ம்…

இன்று காலை ஆறரை மணிக்கு ஷுகர் டெஸ்டுக்கு ரத்தம் கொடுக்க பரிசோதனைச் சாலைக்குப் போனேன்.  ரத்தம் கொடுத்து விட்டு உடனடியாகக் காஃபி குடித்தேன்.  காலை உணவு கோதுமை உப்புமா சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் கொடுத்தேன்.  மாலை முடிவு தெரிந்தது.  ஷுகர் இல்லை.  ஆனால் ஷுகர் மாத்திரையை நிறுத்தினால் ஷுகர் ஏறுகிறது.  ஷுகரைக் கட்டுப்படுத்த காலையில் கோமிய மருந்தும் இரவில் அலோபதி மருந்தும் எடுத்துக் கொள்கிறேன். இன்று இரவு நண்பர்களுடன் பேசிக் … Read more

நெருங்குவதற்குத் தயக்கம்…

சற்று நேரத்துக்கு முன்னால் ஒரு நண்பர் பேசினார்.  ஒரு வாசகர் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் அந்த நண்பரிடம் கொடுத்திருக்கிறார்.  பணம் கொடுத்தவர் ஒரு தொழிலதிபர்.  ஏன், அவருக்கு என் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தெரியாதா என்று கேட்டேன்.  தெரியும், ஆனாலும் உங்களை நெருங்குவதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்திருக்கிறது என்றார் நண்பர்.  இப்படியும் பல வாசகர்கள் இருக்கலாம்.  அந்தத் தொழிலதிபர் மேலும் ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டாராம்.  பணம் கொடுக்காத … Read more

ஹம்மரும் ஜகுவாரும்…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலின் சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் பிரிவில் சுமார் இருபது பேரும், ஐம்பதாயிரம் பிரிவில் நான்கு பேரும், ஐந்து லட்சம் பிரிவில் ஒருவரும் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஐம்பதாயிரம் அனுப்பிய ஒரு நண்பர் தன் பெயரைக் குறிப்பிடவில்லை.  பெயரைக் குறிப்பிட்டால் நல்லது.  இவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் நீண்ட காலமாக என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.  புதிதாக ஒருவர் கூட பணம் அனுப்பி இந்த சிறப்புப் பதிப்புத் திட்டத்தில் இணையவில்லை என்பது … Read more

தமிழுக்குக் கிடைத்த கொடை

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலிருந்து ஒரு அரை நூற்றாண்டுக் காலம் ஐரோப்பாவில் நிலவிய அரசியல், சமூகச் சூழல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற தத்துவக் கோட்பாட்டை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  தத்துவம் மட்டும் அல்லாது எக்ஸிஸ்டென்ஷியலிஸம் தன் பாதிப்பை செலுத்திய துறைகள் இலக்கியம், ஓவியம் மற்றும் சினிமா.  அதற்குப் பிறகு வந்ததுதான் ஸ்ட்ரக்சுரலிஸம் என்ற அமைப்பியல்வாதம் மற்றும் பின்னமைப்பியல்வாதம்.  இதன் கலாச்சார வெளிப்பாடுதான் பின்நவீனத்துவம்.  பின்நவீனத்துவம் என்பது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் போல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தோடு முடிந்து … Read more