அமெரிக்கத் தமிழர்கள்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளலாம். அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

குட் பை ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்கில் இருப்பேன்.  ஆனால் என் தளத்தில் எழுதுவது எதையும் ஃபேஸ்புக்கில் கொண்டு வந்து கொடுக்க மாட்டேன்.  ஏனென்றால், ஃபேஸ்புக் கும்பல் என்பது தமிழ் மசாலா சினிமாவை ரசித்து விசிலடிக்கும் கும்பலைப் போன்றது.  ஆனால் வேடிக்கை பார்ப்பதற்காக ஃபேஸ்புக்கில் இருப்பேன். கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிக் கட்டணம் கட்ட பணம் இல்லை.  படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடலாம் என்கிறாள் அவந்திகா.  வேறு வழியே இல்லை.  வங்கிக் கடன் எதுவும் கிடைக்கவில்லை.  வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த … Read more

குடும்பம், தனிச் சொத்து, அரசு – 2

குடும்பம் என்பது ஒரு கொடூரமான அடக்குமுறை ஸ்தாபனம்.   அன்பு என்பதே அற்றுப் போன வறட்டுப் பாலைநிலத்துக்கு ஒப்பானது குடும்பம்.  என் நண்பர் ஒருவர் 65 வயதில் வாழ்வே அலுப்பாக இருக்கிறது, சாக விரும்புகிறேன் என்கிறார்.  இது பற்றி நான் எத்தனை பக்கம் எழுதியிருப்பேன்?  உங்கள் மனதில் அதெல்லாம் உறைக்கவில்லையா?  முதலில் அவர் தன் பெண்ணுக்காக வாழ்ந்தார்.  பெண்ணின் படிப்புக்காக உழைத்தார்.  பிறகு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பேத்திக்காக தன் எல்லா நேரத்தையும் செலவிடுகிறார்.  65 ஆண்டு … Read more

குடும்பம், தனிச் சொத்து, அரசு

பேரன் பிறந்திருக்கும் சேதியை முகநூலில் அறிவித்திருந்ததற்கு 1200 பேர் விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள்.  அது இந்த சமூகத்தைப் பற்றிய என் புரிதலுக்கு உதவியது.  இந்த 1200 பேரில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்றோ, அல்லது, படித்தும் அதிலிருந்து எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் என்றோதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  ஒரு உயிர் இந்த பூமியில் தங்குவதற்காக வந்திருப்பது ஒரு கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.   ஆனால் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனின் அடையாளம் குடும்பஸ்தன் … Read more

always remember us this way…

எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இந்தப் பாடலை. எவ்வளவு கேட்டாலும் அலுக்காத பாடல். உயிரின் சிலிர்ப்பு. இந்தப் பாடல் இடம் பெற்ற படமான A star is born உம் எனக்கு மிகவும் பிடித்தமானது. https://www.youtube.com/watch?v=5vheNbQlsyU Lady Gaga – Always Remember Us This Way (from A Star Is Born) (Official Music Video) – YouTube

மூன்று ரவுடிகள்

என் மகன் கார்த்திக்குக்கு பையன் பிறந்திருக்கிறான். நேற்று ராம்ஜி வாழ்த்து சொன்னார். அவந்திகாவுக்குத்தான் இப்போது மூன்று ரவுடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்றேன். பாவம் சார் கார்த்திக், அவன் சாது பையன் ஆயிற்றே என்கிறார். எப்படி இருக்கு? என் பப்ளிஷரே என்னை ரவுடி என்று ஒத்துக் கொள்கிறார். ஏதோ கோபத்தில் ஏதாவது உளறியிருப்பேன், அதெல்லாம் ரவுடித்தனமா? நான் செய்யும் ரவுடித்தனமெல்லாம் நம் வடிவேலு சேஷ்டை மாதிரிதான். எல்லோரும்இப்போது என்னை தாத்தா என்று சொல்லும்போதுதான் பேஜாராக இருக்கிறது. சரி, கமலே … Read more