இலக்கியத்தில் ஓர் இடம்!

“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா? … Read more

நிஜமான நான்…

ஒழுக்கத்துக்கும் நேரம் தவறாமைக்கும் நான் பேர் பெற்றவன்.  காலை ஏழு மணி என்றால் ஆறே முக்காலுக்கே போய் நிற்பேன்.  ஆனால் அந்த சாரு நிஜமான சாரு அல்ல.  சிறை வாழ்க்கையில் கிடைக்கும் ஒழுங்கு அது என்று இன்று புரிந்து கொண்டேன்.  காலை ஏழு மணிக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து விடுகிறேன் என்றேன்.  ஐந்து மணிக்கு ஹோமம்.  அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஏழுக்கு ஆஜராகி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.  ஆனால் உறங்குவதற்கே மூன்று மணி ஆகி விட்டது.  அனிருத் … Read more

கொண்டாட்டம்

ஒரே ஒரு பாடல் மக்களை எந்த அளவுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இந்தப் பாடலின் ஆடல் அசைவுக்குச் சொந்தக்காரரான ஜானி மாஸ்டரைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் கொரியாக்ராஃப் செய்த அரபிக் கூத்து போன்ற பாடல்களிலேயே ஜானி மாஸ்டரின் திறமை தெரிந்தது. இந்தப் பாடலுக்கு ஆடும் போது ஆடுபவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உச்சத்தில் சிரிக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். குறிப்பாக மூன்று தம்பிகள் ஆடுவது பிரமாதம். ஆடலின் அசைவுகளை … Read more