யூதாஸ் (5)

150 சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்த பாஸ்டன் பாதிரியின் முழுப் பெயர் ஜான் கேகன்.  அவர் சிறையில் சக கைதியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்டார்.  இது பற்றி டாக் பேசுகிறார். ”(எனக்கு) மாசிமோ ஸ்டான்ஸியோனேவின் குழந்தைகள் படுகொலை ஓவியம்தான் நினைவுக்கு வருகிறது. அவ்வோவியத்தில் ஒருவன் இரக்கமற்று குழந்தையின் மீது வாளைச் சொருக கை உயர்த்தி இருப்பான். குழந்தையின் தாய் போராடிக் கொண்டிருப்பாள். தரையில் ஏற்கனவே வெட்டப்பட்ட குழந்தைகளின் பிஞ்சு மணிக்கட்டுகள் கிடக்கும். வேதனையில் கதறிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் … Read more

யூதாஸ்: A devil in a midnight mass (4)

பாதிரியார் டாக்கிடம் கியாரா கேட்கிறாள், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாதிரிகள் எதற்கு என்று. டாக் ஒரு பதிலைச் சொல்கிறார். அதை ஷிட் என்கிறாள் கியாரா. பாதிரிகளால் அவள் அடைந்த அனுபவம் அப்படி. அந்தச் சம்பவங்களுக்காக ஒவ்வொரு பாதிரியும் இந்த பாஸ்டன் தெருக்களில் மண்டியிட்டு அமர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டு, இந்தப் பாடலைக் கேளுங்கள் என்று பின்வரும் பாடலைப் போடுகிறார். பில்லி டேலண்ட்டின் எ டெவில் இன் அ மிட்நைட் மாஸ். … Read more

யூதாஸ் நாவலை வாசிப்பது எப்படி? (3)

ஜூடும் கியாராவும் ஒருநாள் டாக்கைப் பார்க்கச் செல்கிறார்கள்.  டாக் ஒரு வயதான பாதிரியார்.  பார்க்கச் செல்லும் போது டாக்கின் இல்லத்தில் வெர்தியின் நபூக்கோ என்ற ஆப்பராவில் இடம் பெறும் எபிரேய அடிமைகளின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  டாக் தனது இறப்புத் திருப்பலியின் இறுதியில் இதை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் என்று கியாராவிடம் சொல்கிறான் ஜூட்.  அந்தப் பாடலைக் கேட்கும் போது கியாராவின் மனதிலிருந்த பாரம் இறங்குவது போல் தோன்றுகிறது.  இப்படியான பல உள்மடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது … Read more

வளன் அரசுவின் யூதாஸ் : என் வாசிப்பு அனுபவங்கள் (2)

நேற்று என் நித்திரை மயக்கத்தில் ஒரு பிழை நேர்ந்து விட்டது.  யூதாஸ் நாவலில் நான் மேற்கோள் காண்பிக்க நினைத்த பகுதியை விட்டு விட்டு வேறு ஒரு பகுதியைக் கொடுத்து விட்டேன்.  பாலத்துக்கு அடியில் தங்கியிருக்கும் ஜூட் என்பவனை கியரா மீண்டும் தற்செயலாக சந்திக்க நேரும் சந்தர்ப்பம் அது.  கென்மோர் (பாஸ்டன்) ரயில் நிலையத்திலிருந்து போலீஸால் விரட்டப்பட்டு வெளியே வருகிறாள் கியாரா. கடுமையான குளிர்.  குளிருக்கு இதமாக கொஞ்சம் விஸ்கியோ பிராந்தியோ அருந்தினால் தேவலாம்.  துணிப்பைக்குள் கையை விட்டுத் … Read more

வளன் அரசுவின் யூதாஸ் – சில அனுபவங்கள் (1)

பத்து மாதங்களுக்கு முன்பு வளன் எனக்கு அனுப்பியிருந்தான் – நீங்கள் இல்லாமல் இந்த நாவல் சாத்தியம் இல்லை என்ற குறிப்புடன்.   பிறகு நேரில் பார்க்கும் போது “இந்த நாவலை நான் உங்களுக்காகவே எழுதினேன்” என்றான்.  ஆனாலும் நான் ஔரங்ஸேபில் மூழ்கியிருந்த்தால் இப்போதுதான் படிக்க நேர்ந்த்து.  170 பக்கம் உள்ள இந்த நாவலைப் படிக்க இரண்டு மணி நேரம் ஆகியிருக்கலாம்.  ஆனால் நான் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அதே அளவுக்குத் தீவிரத்தன்மை கொண்ட இன்னொரு வேலையில் ஈடுபட மாட்டேன்.  … Read more

சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள்: ஸ்ரீவிஜி விஜயா

சாரு தமிழில் பரவலாக அறியப்பட்ட நவீன மற்றும் பின் நவீனத்துவ எழுத்தாளர். என்றாலும் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கிய வாசகப் பரப்பிலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் எழுத்துகள் நான் லீனியர் மற்றும் ட்ராஸ்கிரசிவ் ( transgressive) எழுத்து என்பதால் தமிழ் வாசகப் பரப்பில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்தவர் சாரு. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆழமாக வலியுறுத்திய சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக தமிழிலக்கிய உலகில் பார்க்கப்பட்டார். இதனால் பல இன்னல்களையும் இடையூறுகளையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். தவிர … Read more