ஒரு சிறிய திருத்தம்…

சிறப்புப் பதிப்புக்கான திட்டத்தில் ஒரு சிறிய திருத்தம். ஐந்து லட்சம் பணம் கொடுத்து இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்ற திட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால், ஒருவர்தானே வழங்க முடியும்? மேலும், அந்த ஐந்து லட்சத்தைக் கொடுத்த நண்பருக்கு இந்தத் திட்டம் பற்றிய விவரமெல்லாம் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குக் கொடுக்கும் பிரதியில் இன்னார் வழங்கும் என்று அச்சிட்டிருக்கும் என்று நினைத்திருக்கிறார். இப்போதும் இனி வரும் காலத்திலும் வெளிவரும் எல்லா பிரதிகளிலும் இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்றுதான் … Read more

இது போதும்…

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும்.  இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.  சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணி.  இது போன்ற சேவை அடிப்படையிலான வேலைகளுக்கு ஊதியம் கம்மிதான்.  என்ன, இருபதாயிரம் இருக்குமா என்றேன்.  ஆமாம் என்றார்.  கூடவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு … Read more

நான் தான் ஔரங்ஸேப்… : நேச மித்ரன்

கற்பிதங்களின் பலிமேடை மீது மரச்சுத்தியலால் தட்டுதல் இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள் தான் தெய்வங்கள் ஆக்கப்படார்கள். எதிர்திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான் அவுரங்கசீப். ஒரே மொழி ஒரே மதம் மற்ற மதங்கள் யாவும் கீழானவைஎன்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் … Read more

கல்கியும் புதுமைப்பித்தனும் தமிழ்ச் சமூகமும்…

சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்ட புதினங்களைத் தமிழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  சட்டென்று நினைவுக்கு வருவது சாண்டில்யன், வே. கபிலன், கோவி. மணிசேகரன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி, ஒரே ஒரு சரித்திர நாவல் எழுதிய சுஜாதா.  இவர்களில் கல்கி மட்டுமே சூப்பர் ஸ்டார்.  அவருடைய பொன்னியின் செல்வன் அளவுக்கு வேறு யாரும் சுவாரசியமாக எழுதியதில்லை.  வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களில் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் சிலர் மட்டுமே.  பொதுவாக ஜனரஞ்சக எழுத்தைப் படிக்க விரும்பாத நானே அந்த நாவலை இரண்டு … Read more