்கள்

மூன்று தினங்களெல்லாம் எனக்கே நான் மெடிக்கல் லீவ் கொடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் கொடுக்கும்படி ஆகி விட்டது. மூன்று தினங்களுக்கு முன் தொண்டையில் லேசாக வலி. அடுத்து அது ஜுரமாக மாறும். நான் ஸ்ரீராமிடம் கேட்டு மாத்திரை சாப்பிடுவேன். ஜுரம் போய் விடும். ஆனால் தினமும் இருபது மணி நேரம் தூங்க வேண்டி வரும். அது கூட நிம்மதியான உறக்கம் அல்ல. மயக்கம் கலந்த உறக்கம். கூடவே உடம்பு வலியும் உண்டாகும். இன்னும் நிறைய பக்க விளைவுகள். … Read more

சொல் பேச்சு

ரொம்ப காலமாக என் அறையில் மின்விசிறி வேலை செய்யவில்லை. ஏசி இருந்ததால் மின்விசிறியின் தேவையில்லாமல் இருந்தது. அதற்காக காலையிலிருந்தேவா ஏசியைப் போட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவழியாக நேற்று புதிய மின்விசிறி மாட்டப்பட்டது. அப்போது எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேனேஜர் மின்விசிறி மாட்டுவதை மேற்பார்வை இடுவதற்காக வந்தவர், அறையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு பிரமிப்புடன் “இத்தனை புத்தகங்களையுமா சார் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். தேவையானதை எடுத்துப் படிப்பேன் என்றேன். அவருக்கு என் பதில் புரியவில்லை. ”நான் இதுவரை ஒரு … Read more