விநாயகர் சதுர்த்தி

இந்து கடவுள்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் விநாயகர். அப்பனைப் போல் சுடுகாட்டில் இல்லாமல் குளத்தாங்கரையில் போய் அமர்ந்தவர் அல்லவா, யாருக்குப் பிடிக்காமல் இருக்கும்? ஸ்விக்கி மூலம் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இந்த டன்ஸோ இருக்கிறதே, அது ஒரு புரட்சி. நேற்று கூட தற்சமயம் கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீராம் டன்ஸோ மூலம் ஜார்ஜ் டவுனிலிருந்து மீன் தலைக் குழம்பு அனுப்பினார். அது ஒரு பெரிய கதை. டைனோசார் தலை சைஸ் இருந்தது. இன்று … Read more

விமர்சனத்தில் ஒரு இடம்!

நேற்று பிறந்த சிறுவர்களுக்கு நான் யார் என்று தெரியாது இல்லையா, அதனால் அவர்களுக்கு ஒரு விமர்சகனாகவும் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இதை அவர்கள் என் பயோடேட்டாவாகக் கருதாமல் ஒரு பாடத்திட்டம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது.  சர்வதேச இலக்கியம், இசை, நாடகம் குறித்து நான் எழுதியிருக்கும் ஏராளமான அ-புனைவு நூல்களை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன.  சமகாலத் … Read more

அலுப்பூட்டும் இலக்கிய சூழல்

உலகில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பலவற்றில் உங்கள் பெயர் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இனி அதை அப்படியே வைத்திருக்கவே அவர்கள் விரும்புவார்கள்.தனி ஒரு எழுத்தாளன், தான் மட்டுமே தன்னை இலக்கியத்தில் ஒரு இடத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு இடைவிடாத நிருபணங்களை தந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. காழ்ப்பு கொண்டவர்கள் அவனை எழுத்து சார்ந்து மதிப்பிடாமல், இப்படி இடுப்புக்கு கீழேயே தாக்கி கொண்டிருக்க இதுவே காரணம்.அதுவும் மிகக்குறுகிய ஜானரில் மட்டும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் வேறுவகை எழுத்தில் … Read more

இலக்கியத்தில் ஓர் இடம்!

“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா? … Read more

நிஜமான நான்…

ஒழுக்கத்துக்கும் நேரம் தவறாமைக்கும் நான் பேர் பெற்றவன்.  காலை ஏழு மணி என்றால் ஆறே முக்காலுக்கே போய் நிற்பேன்.  ஆனால் அந்த சாரு நிஜமான சாரு அல்ல.  சிறை வாழ்க்கையில் கிடைக்கும் ஒழுங்கு அது என்று இன்று புரிந்து கொண்டேன்.  காலை ஏழு மணிக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து விடுகிறேன் என்றேன்.  ஐந்து மணிக்கு ஹோமம்.  அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஏழுக்கு ஆஜராகி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.  ஆனால் உறங்குவதற்கே மூன்று மணி ஆகி விட்டது.  அனிருத் … Read more

கொண்டாட்டம்

ஒரே ஒரு பாடல் மக்களை எந்த அளவுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இந்தப் பாடலின் ஆடல் அசைவுக்குச் சொந்தக்காரரான ஜானி மாஸ்டரைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் கொரியாக்ராஃப் செய்த அரபிக் கூத்து போன்ற பாடல்களிலேயே ஜானி மாஸ்டரின் திறமை தெரிந்தது. இந்தப் பாடலுக்கு ஆடும் போது ஆடுபவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உச்சத்தில் சிரிக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். குறிப்பாக மூன்று தம்பிகள் ஆடுவது பிரமாதம். ஆடலின் அசைவுகளை … Read more